Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நிரந்தர வாழ்க்கை
Posted By:sohailmamooty On 12/15/2009

melatonin and weed safe

melatonin and weed mixed read here

நிரந்தர வாழ்க்கை
.(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையட்டும், வீணும், அலங்காரமும், (அது) உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களிலும், பிள்ளைகளிலும் (ஒருவருக்கொருவர்) அதிகப்படுத்திக் கொள்வதும்தான்; (இந்நிலை) ஒரு மழையைப் போன்றாகும். (அதன்மூலம் முளைத்த) பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிகளை அதிசயத்தில் ஆழ்த்தியது; பின்னர், அது காய்ந்து விடுகிறது; (அப்போது) அதை மஞ்சளாகி விடுவதை நீர் காண்கின்றீர்; பின்னர், அது சருகுகளாகி விடுகின்றது (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது). மறுமையிலோ, (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் (சொற்ப) இன்பமேயன்றி வேறில்லை.

-அல்குர்ஆன் 57:20

பெண்கள், ஆண்மக்கள், பொன், வெள்ளிகளினால் சேர்த்து வைக்கப்பட்ட பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்ட குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் முத­ய) கால்நடைகள், வேளாண்மை ஆகிய (மனதுக்கு) ஆசையூட்டப்பட்டவற்றை நேசிப்பது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை (யாவும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே; அல்லாஹ்வோ  அவனிடத்தில் (நிலையான) அழகிய திரும்பிச் செல்லுமிடம் உண்டு.

-அல்குர்ஆன் 3:14

செல்வமும், ஆண்மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரமாகும்; மேலும், என்றுமே நிலையான நற்கருமங்கள் தாம், உம் ரட்சகனிடத்தில் நற்கூ­யால் மிகச் சிறந்ததாகும்; (மறுமையை) ஆதரவு கொள்வதற்கும் மிகச் சிறந்ததாகும்.

- அல்குர்ஆன் 18:46

நபி (ஸல்) அவர்கள் மேடையில் (மிம்பரில்) உட்கார்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நங்களும் உட்கார்ந்தோம். அப்போது அவர்கள், எனக்குப் பின் உங்களிடையே உலக வசதி அதிகமாக்கப்படுவதைக் கண்டு நான் பயப்படுகிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி­) நூல்கள்: புகாரி, முஸ்­லிம்

இறந்தவரை மூன்று விஷயங்கள் பின்தொடர்கின்றன. அவை; அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கிவிடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் செயல் தங்கிவிடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி­), நூல்கள்: புகாரி, முஸ்­லிம்

மறுமை விஷயத்தில் இவ்வுலகம் என்பது, உங்களில் ஒருவர் தன்விரலை கட­ல் வைத்து, அதில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதைப் பார்ப்பது போல் தானே தவிர வேறில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் (ர­லி), நூல்: முஸ்­லிம்
 

 




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..