Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மௌனகுரு - சிரிக்க சிந்திக்க
Posted By:Hajas On 12/17/2011

 

மௌனகுரு ஒரு சிறப்பு பார்வை....

எத்தனைப்பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அமைதியாக இருப்பவர்களையும், அமைதியாலே மக்களுக்கு போதனை செய்பவர்கள்தான் மௌனகுரு ‌என்று அழைப்பார்கள். அவர்கள் செயல்பாடு பேச்சில் இருக்காது. செயலில்தான் இருக்கும்.

ஆனால் எதுவும் சொல்லாது, எதையும் செயலில் காட்டாது நமது இந்தியாவை ஆட்சி செய்கிறார் ஒரு மௌனகுரு அவரைப்பற்றிய வேதனையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு பதிவுதான் இது.

பொறுமை.. பொறுமை எதுக்காக படபடப்பாக பேசுறீங்க... அமைதியா இருங்க... இதோ நான் 7, 8 வருஷமா இப்படித்தானே இருக்கேன் ஏன் என்னை பார்த்து கத்துக்கங்க... எதுக்கும் அவசரப்படக்கூடாது என்ன நான் சொல்றது...!
என்னுடைய சாதனைகளை சொல்றேன் கேளுங்க...!
வடஇந்தியாவில் எவ்வளவு மதக்கலவரம் நடந்துச்சி நான் ஏதாவது வயைத்திறந்து கருத்தோ... கண்டனமோ.... சொன்னேனா..?

பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் செஞ்சாங்க அதைப்பத்தி நான் ஏதாவது வயைத்திறந்தேனா..?

மும்பை தாஜ் ஓட்டல் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துனாங்க... அப்ப ஏதாவது நான் வாயை திறந்து பேசினேனா..?

தமிழ்நாட்டுக்கும் கர்நாடாகாவிற்கும் காவிரிப்பிரச்சனை நடந்தது அதை பத்தி நான் ஏதாவது கருத்து சொன்னேனா, இல்ல அதுல தலையிட்டேனா...?

இருங்க பாஸு.. நான் இன்னும் முடிக்கல....

அப்புறம் ஆந்திராவில எவ்வளவு நாளா தனிமாநிலம் கேட்டு அடம்பிடிச்சிக்கிட்டு இருக்காங்க... அவங்க எவ்வளவு போராட்டம் பண்ணாலும், அரசுக்கு எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், தேவையில்லாத நான் தலையிட்டு மத்தவங்கள பகைச்சிக்க மாட்டேன்.


அவ்வளவு ஏன்... இலங்கையில் லட்சக்கணககான தமிழர்களை கொன்று குவிச்சாங்க... நாட்டில் இருந்து எத்தனையோ போர் சொன்னாங்க.. கடிதமெல்லாம் போட்டாங்க... அதைப்பத்தி நான் ஏதாவது வாய்திறந்தேனா..?


இப்ப..! இந்த கூடங்குள பிரச்சனையிலும், முல்லைப்பெரியாறு பிரச்சனையிலும் நான் தலையிடவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கும் எனக்கும் என்ன இருக்கிறது. நான் இருப்பது டெல்லியில் நீங்க இருப்பது தமிழகத்தில் அது உங்க பிரச்சனை..

நீங்க எப்படிவேண்டுமானாலும் அடிச்சிக்கங்க ஏது வேண்டுமானாலும் பண்ணிக்கங்க நான் மட்டும் வரவும் மாட்டேன் வாயையும் திறக்க மாட்டேன்.


இவ்வளவும் சொல்லியும் நீங்கதான் பிரதமரு, நீங்க தான் தலையிடனும் அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு வந்தீங்கன்னா அவ்வளவு தான். அப்புறம் நான் ஏதாவது நாட்டுக்கு சுற்றுப்பயணம் போயிடுவேன்.


நான் அழுகிறேனா.. அது தூசு தம்பி.. நான் எதுக்கும் அசரமாட்டேன்.

எனக்கு இலங்கைத் தமிழர்களை விட அந்த நாட்டு ஆட்சியாளர்கள் மீதுதான் எனக்கு அக்கறை. மேலிடத்தில் இருந்து அதான் எனக்கு உத்தரவு... மேலிடம்மன்னா யாருன்னு கேட்கிறீங்களா..?

என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவங்க கூட நான் எது சொன்னாலும் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க... கேரளா காங்கிரஸ் காரனும், ஆந்திரா காங்கிரஸ் காரனும் எப்படிங்க என் பேச்சை கேட்பாங்க...

இந்த ராஜா, எப்போ என்ன 2ஜி கேஸ்ல மாட்டிவிடுவான்னு நானே பயந்துகிட்டு இருக்கேன். இதுல முல்லை பெரியாறு... கூடங்குளம் ன்னு சொல்லிக்கிட்டு.. போங்கய்யா போங்க...

பாருங்க தம்பி, நான் யார் பேச்சுக்கும் போக மாட்டேன். என்னையும் எந்த விளையாட்டுக்கும் கூப்பிடாதீங்க...

பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் அப்படின்னு எதுல வேணுமனாலும் என்னைப்பத்தி போடுங்க அதைபத்தியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். நான் ரொம்ப நல்லவன். இது என்தாயி சோனியா ஜி-க்கு தெரியும்.


இதோ பாருங்க கடைசியா நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். சோனியா ஜீ சொல்றதை மட்டும் செய்யறுதுக்கு மட்டும்தான் நான் ஆளு.. உங்க இஷ்டத்துக்கு கேட்டுகிட்டே போன எப்படி..? கேட்டுக்கங்க அதைப்பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை.

பாருங்க தல... நீங்க ஆட்சி செய்யறது எங்கள மாதிரி பொது மக்களுக்கும், நாட்டு இருக்குற ஏழைகளுக்கும் தான் அதை மட்டும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க...

ஒரு பிரமதரா இருந்துகிட்டு நாட்டு நடக்கிற அக்கிரமங்களையும், அநியாயங்களையும், ஏழைகளுடைய வாழ்வாதாரங்கள் பறிபோகரதையும் பார்த்துக்கிட்டு இப்படிஇருந்தா நாம் எப்படி முன்னேறறுது....
 



Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..