Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை...
Posted By:peer On 2/12/2012

is there a pill for abortion over the counter

where can i buy the abortion pill over the counter

அப்போது எனக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும் என நினைக்கிறேன். சதா காலமும் மூக்கு ஒழுகிக்கொண்டே இருக்கும். அதனால் எனக்கு மூக்கரையான் என்ற பட்டப்பெயரும் உண்டு. எனது சமகாலத்தவர்கள் மத்தியில் நான் ஒரு சவலைப்பிள்ளை. பொருட்டாகவே கருதமாட்டார்கள் எனினும் என்னை ஒரு போடு கருப்பட்டியாக அவ்வப்போது அவர்களுக்கு தேவைப்படும்போது பயன்படுத்திகொள்வார்கள்.


எனக்கு ஜஹாங்கீர் அலி, அமீர்சுல்தான் என இரண்டு காக்காமார்கள். இருவரும் ஊமை சேட்டைகள் செய்வதில் ஜெகதள கில்லாடிகள். பைத்துசலாம் பள்ளிக்கு அருகேயுள்ள என் பூர்விக வீட்டிற்கு எதிரே அந்த காலகட்டத்தில் கொடிக்காணி அப்பாவுக்கு ஒரு பெரிய தோட்டம் உண்டு. அந்த தோட்டத்தை சுற்றி ஏழடி உயரத்துக்கு ஒரு காம்பவுண்ட். அந்த தோட்டத்தில் கத்தரிக்காய், தக்காளி, சீனி மிளகாய் கொத்து கொத்தாய் தொங்கும். தோட்டத்தை சூறையாட எனது காக்கா ஜஹான்கீர், அமீர்சுல்தான் இருவரும் திட்டம் தீட்டினர்.


தோட்டத்தின் உள்ளே செல்லவேண்டும் என்றால் ஒரு ஆளின் தோளின்மேல் சவாரிசெய்துதான் போகமுடியும். காவலுக்கு என்னை நிறுத்தினால் காரியம் கெட்டுபோய்விடும் என முடிவு எடுத்து அமீர் சுல்தானை காவலுக்கு நிறுத்திவிட்டு இந்த எடுபுடியும் ஜஹான்கீர் அலியும் உள்ளே சென்றோம்.
தக்காளியை வேட்டையாடி சாரத்தில் சேகரித்துகொண்டு இருந்தோம். உள்ளே வேட்டை நாய்கள் இருக்கும் செய்தி எப்படியோ ராமசந்திரபிள்ளை என்ற கொடிக்கானியாப்பா கணக்கப்பிள்ளை காதுக்கு எட்டிவிட்டது. கதவை திறந்து உள்ளே வந்தார். இருவரின் சாரத்தையும் சேகரித்த தக்காளியோடு உருவினார். கூலாக கதவை பூட்டிவிட்டு போய்விட்டார்.


காவலுக்கு இருந்த என் காக்கா அமீர்சுல்தான் சிட்டாய் பறந்துவிட்டான். கண்ணன் பாஞ்சாலிக்கு உதவியதுபோல் காக்கா அமீர்சுல்தான் சாரத்தோடு வருவான் என வழி மீது விழிவைத்து இரண்டுமணி நேரம் தோட்டத்தினுள் நாங்கள் இருவரும் ஆதி மனிதனாய் அமர்ந்து இருக்கிறோம். வருவதற்குரிய எந்த அறிகுறியும் தெரியவில்லை.


என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருக்கும் வேளையில், காம்பவுண்ட் எதிரே இருக்கும் எனது வீட்டு மாடியில் எனது தாயார் துணியை காயப்போட வந்தார்கள். சாச்சி, சாச்சி என தொண்டைகிளிய என் காக்கா கத்தினான். முண்டக்கட்டயாய் எங்கள் இருவரையும் பார்த்த என் தாயாருக்கு அழுவதா சிரிப்பதா எனப்புரியவில்லை. வெளியே சொன்னால் வெட்கம். யார் கண்ணிலும் படாமல் இரண்டு சாரம் ஏணியுடன் வந்து எங்களை மீட்டெடுத்தார்கள். அதற்கு அப்புறம் என்ன! பிரம்பு எங்கள் இருவரின் முதுகு கால்களில் சரமாரியாக விளையாடியது. தழும்புகள் மறைய பத்து நாட்கள் ஆனது. - Masoor Salahudeen




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..