Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சுய தொழில்கள்-02: சுய தொழில்கள்: வெள்ளாடு வளர்ப்பு
Posted By:peer On 9/19/2012

நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.கொஞ்சம் சிரமமான தொழில் என்றாலும் செல்வம் கொழிக்கும் தொழில் இது. சொந்த இடம், கால்நடைத் தீவனம் உற்பத்தி செய்ய வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு ஏற்ற தொழில் இது. நன்கு திட்டமிடல், நோய் தடுப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் இது ஒரு லாபகரமான தொழில் தான்.

வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

 யார் தொடங்கலாம்?

  • நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
  • மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்  

நன்மைகள்

  • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
  • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
  • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
  • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
  • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
  • நல்ல எரு கிடைக்கிறது.
  • வருடம்முழுவதும்வேலை  

 வெள்ளாட்டு இனங்கள்

 

சிறந்த இந்திய இனங்கள்

  • ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி
  • பீட்டல் - பஞ்சாப்
  • பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்
  • தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா
  • சுர்தி - குஜராத்
  • காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர்
  • வங்காள ஆடு - மேற்கு வங்காளம்

இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்

  • அங்கோரா,
  • ஆல்பைன்,
  • சேனன்,
  • டோகன் பர்க்,
  • ஆங்ளோ நுபியன்  

 

வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்

ஜமுனாபாரி.

  • நல்ல உயரமானவை
  • காதுகள் மிக நீளமனவை
  • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
  • கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.
  • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
  • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
  • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்  

 
தலைச்சேரி / மலபாரி

  • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
  • 2-3 குட்டிகளை போடும் திறன்
  • கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.

 

 போயர்

  • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
  • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
  • கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ. 
  • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்  

  

வெள்ளாடுகளை தேர்வு செய்தல்

பெட்டை ஆடுகள்

  • 2-3 குட்டிகள் ஈனும் திறன்
  • 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை

கிடாக்கள்

  • தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
  • 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
  • நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
  • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து  

  

தீவனப் பாரமரிப்பு

  • வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
  • கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
  • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
  • ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
  • அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.

  

 
குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37 15 52 35
பருப்பு வகைகள்
15 37 --- ---
புண்ணாக்கு
25 10 8 20
கோதுமை தவிடு
20 35 37 42
தாது உப்பு
2.5 2 2 2
உப்பு
0.5 1 1 1
மொத்தம்
100 100 100 100

 

  • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
  • வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
  • சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
  • தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
  • அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்

  

இனபெருக்கப் பாரமரிப்பு.

  • இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
  • வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
  • சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
  • சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
  • சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
  • சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
  • சினை காலம் 145-150 நாட்கள்.  

  

குடற் புழு நீக்கம்

  • ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
  • சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
  • சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
  • குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்  

 

தடுப்பூசிகள்

  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
  • துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
  • கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்.  

 

 

 

கொட்டகை பாரமரிப்பு

 

1.ஆழ்கூள முறை

  • தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
  • இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
  • ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்

 

2.உயர் மட்ட தரை முறை

  • தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
  • ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்        

                  

 

 

 

வளர்ப்பு முறைகள்

 

1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.

  • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.

2.கொட்டகை முறை.

  • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
  • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்  

 

 வெள்ளாடு காப்பீடு திட்டம்

  • நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
  • விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்.  

 

பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பு

ஆட்டின் விலை ரூ.50 ஆயிரம்

 

பாலமேடு: பணம் கொட்டும் "ஜமுனாபாரி' ஆடுவளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானைபூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின்நீளம் ஒரு அடி; 10 இஞ்ச் அகலம். அழகான தோற்றம் கொண்டது. ஆண், ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண், ஆடுகள் நான்கடி உயரமும் சராசரியாக வளரக்கூடியது. வளர்ந்த ஆட்டின் எடை 80 கிலோ இருக்கும். ஆட்டின் கறி, மிருதுவாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் மாமிச பிரியர்களுக்கு ஜமுனாபாரி வரப்பிரசாதகமாக கருதப்படுகிறது. ஜமுனாபிரியாணி: முன்னணி அசைவ உணவகங்களில் வான்கோழிபிரியாணிக்கு தனி மவுசு உண்டு. இவ்வரிசையில்ஜமுனாபாரியும் இடம் பிடித்துள்ளது.

முன்னணி அசைவ உணவகங்களில் ஜமுனாபாரி மாமிச வகைகளும் இடம் பெறுகிறது. ஒரு கிலோ தனிக்கறி 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கறியை விலைக்கு வாங்குவதைவிட ஆட்டுக்குட்டிகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்ப்போருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  ஏற்றுமதிக்கு உகந்தது:ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட ஜமுனா ஆட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் வளர்க்கப்படும் ஆடுகள், சென்னை சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஆட்டின் கறியை பதப்படுத்தி "டின்'களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். பண்டிகை காலங்களில் கறியும், பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் அதிக புரதச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலை கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் வளரும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

ஈத்துக்கு மூன்று குட்டி:

பாலமேட்டை சேர்ந்த ஜமுனாபாரி பண்ணை மேலாளர் பட்டுராஜன், ஆடு வளர்க்கும் ராஜேந்திரன் (45) கூறும்போது, ""ஜமுனாபாரி ஆடுகள் ராஜஸ்தானில் அதிகளவு வளர்கிறது. அதிக உஷ்ணத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனால், இதில் நோய்எதிர்ப்பு அதிகம். கறியும், பாலும் வாரம் தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை வளர்க்கும். ஒரு ஈத்துக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். 25 நாள் குட்டி ஒன்றின் விலை 6,000 ரூபாய். கருவுற்ற ஆட்டின் விலை 20 ஆயிரம் ரூபாய். பாசிப்பயறு, துவரை, உளுந்து தூசி மற்றும் கடலை புண்ணாக்கு உணவாக வைக்கப்படுகிறது. வியாபார நோக்கமின்றி சொந்த உபயோகத்துக்காகவளர்க்கிறோம்,'" என்றனர். விவரங்களுக்கு பட்டுராஜன்  மொபைலில் (97866 90370) தொடர்பு கொள்ளலாம்.

 

ஆண்டுக்கு இரண்டு ஈத்து ஈத்துக்கு இரண்டு குட்டிகள்

வான்கோழி, காடை, வென்பன்றி, முயல் கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும் நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.  ஏறத்தாழ நம் ஊர் வெள்ளாடுகளைப் போன்ற தோற்றம். ஆனால், உயரம் மட்டும் கொஞ்சம்குறைவு. முழுவெள்ளை மற்றும் முழுகருப்பு என இரண்டு நிறங்களில் இருக்கும் இந்த ஆடுகளின் காது, கண், கால் என்று சில இடங்களில் மட்டும் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில்பரஸ்பரம் மாறிஇருக்கின்றன.  ஆடுகளைக் கொட்டிலிருந்து மேய்ச்சலுக்காகத் திறந்து விட்ட சுந்தர்ராஜன். “பெங்கால் கருப்புன்ற வகை ஆட்டுக்கும், ஆஸ்டின் வெள்ளைன்றஆட்டுக்குமான கலப்பின வகை இது. நம்ம ஊரு செம்மறி ஆட்டை வளர்க்கற மாதிரி மேயவிட்டும் வளர்க்கலாம். வெள்ளாடு மாதிரி கொட்டில்ல அடைச்சு, தீவனம் கொடுத்தும் வளர்க்கலாம். ஆக, எல்லா வகையிலும் செளரியமானது இந்த ஆடு. பெரும்பாலும் இதை அழகுக்காகத்தான் வளர்க்கறாங்க. நானும் அப்படித்தான் வாங்கிட்டு வந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன ஒரு தடவை சந்தைக்குப் போயிருந்தப்ப, ஒரு வியாபாரி இந்த ஆட்டை கொண்டு வந்திருந்தார். பாக்கறதுக்கு நல்ல ஜாதி நாய்க்குட்டி மாதிரி இருந்துச்சு. சரி பேத்தி விளையாடறதுக்கு ஆகட்டுமேனு ஐநூறு  ரூபாய்க்கு வாங்கினேன்.




சுய தொழில்கள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..