Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   Career Counselling   Technology
  Power of Creator   Religious   Moral Story
  Medical   Kids   Sports
  Quran & Science   Politics   Poetry
  Funny / Jokes   Video   Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
  Others   சுய தொழில்கள்
 
வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 3)
Posted By:peer On 5/24/2013

நம்ம ஊர் பஸ் ஸ்டான்ட்க்கு எதித்தார்போல் ரோட்டுக்கு மேல் பக்கம் ஒரு நாட்டு மருந்து கடை உண்டு. அந்த கடையில் நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சும் பல மூலிகைகள் கொண்ட பலமணக்கட்டு கிடைக்கும். அந்த கடைக்கு தெற்குப் பக்கம் லெப்பைவளவுத்தெருவைச் சார்ந்த எனது வகுப்புத்தோழன் கனியுடைய (தற்போது ஜூபைலில் உள்ள சவூதி கேட்டரிங் அன்ட் காண்ட்ராக்டிங் கம்பெனியில் பணி புரிகிறான்) ...வாப்பா அவர்களால் நடத்தப்பட்ட எஸ்.எம்.கே. சைக்கிள் மார்ட். பின்னர் அந்த கடை செய்யது ஸ்டோருக்கு வடக்குப் பக்கம் உள்ள கடைக்கு மாற்றப்பட்டது. இப்போது அந்த இடத்தில் நம்ம ஊரின் திமுக பிரமுகர், தலித் சகோதரர் இ.வேலு வுக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. எஸ்.எம்.கே சைக்கிள் மார்ட் உரிமையாளர் மற்ற வாடகைக் கடை உரிமையாளர்களை விட சற்று வித்தியாசமானவர். தனது கடை சைக்கிள்களை தனது சொந்த குழந்தைகளைவிட அதிகம் கவனமாக பராமரிக்கக்கூடியவர். சிறியவர்களுக்கு கண்டிப்பாக சைக்கிள் கிடையாது. யார் வாடகைக்குச் சைக்கிள் எடுக்கச் சென்றாலும் பல சரத்துக்கள் இருக்கும். 'கல், முள் கண்டா இறங்கு. தண்ணியை கண்டா தூக்கு'. அதிகம் தூரமான பகுதிகளுக்கு குறிப்பாக கட்டளை, ஆவரந்தளை, புலியூர்க்குறிச்சி, வடுகீச்சிமதில், சிறுமுளஞ்சி, பெருமுளஞ்சி போன்ற முட்கள் நிறைந்த பகுதிகளுக்கு சைக்கிள்கள் கொடுக்கப்படுவதில்லை.

பஸ்ஸ்டான்ட்டு கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடத்தில் லெப்பைவளவைச் சார்ந்த எனது கல்லூரித்தோழன் பீர்சாகிப் உடைய வாப்பா, சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடை வைத்திருந்தார். புதிய சைக்கிள் உட்பட சைக்கிளுக்குத் தேவையான அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ்களும் அந்த கடையில் கிடைக்கும். அத்தோடு சில எலெக்ட்ரிக் பொருட்களும். இப்போதும் அந்த கடையில் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் சாமான்கள் விற்கப்படுகிறது. அதனை நடத்துவது எனது பள்ளித் தோழன் சார்லஸ் அவனது குடும்பத்தினர்.

ஜசிஎஸ் காப்பித்தூள் கடைக்கு வடக்கு பக்கத்து கடையில் 7வது தெரு மணியாரப்பிள்ளை ஷாகுல்ஹமீது காக்கா அவர்கள் சைக்கிள் மெக்கானிக்கல் ஷாப் வைத்திருந்தார்கள். அவர்கள், மற்றும் அவர்களது தம்பி சாகிப் காக்கா ரெண்டு பெருமே நல்ல சைக்கிள் மெக்கானிக்குகள். பின்னர் அந்த மெக்கானிக்கல் ஷாப் நபீலா கம்யூனிகேஷன் கடைக்கு அடுத்த வடக்கு பக்கத்து கடையில் இயங்கியது.

நம்ம பைத்துஸ்ஸலாம் முகநூல் குழும உறுப்பினர் அன்சர்தீன் அவர்களின் வாப்பா செட்டிலெப்பை தாவூத் அவர்களின் கடை தற்போதைய நூர் காம்ப்ளக்ஸிற்கு வடக்குப் பக்கம் உள்ள ஒரு சிறிய இடத்தில் நடந்தது.

அதற்குட் வடக்கே தற்போதைய நவாப் ஸ்வீட் ஸ்டால் இருக்கும் இடத்தில் ஜீனத் சைக்கிள் மார்ட் என்ற வாடகை சைக்கிள் கடை இருந்தது. இந்த கடையில் அதிகம் சின்ன சைக்கிள் (கட்ட சைக்கிள்கள்) வாடகைக்குக் கிடைக்கும். எங்கள் காலத்து சிறுவர்களின் சைக்கிள் கற்றுக் கொள்ளும் ஆசையை பூர்த்தி செய்ததில் அதிகம் பங்கு இந்த கடைக்கு உண்டு. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)


 

 

Jahir Hussain  யார் வாடகைக்குச் சைக்கிள் எடுக்கச் சென்றாலும் பல சரத்துக்கள் இருக்கும். 'கல், முள் கண்டா இறங்கு. தண்ணியை கண்டா தூக்கு'. அதிகம் தூரமான பகுதிகளுக்கு குறிப்பாக கட்டளை, ஆவரந்தளை, புலியூர்க்குறிச்சி, வடுகீச்சிமதில், சிறுமுளஞ்சி, பெருமுளஞ்சி போன்ற முட்கள் நிறைந்த பகுதிகளுக்கு சைக்கிள்கள் கொடுக்கப்படுவதில்லை. //// கடுமையா காலம்
 
Si Sulthan எஸ்.எம்.கே சைக்கிள் மார்ட் உரிமையாளர் மற்ற வாடகைக் கடை உரிமையாளர்களை விட சற்று வித்தியாசமானவர். தனது கடை சைக்கிள்களை தனது சொந்த குழந்தைகளைவிட அதிகம் கவனமாக பராமரிக்கக்கூடியவர். சிறியவர்களுக்கு கண்டிப்பாக சைக்கிள் கிடையாது. யார் வாடகைக்குச் சைக்கிள் எடுக்கச் சென்றாலும் பல சரத்துக்கள் இருக்கும். 'கல், முள் கண்டா இறங்கு. தண்ணியை கண்டா தூக்கு'. அதிகம் தூரமான பகுதிகளுக்கு குறிப்பாக கட்டளை, ஆவரந்தளை, புலியூர்க்குறிச்சி, வடுகீச்சிமதில், சிறுமுளஞ்சி, பெருமுளஞ்சி போன்ற முட்கள் நிறைந்த பகுதிகளுக்கு சைக்கிள்கள் கொடுக்கப்படுவதில்லை. ///// சைக்கிள்கள் புத்தம் புதிதாக இருக்கும் . இவரிடம்தான் நான் டூட்டிக்குபோக (சைட் அடிக்க) தினமும் சைக்கிள் எடுப்பேன். தினமும் கல்லிலும், முள்ளிலும் ஓட்டுவேன்.. ஆனால் ஒருதடவைகூட பஞ்சரானதில்லை..வருசக்கணக்காக அவரிடம் நான் தினமும் வாடகைக்கு எடுத்திருந்தாலும் ஒருமுறைகூட அவர் சைக்கிளை நான் கையாளும் விதத்தை அவர் பார்த்ததில்லை.. பார்த்திருந்தால் ஹார்ட் அட்டாக் அவருக்கு வந்திருக்கும்.
 
 
 

 



 




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
11/16/2018 3:27:47 PMகுழந்தைகள் தின நினைவலைகள்: ஏர்வாடி பொட்டைப் பள்ளிக்கூடம்peer
9/14/2018 6:00:03 AMமத்தியாஸ் மருத்துவமனையும், ஏர்வாடி மக்களும்..peer
9/14/2018 5:58:57 AMசூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட ஐந்து நன்மைகள்.peer
9/14/2018 5:55:22 AMசைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகள்peer
9/7/2018 4:37:45 PMகூட்டுக் குடும்பம். - யதார்த்தமான உண்மைகள்...peer
4/23/2018 2:10:06 PM25 வருடங்களுக்கு முன்peer
2/5/2018 11:48:36 AMகிங்ஸ் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய நினைவுநாள் (Photos)peer
2/5/2018 11:39:57 AMமலரும் நினைவுகள்peer
2/1/2018 11:51:22 PMடைனமோ லைட்டும் சைக்கிள் தலைமுறையும்....peer
1/14/2018 8:27:32 AM1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது..Hajas
12/15/2017 11:56:08 PMமன்னன் சேட் - திரு . K . S . அஹமது முஹைதீன்peer
8/23/2017 2:26:01 AMநம்பியாற்று நினைவுகள்....- கவிதை 2Hajas
8/21/2017 8:14:35 AMநம்பியாறு நினைவுகள் - கவிதைHajas
2/9/2017 11:55:33 PMஏக்கம். ஏக்கம். மீண்டும் வருமா?..............Hajas
9/25/2016 3:04:59 PMஅந்த காலம்.........!peer
9/18/2016 11:51:51 AMமறக்க முடியாத மறைந்து போன குழந்தை பருவ விளையாட்டுக்கள்!!!peer
7/15/2015 7:04:16 AMநான் ஒரு கிராமத்துச்சிறுவன்:Hajas
6/24/2015 2:51:01 AMகலங்கி!peer
6/24/2015 2:46:06 AMசெக்கச் சிவந்த நாவுகள் எங்கே?peer
6/24/2015 2:36:26 AMதிரும்பிப்பார்க்கிறேன்peer
6/24/2015 2:29:02 AMமறக்க முடியுமா இந்த வீட்டை?peer
4/26/2015 5:13:03 AMவவ்வா பாலம்!Hajas
1/13/2015 3:17:23 AMதின்னைகள் பற்றி ஏர்வாடி பீர் முஹம்மதுHajas
1/9/2015 5:12:47 AMநினைவுகள்" - கண்ணாமூச்சிHajas
11/22/2014 12:38:03 AMஏர்வாடி பாலம்: என்றும் மறையாத நினைவுகள்peer
11/22/2014 12:13:20 AMமதங்கள் கடந்த மனிதநேயம் இதுவே எங்கள் ஏர்வையின் அடையாளம்.peer
11/22/2014 12:01:50 AMவாய்க்கால் நீர்.peer
11/21/2014 11:16:08 PMசொல்லி அடிச்ச கில்லி எங்கே?peer
11/21/2014 3:09:36 PMஎம்ம்மோ! பச்ச வேணுமா? பச்ச பச்ச .....peer
11/21/2014 1:10:56 PMநம்பியாற்றில் வெள்ளம்...peer
10/19/2014 12:25:27 PMநினைத்துப்பார்க்கின்றேன் மனசெல்லாம் மகிழ்வாய் இருக்கு ...peer
10/19/2014 10:39:44 AMடோனாவூர் டாக்டரம்மா பொன்னம்மாள்peer
6/25/2014 3:56:00 AMசைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10)Hajas
6/25/2014 3:50:15 AMவாடகை சைக்கிள்களுக்கும் ஸ்பான்பர்...! (கட்டுரைத் தொடர் பாகம் - 9)Hajas
6/25/2014 3:43:57 AMவாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை ( பாகம் - 8)Hajas
6/25/2014 3:39:28 AMவாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் 7)Hajas
6/25/2014 3:30:57 AMவாடகை சைக்கிள் ( தொடர் கட்டுரை - பாகம் - 6)Hajas
6/9/2014 1:34:14 PMஊசி பொத்தை.- நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 1Hajas
6/9/2014 1:31:21 PMநம்பி மலை - நமது ஊரை சுற்றியுள்ள இடங்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்-பாகம் 2Hajas
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 5)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 4)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 2)peer
5/24/2013வாடகை சைக்கிள் (தொடர் கட்டுரை - பாகம் 1)peer
4/8/2013கலிங்கிnsjohnson
3/19/2013என் ஊர் - பாசத்துல செழிப்பான பூமி !peer
3/17/2013டாஸ் போடுறதுக்கு எவன்ட்டயாச்சும் காசு இருக்காடா..?peer
3/17/2013வாராதோ அந்த நாட்கள்!!!peer
3/17/2013இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ?peer
3/17/2013என்ன அழகு எத்தனை அழகு.. ஏர்வாடியின் பேரழகு (கவிதை)peer
2/25/20131962 - குர்ஆன் ஓதியவர்களுக்கு பரிசுகள்peer
1/13/2013கம்ஸ்......peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (முதல் பரிசை வென்ற கட்டுரை)peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)peer
1/13/2013நமது ஊர் ஏர்வாடி (மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை))peer
1/13/2013ஏர்வாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிpeer
7/17/2012திருக்குறுங்குடி - கார்த்திக் முத்துவாழிpeer
4/24/2012யாராரோ! இந்த கோவிலுக்குள்ள.. நாங்கதான் சிறு பாப்பாத்தி பொண்ணு..!peer
4/24/2012பனங்கிழங்கு, பனங்கிழங்கு, நெல்லிக்காய், கொய்யாப்பழம் மாழ்பழம், சீதாப்பழம்..peer
4/8/2012ஏர்வாடி பாலம் / பழைய ஞாபகங்கள்peer
3/21/2012ஆரஞ்சு மிட்டாய்peer
2/19/20121979: நம்பித்தலைவன் பட்டயம் சைக்கிள் ரேஸ்peer
2/12/2012தோப்பும் ப‌ட்ட‌மும்peer
2/12/2012பழைய மாணவர்கள் சங்கம்peer
2/12/2012த‌க்காளிப‌றிக்க‌ப் போய் சார‌த்தை ப‌றிக்கொடுத்த‌ க‌தை...peer
2/12/2012அந்த‌ நாள்.... ஞாப‌க‌ம்... நெஞ்சிலே... ந‌ண்ப‌னே, ந‌ண்ப‌னே...peer
2/12/2012ஒருமுறை பெருநாள் இரவு...peer
2/11/2012இளமைக்கால விளையாட்டுகள்peer
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..