Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அமெரிக்கர்களின் அடங்காத ஆணவம்!
Posted By:nsjohnson On 12/26/2013 9:08:04 PM

அமெரிக்கர்களின் அடங்காத ஆணவம்!

Posted by sambala87(சூரியன்) on February 5, 2011

உலக போலீஸ்காரனாக தன்னைக் காட்டிக் கொண்டு சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த அமெரிக்காவின் ஆணவத்திற்கு “விக்கிலீக்ஸ்” இணையதளம் கொடுத்த மரண அடியிலிருந்து இன்னமும் அந்த நாடு மீளாதபோதிலும், அந்நாட்டவர்களின் ஆணவம் இன்னும் குறையவில்லை என்பது கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

” உலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நாங்கள் உளவு பார்த்து அவர்களை எங்களது கட்டளைக்கு ஏற்ப ஆட்டுவிப்போம்.ஆனால் எங்களை யாரும், எந்த நாடும் கேள்வி கேட்க கூடாது அல்லது கேட்கவும் முடியாது. அதேப்போன்று எங்களது அரசு நடவடிக்கைகளையும் யாராலும் சரியாக உளவு பார்க்க முடியாது…!” என்றெல்லாம் ஏக திமிர்த்தனத்துடனும், சண்டித்தனத்துடனும் கடந்த காலங்களில் அமெரிக்க அதிகார தலைமையில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, அந்நாட்டு மக்களுமே பேசி வந்தனர்.

மனித உரிமைகள், போர்க்குற்றம் போன்றவை குறித்து அடுத்த நாடுகளை கண்டித்து வந்த அமெரிக்கா, தங்கள் நாட்டிற்கு அது பொருந்தாது; தாங்கள் விதிவிலக்கானவர்கள் என்பது போன்றே நடந்து வந்தது.

அதற்கு சமீபத்திய உதாரணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க படையினர் புரிந்த அட்டூழியங்கள்!குறிப்பாக ஈராக்கில் பொதுமக்கள் என்று நன்கு தெரிந்தும், அவர்கள் மீது குண்டு வீசி கொன்றதும், அரசியல் கைதிகளாக பிடிபட்ட சதாம் உசேன் ஆதரவாளர்களை சிறையில் கொடூரமாக சித்ரவதை செய்ததும் உலகறிந்த உண்மை!

அதேப்போன்று அணு ஆயுத விவகாரத்திலும் தங்களுக்கு ஒரு நியாயம், மற்றநாடுகளுக்கு ஒரு நியாயம் என்றே அமெரிக்க தலைவர்களும், அதன் அரசு அதிகாரிகளும் பேசி வந்தனர்.

இந்நிலையில்தான் அமெரிக்காவின் இந்த ஆணவத்திற்கும், திமிருக்கும் சம்மட்டி அடி கொடுப்பதுபோல், பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு அரசு தலைமைக்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டது “விக்கிலீக்ஸ்” !

ஒவ்வொரு நாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய நையாண்டி குறிப்புகளுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனுப்பிய தகவல்கள் விக்கிலீக்ஸில் வெளியானபோது, நடுவீதியில் ஆடையிழந்து அம்மணமாக நிற்பது போன்ற நிலைக்கு ஆளானது அமெரிக்கா!

தங்களைப் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடு அல்லது எண்ணம் என்ன என்பது ஒவ்வொரு உலக நாடுகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் தற்போது தெரிந்துவிட்டதால், வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் அமெரிக்கா மீது கறுவிக்கொண்டுதான் உள்ளனர்.

இதனால் இப்போது அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் போன் போட்டு, “விக்கிலீக்ஸ்” தகவல்களை பொருட்படுத்தாதீர்கள். நாம் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம் என்று தாஜா செய்து வருகிறார்!

இந்த அளவுக்கு நிலைமை சந்தி சிரித்த பிறகும், அமெரிக்க அரசுக்கும் அந்நாட்டவர்களுக்கும் தங்களை பற்றிய ஆணவம் என்னவோ கடுகளவும் குறைந்தபாடில்லை என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.

‘யு.எஸ்.ஏ டுடே’ ( USA Today) என்ற அமைப்பு கடந்த 10 முதல் 12 ஆம் தேதி வரை அமெரிக்கர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் – அதாவது 62 விழுக்காட்டினர் – அமெரிக்காவும், அமெரிக்கர்களும் “விதிவிலக்கானவர்கள்” என்று கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

” மற்ற உலக நாடுகளிலிருந்து அமெரிக்கா வேறுபட்ட மகத்தான நாடு.அதன் கடந்த கால வரலாறு மற்றும் அரசியலமைப்பு சாசனம் போன்றவற்றினால் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் குணாதிசயம் மாறுபட்ட ஒன்று” என 73 விழுக்காட்டினர் கருத்து கூறியுள்ளனர். இதில் குடியரசு கட்சியை சேர்ந்த 91 விழுக்காட்டினர் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

அதேப்போன்று அதிபர் பராக் ஒபாமாவும் “அமெரிக்கா விதிவிலக்கான நாடு” என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதாக 58 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் முந்தைய அதிபர்களான ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர்களிடத்தில் இருந்ததை விட, ஒபாமாவிடம் இந்த எண்ணம் சற்று குறைச்சலாகத்தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதே சமயம் அமெரிக்கா, தனது சாதுரிய நடவடிக்கை மூலம் பெற்ற “உயர் அந்தஸ்து நிலை” யை இழக்கத் தொடங்கியிருப்பதாக ( விக்கிலீக்ஸ் போன்றவற்றால்…) பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

மேலும் உலக விவகாரங்களுக்கு தலைமையேற்று நடத்திச் செல்லும் “சிறப்பு பொறுப்பு” அமெரிக்காவுக்கு உள்ளதாக 66 விழுக்காட்டினர் கூறியுள்ளனராம்.

ஹூம்…! தும்முவதை கூட அமெரிக்காவிடம் கேட்டுவிட்டு செய்யும் பல உலக தலைவர்கள் ( நம் நாடும் சேர்த்துதான்!) இருக்கும் வரை அமெரிக்கர்களின் இந்த ஆணவம் அத்தனை இலேசில் அடங்காதுதான் போல!

(wd)




Politics
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..