Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மறைந்து வரும், ரைஸ் மில்கள்!
Posted By:Hajas On 1/1/2015 6:55:21 AM

மறைந்து வரும்,
ரைஸ் மில்கள்!

 

நமது ஊரில் விவசாயம் கொடிகட்டிப் பறந்து ஊரே பசுமையாக இருந்த நாட்களில்,
அதோடு தொடர்புடைய பல விஷயங்களும் பரபரப்பாக இயங்கிச் செயல்பட்டுக் கொண்டு இருந்தது.

அவற்றில் ஒன்றுதான் நெல்லை அவித்து, அரைத்து அரிசியாக்கும் ரைஸ்மில்கள்.

பார்பதற்கு கோவில் கோபுரங்கள் போல உயர்ந்து காட்சியளிக்கும் அதன் கட்டிடங்கள்,
புகையை உயரத்தில் விடுவதற்கு மட்டுமின்றி,
தூரத்திலிருந்தே அவைகளின் இடத்தை காட்டிக் கொடுக்கும் அடையாளங்களாகவும் செயல்பட்டது.

அறுவடை முடிந்த பின் 
ஆயிரக்கணக்கான கிலோ கணக்கில் மூடை, மூடையாய் ரைஸ் மில்களில் வந்திறங்கும் நெற்கள், அவித்து, காயப்போட்டு, பின்னர் அரைத்துக் கொடுக்கப்படும்.

படத்தில் இருப்பது ஏர்வாடியின் மிகப்பெரிய ரைஸ்மில்லாக ஒருகாலத்தில் ஓடி,
விவசாயத்தின் வீழ்ச்சியால் தற்போது வீழ்ந்து புதர் மண்டி அழிந்து கொண்டிருக்கும் K.M முஹம்மது அலி ரைஸ்மில்லின் புகைப்படங்கள்.

அப்பகுதியில் வாழ்ந்த பலருக்கு இந்த ரைஸ் மில்லோடு தொடர்புடைய பழைய நினைவுகள் நிறைய இருக்கும்.

சிறு வயதில் குவைத்தில் படித்த நண்பர் ஷரீஃப் என்ற உமர் சலாஹுதீன் ஊருக்கு வந்த போது, 
ஊரில்லுள்ள தன் நண்பர்களுக்கு ஸ்கேட்டிங் சொல்லிக் கொடுத்தது,
இந்த ரைஸ்மில்லில்,


நெல்லை காய வைப்பதற்காக போடப்பட்டிருக்கும் தரைச் செங்கள் பதிக்கப்பட்ட மைதானம் போன்ற விசாலமான இடத்தில் தான்.

அதில் கீழே விழுந்து கை, கால்கள் புண்ணாகிப் போன சிலரும் உண்டு.

ரைஸ்மில்கள் ஓடிக் கொண்டிருந்த நாட்களில் உணவுக்காக அங்கே சங்கமிக்கும் பறவைகளும், இயற்க்கை இசைக்கும் கீதங்கள் போல, அவைகள் எழுப்பும் ஓசைகளும் அப்பகுதியையே கலகலப்பாக்கி வைக்கும்.

உம்மி, தவுடு.
இந்தப் பெயர்கள் பலருக்கு மறந்தே போய்விட்டது.
இப்போதைய புதியவர்களுக்கு இந்த வார்த்தைகளே தெரியாது.

அடிக்கடி கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் என் அன்பு இளவல் அஹ்மத்,
வீட்டிற்கு மிக அருகாமையில் இருக்கும் ரைஸ் மில்லின் புகைப் போக்கும் கட்டிடத்தைப் பார்த்து,
இது என்ன வாப்பா? 
என்று கேட்ட போது,
ரைமில் என்றேன்.
ரைஸ் மில் என்றால்....?
நெல் அவித்து, அரைத்து அரிசியாக்கும் இடம் என்றேன்.
அடுத்து அவன் கேட்ட கேள்வி அதிர்ச்சியடைய வைத்து விட்டது.
நெல் என்றால் என்ன வாப்பா? என்ற கேள்விதான் அது.
தொடர்ந்து ஒவ்வொன்றாக 
அவனுக்குப் புரிய வைப்பதற்க்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.

இறுதியில் எல்லாம் புரிந்து விட்டது போல் அவன் தலையசைத்து விட்டாலும்,
இன்னும் அவனுக்கு அது முழுமையாகப் புரியவில்லை என்றே தோன்றுகிறது.

விவசாயம் விழுந்தது.
அதோடு தொடர்புடைய ரைஸ் மில்களும் விழுந்து விட்டது.

உலகில் நாம் இழக்கும் ஒவ்வொரு விஷயத்தோடும்,
தொடர்புடைய பல விஷயங்கள் நம்மை விட்டும் மறைந்து போய்விடுகிறது.

இதை உணராதவரை இழப்புகள் நம்மில் அதிகரிக்கவே செய்யும்.

 

https://www.facebook.com/permalink.php?story_fbid=424276154395932&id=386252861531595




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..