Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்!" - வரலாற்றுக் குறிப்பு
Posted By:Hajas On 8/26/2015 12:42:06 AM

"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்!"

நமது கலாச்சார மரபுகளைக் கட்டிக் காத்தக் "கோட்டை!"

ஏர்வாடி தெற்கு மெயின்ரோட்டில் அமைந்திருக்கும் பழமையும்,

புதுமையும் கலந்த லெப்பைவளவு பள்ளிவாசலின் புகைப்படங்கள் தான் இவை.

இதற்கு "முகாம் பள்ளிவாசல்" என்ற பெயரும் உண்டு.

சுமார் 400 வருடங்களுக்கு முன் வாஸ்கோடகாமா -வின் தலைமையில் இந்தியாவை அடிமைப்படுத்த வந்தனர் போர்த்துகீசியர்கள்.

நாடு பிடிக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடற் போர் புரிந்து, 
அவர்களுக்குச் சிம்மச் சொப்பனமாகத் திகழ்ந்து இறுதியில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர் கேரளாவைச் சார்ந்த "குஞ்சாலி மரைக்காயர்" எனும் வீரத் திருமகனார் ஆவார்.

குஞ்சாலி மரைக்காயரின் படையில் தளபதியாகவும், முக்கிய வீரராகவும் இருந்து வீரப் போர் புரிந்த காயல்பட்டிணம் சகத் மரைக்காயரின் மகன் வழிப் பேரரும்,
மாபெரும் இஸ்லாமிய அறிஞரும், அழைப்பாளருமான 
அஷ்-ஷைகு சலாஹுத்தீன் அப்பா அவர்கள் போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்டிருந்த நமது கலாச்சார மரபுகளை மறுகட்டமைப்புச் செய்யவும், இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளவும் ஏர்வாடிக்கு வருகை தந்து முகாமிட்டுத் தங்கியிருந்த இடம் இப்பள்ளிவாசல் தான்.
இதனாலேயே இதற்கு முகாம் பள்ளிவாசல் எனும் பெயரும் வந்தது.
இன்றும் இப்பெயர் புழக்கத்தில் உள்ளது.

கி.பி 1674 -ல் ஏர்வாடிக்கு வருகைத் தந்த இறைநேசரும், சீர்திருத்தச் செம்மலுமாகிய சலாஹுத்தீன் அப்பா அவர்களின் மண்ணறை இப்பள்ளிவாசலின் வளாகத்தில் தான் உள்ளது.
மிகப் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்றையும் இங்கே காண முடியும்.

இறைநேசர் சலாஹுத்தீன் அப்பா அவர்களின் வருகைக்கு சுமார் 570 ஆண்டுகளுக்கு முன்பே ஏர்வாடியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
லெட்சுமி நரசிங்க புரம் என்று அழைக்கப்பட்ட ஏர்வாடியில் முஸ்லிம்கள் முதன் முதலில் வாழ்ந்த பகுதி இன்று லெப்பைவளவு என்று அழைக்கப்படும் இப்பள்ளிவாசல் உள்ள பகுதியாகும்.
ஃபத்தாஹ் அப்பா (பத்தாஸப்பா) என்று அறியப்படும் ஓர் இறைநேசரின் மூலம் இஸ்லாம் ஏர்வாடியில் அறிமுகமானது. இவரது மண்ணரை லெப்பைவளவு பகுதியில் திருக்குறுங்குடி சாலையை ஒட்டிய இடத்தில் வலதுபுறம் உள்ளது.

இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழும் இப்பகுதியில், 
நல்ல சமூக நல்லிணக்கம் பேணப்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டியதாகும்.
மரணித்த தங்கள் முஸ்லிம் தோழர்களின் நல்லடக்கத்திற்காக இப்பள்ளிவாசலின் மையவாடிவரை வருகை தருவார்கள் அப்பகுதியின் இந்துக்கள்.

பொதுவாக ஏர்வாடியின் எல்லா பள்ளிவாசல்களிலும் நோன்பு காலத்தில் முஸ்லிம்களால் காய்ச்சி விநியோகிக்கப்படும் நோன்பு கஞ்சியை வாங்குவதற்காக வருகைதரும் இந்து நண்பர்களின் வருகை ஏர்வாடியின் மற்ற பள்ளிவாசல்களை விட இங்கேயே அதிகமாக இருக்கும்.
மரக்குடி, கம்மாளர் தெரு, பொத்தையடி, கோவில்வாசல், பெருந்தெரு போன்ற பகுதிகளைச் சார்ந்த பல இந்து நண்பர்கள் இங்கு வருகை தருவார்கள்.

வரலாற்றுச் சிறப்பும், நல்ல சமூக நல்லிணக்கப் பாரம்பரியமும் கொண்ட லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல் ஏர்வாடியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.

  • Ameer Buhary Buhary மாஷா அல்லாஹ் இந்த வரலாற்று குறிப்பு எந்த புத்தகத்திலிருந்து எடுத்தீர்கள் அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாரா? இவ்வளவு பழமை வாய்ந்த பள்ளிவாசல் முகாம் என்றால் உண்மையில் அது ஏர்வாடியிக்கு பெருமை சேர்பதாகும் மேலும் அந்த வரலாற்றை ஆதாரபூர்வமாக முழுமையாக பதிவிட்டால் அதனுடைய பழமையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
     
  • Mohammed Aadhil இந்த வரலாற்றின் ஆணிவேர் தான் ஏர்வாடி ஆவணப்படம் விரைவில் முழு ஆதாரத்துடன் வெளிவர இருக்கிறது
     
  • Nellai Eruvadi Sunnath Jamath மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய ஆராய்ச்சித் துறை ஆய்வாளர் 
    டாக்டர் அஜ்மல் கான் M.A.PhD அவர்கள் எழுதிய 
    தமிழகத்தில் முஸ்லிம்கள் 

    போர்ச்சுகீசியர்கள் வருகைக்கு முன்பும் பின்பும்.

    சென்னை புதுக் கல்லூரி அரபித்துறை விரிவுரையாளர் மற்றும் ஆய்வு நெறியாளர் 
    டாக்டர் கா.மு.அ.அஹ்மது ஜுபைர் அவர்கள் எழுதிய இமாம் சதக்கத்துல்லா அப்பா வரலாறு.

    எழுத்தாளர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள் எழுதிய இஸ்லாமிய கலைக்களஞ்சியம்.

    இப்படி பல நூல்களில் கிடைத்த வரலாற்றுக் குறிப்புகளின் ஒருங்கிணைப்பு.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..