Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06
Posted By:Hajas On 9/16/2016 9:00:04 AM

nolvadex

nolvadex nolife.gr

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik


Episode 05: 8 வது உத்தி - சக்தி அலைகள்:

Episode 06: “சக்திச்சொட்டுப் பொறியியல்” (Quantum Mechanics) அறிமுகம்: -

Image may contain: text

இதுவரை நுண்ணிய அணுக்களின் மட்டத்திலிருந்து அண்டசராரசத்தின் விசாலம் வரை அனைத்தையுமே திட்டவட்டமான அளவீடுகள் மூலம் அளந்தும், கணித்தும், அவற்றையொட்டியே கோட்பாடுகளையும், சமன்பாடுகளையும் வடிவமைத்துப் பழகிப் போன விஞ்ஞானிகளது உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட புரட்சிகரமான ஒரு புது விஞ்ஞானமாகவே சக்திச்சொட்டுப் பொறியியல் பரிணமித்தது.

சாதாரண மனிதர்கள் ஒருபுறமிருக்க, ஆணானப்பட்ட பெரும்பெரும் விஞ்ஞானிகளே குழப்பத்தின் உச்ச நிலையில் திகைத்துப் போய்த் தலையைச் சொறிந்தது குவாண்ட்டம் கோட்பாடுகளைச் சந்தித்த போது தான். நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம், நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் இயங்கவில்லை; மாறாக, நமது யதார்த்தத்துக்கே ஒத்துவராத விசித்திரமானதோர் அமைப்பிலேயே இந்தப் பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது தான் குவாண்ட்டம் கோட்பாட்டின் மையக்கருத்து.

அதுவரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த விஞ்ஞானத்தின் பல அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட உடைத்து நொறுக்கும் விதமாகவே குவாண்ட்டம் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இதனாலேயே ஆரம்ப காலங்களில் பிரபலமான பல விஞ்ஞானிகளது எதிர்ப்புகளுக்கும் குவாண்ட்டம் கோட்பாடுகள் ஆளாகின. ஆனாலும், அந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி, குவாண்ட்டம் கோட்பாடுகள் தான் உண்மையான விஞ்ஞானத்தின் தூய வடிவம் என்பது பிற்காலத்தில் பலநூறு பரிசோதனைகள் மூலம் மறுக்க முடியாதவாறு நிரூபிக்கப் பட்டது.

நாம் வாழும் இன்றைய உலகின் அதிநவீன தொழிநுட்பங்கள் அனைத்தும் மனிதனால் சாத்தியப் பட்டிருப்பதே குவாண்ட்டம் பொறியியல் மூலம் தான். அதிநவீன இலெக்ட்ரோனிக் கருவிகள், அதிவேக கம்பியூட்டர்கள், நமது கைகளில் இன்று தவழ்ந்து கொண்டிருக்கும் அதிநவீன ரக கைபேசிகள் போன்ற அனைத்திலும் இருக்கும் ப்ரொசசர்கள் (Processors / Micro processors) அனைத்தும் இன்று வடிவமைக்கப் பட்டிருப்பதும், இயங்கிக் கொண்டிருப்பதும் குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கு அமையத் தான்.

“சக்திச்சொட்டுக் கோட்பாடு” (Quantum Theory) என்றால் என்ன?

எந்தவொரு பொருளையோ, சக்தியையோ சிறு சிறு பங்குகளாகப் பிரித்துக் கொண்டே போனால், இறுதியில் அணுக்கள் என்ற கட்டத்தை அடைவோம். அணுவையும் பங்குகளாக வகுத்துக் கொண்டே போனால், இறுதியில் அதற்கு மேலும் பிரிக்க முடியாத நுண்ணிய சக்தித் துகள்களே இருக்கும். இவை சக்திச் சொட்டுக்கள் “குவாண்ட்டா” என்றழைக்கப்படும். ஒரு குவாண்ட்டம் என்பது சக்தியின் ஒரு சொட்டு என்று கணிக்கப் படும். உதாரணத்துக்கு “ஃபோட்டோன்” (Photon) என்றழைக்கப்படும் ஒளியின் சொட்டுக்களைக் குறிப்பிடலாம். ஒரு போட்டோன் என்பது ஒரு சொட்டு ஒளி என்று அர்த்தம். இவ்வாறான சக்திச் சொட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் விளைவு தான், சக்திச்சொட்டுப் பொறியியல் எனும் புரட்சிகரமான விஞ்ஞானம்.

குவாண்ட்டம் கோட்பாடு பற்றிய சிறு விளக்கம்:

அணு என்பது இலக்ட்ரோன், ப்ரோட்டோன் போன்ற பல துகள்களின் (Particles) தொகுப்பால் ஆன கட்டமைப்பு என்பது ஏற்கனவே அறிந்த விடயம்.

இவ்வாறு அணுக்களின் உள்ளே இருக்கும் துகள்கள் எதுவும் சடப்பொருள் கிடையாது. அவை அனைத்தும் சடப்பொருளைப் போல் தோற்றமளிக்கக் கூடிய சக்திச் சொட்டுக்கள் மட்டுமே. இந்தச் சக்திச் சொட்டுக்கள் எதுவும் வெறுமனே அசையாமல் சடப்பொருளாக இருப்பதில்லை. ஒவ்வொரு சக்திச்சொட்டும் அதிர்ந்து கொண்டு (Vibration) தான் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான சக்திச்சொட்டுக்கும் என்று தனித்துவமான ஓர் அதிர்வு எண்ணிக்கை (frequency) இருக்கும். இந்த அதிர்வெண்களைப் பொருத்து ஒவ்வொரு சக்திச் சொட்டும் நடத்தையில் வேறுபடும். இந்த வேறுபட்ட நடத்தைகளுக்கு அமையவே பல்வேறுபட்ட அணுக்கள் / மூலகங்கள் / பதார்த்தங்கள் என அவை உருவத்திலும், நடத்தையிலும் வித்தியாசப்பட்டுக் காணப்படும்.

இதை எளிய வடிவில் கூறுவதென்றால், இந்தப் பிரபஞ்சம், இதிலிருக்கும் வஸ்துக்கள், ஜீவராசிகள் அனைத்துமே, மனித புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி, பல்வேறுபட்ட அதிர்வெண்களில் தொடர்ச்சியாக அதிர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் ஓர் எதிரொளி மட்டுமே. ஒரேயொரு கணம் இந்தச் சக்தியின் அதிர்வு நின்று விட்டால், அடுத்த கணமே இந்த மொத்தப் பிரபஞ்சமும் மாயமாக மறைந்து விடும். அணுக்கள் தொடக்கம், அண்டசராசரத்தின் பிரும்மாண்டமான உடுத்தொகுதிகள் வரை அனைத்தும் தொடர்ச்சியாக அதிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிர்வு (Vibration) என்ற ஒன்று இல்லையென்றால், இந்த உலகமே இல்லை.

ஆவர்த்தண அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் பல்வேறு பட்ட அணுக்கள், மூலகங்கள் என்று எதுவும் உலகில் நிலையான கட்டமைப்புக்களாக இல்லை. ஓர் அணுவின் உள்ளே இருக்கும் சக்திச் சொட்டுக்களின் அதிர்வெண்கள் கொஞ்சம் மாறினால் கூட, அடுத்த கணம் அந்த அணுவே வேறோர் அணுவாக மாறி விடும்.

இந்த அடிப்படையில் ஓர் இடத்தில் இருக்கும் அதே அணு அதே நேரத்தில் இன்னோர் இடத்திலும் இருக்கலாம். ஓரிடத்தில் இருக்கும் ஒரு துகள், ஒரே கணத்தில் மாயமாக மறைந்து போய், வேறு பல இடங்களில் ஏக காலத்தில் பல பிரதிகளாகக் கூட முளைக்கலாம். இடம், பொருள் என்பதெல்லாம் சக்திச் சொட்டுக்கள் அதிரும் வேகத்தின் பிரதிபலிப்புக்கள் மட்டுமே.

இன்னொரு விதத்தில் இதை எளிமையாகக் கூறுவதென்றால், சடப்பொருள் என்று எதுவுமே உலகில் கிடையாது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே அறிவுக்குப் புலப்படாத ஒரு சக்தியின் வெளிப்பாடு மட்டுமே. கண்ணால் காண்பது, கையால் தொட்டு உணர்வது அனைத்தும் ஒரு மாயை மட்டுமே. ஓர் இடத்தில் இருக்கும் ஒரு பொருள் எந்த நிமிடம் வேண்டுமானாலும் அந்த இடத்திலிருந்து மாயமாக மறைந்து போகலாம். ஏனெனில், அங்கு எந்தப் பொருளும் இல்லையென்பது தான் யதார்த்தம். ஏதோவொரு சக்தி மட்டுமே இவற்றுக்கேல்லாம் தோற்றம் கொடுத்து, அனைத்தையும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. அந்த சக்தியின் நிர்வாகம் ஒரு கணம் இல்லாமல் போனால், அதே கணம் இந்த மொத்தப் பிரபஞ்சமும் இல்லாமல் போய் விடும். எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் நிச்சயம் இல்லை. எந்தக் கணமும் எது வேணுமானாலும் நடக்கலாம். எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இல்லை.

பிரபஞ்சத்தின் இந்த நிச்சயமற்ற தன்மையை உணர்ந்து, பகிரங்கமாக அதை ஒரு கொள்கையாகப் பிரகடணப் படுத்தியது குவாண்ட்டம் கோட்பாடு தான். இந்த நிச்சயமற்ற தன்மையைக் கூறிய ஒரே காரணத்துக்காக ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகள் குவாண்ட்டம் கோட்பாட்டைக் கடுமையாக எள்ளி நகையாடத் தொடங்கினர். குவாண்ட்டம் கோட்பாடு என்பதே ஒரு “நிச்சயமற்ற கோட்பாடு” தான் என்று நையாண்டியாகப் பேசத் தொடங்கினர். அவர்களது நோக்கம், இந்த “நிச்சயமின்மை” எனும் கோட்பாட்டை, குவாண்ட்டம் கொள்கையின் ஓர் அறிவீனமாகச் சித்தரித்துக் காட்டி, அதன் மூலம் குவாண்ட்டம் கோட்பாட்டைப் பொய்ப்பிக்க வேண்டும் என்பதாகத் தான் இருந்தது.

ஆனால், குவாண்ட்டம் கோட்பாடு முன்வைத்த “நிச்சயமின்மைக் கோட்பாடு” தான் சரியான விஞ்ஞானம் என்பதும், ஐன்ஸ்டைன் போன்றவர்கள் முன்வைத்த “நிச்சயமாக இது இப்படித் தான் நடக்கும்” என்ற தொனியிலான கொள்கைகள் அனைத்துமே பிழையான விஞ்ஞானம் என்பதுவும் பல பரிசோதனைகள் மூலம் பிறகு நிரூபிக்கப்பட்டது.

இதே போல் ஒளியின் வேகம் கூட நிச்சயமாக ஒரே வேகம் தான் என்றும், ஒளியை மிஞ்சிய வேகத்தில் நிச்சயமாக எதுவும் இல்லை என்றும் ஐன்ஸ்டைன் முன்வைத்த கோட்பாடுகள் கூட தவறானவை என்பதும் பிற்காலத்தில் பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டன. உதாரணத்துக்கு 2011ம் ஆண்டு ஜெனீவா “ஹாட்ரோன் கொலைடர்” (Hadron Collider) இல் நடாத்தப்பட்ட CERN பரிசோதனையில் “நியூட்ரினோஸ்” (Neutrinos) என்றழைக்கப்படும் அடிப்படைத் துகளானது, ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தது நிரூபிக்கப் பட்டது. இந்தப் பரிசோதனையின் பெறுபேறுகளின் முதலாவது அறிக்கையில் இது துல்லியமாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

ஆனால், ஷைத்தானியர்கள் உடனே அவர்களுக்கே உரிய தில்லுமுல்லுகளைப் பன்னி, அந்த அறிக்கையை மழுப்பி, இருட்டடிப்பு செய்து, திருத்திய பதிப்பு என்று இரண்டாம் அறிக்கையைத் தான் வெளியிட்டனர். அதில் இந்த உண்மை இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் பிழையென்பதை இப்போதைக்கு உலகம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்தப் பித்தலாட்டம் அரங்கேற்றப் பட்டது.

குவாண்ட்டம் கோட்பாடுகளின் சாராம்சத்தின் அடிப்படையிலும், நிரூபிக்கப்பட்ட பின் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பல பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும் இந்தப் பிரபஞ்சம் பற்றிய உண்மையான இயற்பியல் விஞ்ஞானம் இது தான்:

இந்தப் பிரபஞ்சம் என்பது முழுக்க முழுக்க சக்தியால் தான் உருவாக்கப் பட்டிருக்கின்றது; சடப்பொருள் என்பது வெறும் மாயை மட்டுமே. நமக்குள்ளேயும், நமக்கு வெளியேயும், நம்மைச் சுற்றியும் இருப்பது சக்தி மட்டும் தான்.

இதில், ஒளியின் வேகத்தை விடக் குறைந்த வேகம் கொண்ட சக்திகள் தாம் அணுக்களாகவும், இரசாயண மூலக்கூறுகளாகவும், சடப்பொருட்களாகவும் நம் கண்களுக்கும், கருவிகளுக்கும் தெரிகின்றன.

ஒளியின் வேகத்துக்கு நெருக்கமான வேகம் கொண்ட சக்திகள் தாம், கதிர்வீச்சுக்களாகவும், சக்தி அலைகளாகவும் நம்மால் உணரப்படுகின்றன. ஒளிக்கதிர்கள் / மின்காந்த அலைகள் போன்றவற்றை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஒளியின் வேகத்தைத் தாண்டிய சக்திகள் எதுவும் நம் கண்களுக்கோ, கருவிகளுக்கோ புலப்படுவதில்லை. ஏனெனில் அவற்றை எட்டிப் பிடித்து உற்று நோக்கும் அளவுக்கு நம் கருவிகளுக்கு சக்தி போதவில்லை. இவை சக்தியின் அதியுயர் வடிவங்கள். இந்த வகையைச் சார்ந்த சக்திகளின் ஆற்றல்கள் அபாரமானவை.

இந்த வகையான அமானுஷ்ய சக்திகளைத் தான் காலத்துக்குக் காலம் பலரும் வெவ்வேறு பெயர்களில் அழைத்தார்கள். “இருண்ட பொருள்” (Dark Matter) / “இருண்ட சக்தி” (Dark Energy) / “ஸ்கேலார் அலைகள்” (Scalar Waves) / “ஈத்தர்” (Aether) போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சக்திகளெல்லாம் இந்த வகையைச் சார்ந்தவை தாம்.

மேலும், குவாண்ட்டம் கோட்பாட்டின் பிரகாரம், நேரம் (காலம்) என்பது ஐன்ஸ்டைன் குறிப்பிடுவது போல் வெறுமனே ஒரு ரூலர் அளவுகோல் போன்ற ஒரு பரிமானம் அல்ல. நேரம் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் பரிமாணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் அம்சம். அதாவது நேரம் என்பது இந்தப் பிரபஞ்சத்தை நிர்வகிக்கக் கூடிய ஒரு விதி. அதைப் புரிந்துகொள்ளவோ, கண்டுபிடித்து அளக்கவோ, அதில் மாற்றம் செய்யவோ யாராலும் முடியாது.

மேலும், குவாண்ட்டம் கொள்கையின் பிரகாரம், எந்தவொரு பொருளையும் அளந்து, திட்டவட்டமான தீர்மானமான கணிப்புகளைச் சொல்ல முடியாது. ஏனெனில், குவாண்ட்டம் கொள்கையின் பார்வையில் அளக்கும் வரை அந்தப் பொருள் அங்கு இருக்கவில்லை என்பது தான் உண்மை. அளக்கும் அந்தக் கணத்தில் தான் அந்தப் பொருளை ஏதோ ஒரு சக்தி அங்கு முளைக்கச் செய்கிறது. அளந்த பிறகும் அது அதே அளவில் தான் இருக்கும் என்றும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு துணிக்கையும் ஏதோ ஒரு சக்தியிடம் அனுமதி கேட்டு, அனுமதி கிடைத்த பிறகே அந்த நிலையை அடைகின்றன.

இந்தக் கோட்பாடு கூட நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் சார்ந்த கோட்பாடுகளுக்கு நேர் முரணான கோட்பாடு தான். உதாரணத்துக்கு நியூட்டனின் விதிப் பிரகாரம், மேலே ஒரு பந்தை எறிந்தால், மிக நிச்சயமாக அந்தப் பந்து கீழே தான் விழும். வேறெங்கும் போகாது. இதே அடிப்படையில் தான் ஐன்ஸ்டைன் சார்ந்த கோட்பாடுகளும் நிச்சயமான விதிகளாக இயற்றப் பட்டிருக்கின்றன.

இந்த உதாரணத்தை வைத்து நோக்கும் போது குவாண்ட்டம் கோட்பாடு பிழை என்பது போல தான் தோன்றும். ஏனெனில் இதுவரை உலகில் மேலே எறிந்த எந்தப் பந்தும் கீழே விழாமல் போனதில்லை. இது ஒரு நிச்சயமான விதி போல இருப்பதால், நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் போன்றவர்கள் சொல்வது தான் சரி என்பது போலவும், குவாண்ட்டம் கோட்பாடு வெறும் பித்தலாட்டம் போலவும் தோன்றும்.

ஆனால், இதற்கு குவாண்ட்டம் கோட்பாடு சொல்லும் பதில் என்னவென்றால், மேலே எறியும் பந்து கீழே விழலாம்; விழாமலும் போகலாம்; மாயமாக மறைந்தும் போகலாம். ஆனால், எறியும் ஒவ்வொரு தடவையும் பந்து கீழே தான் விழுகிறது. காரணம், எறியும் ஒவ்வொரு தடவையும், அது கீழே தான் விழ வேண்டும் என்று பந்துக்குக் கட்டளை பிறப்பிக்கப் படுகிறது. அதனால் தான் அந்தப் பந்து கீழே விழுகிறது.

கட்டளை பிறக்காதிருந்தால், பந்து கீழே விழுந்திருக்காது. நிச்சயமாக பந்து கீழே விழுந்து தான் ஆக வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. விழுவதற்கான சாத்தியக் கூறுகள் விழாமல் போவதை விட அதிகம் இருப்பதால் தான் பந்து இதுவரை விழுந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தில் விதிகள் என்று எதுவுமில்லை; சாத்தியக்கூறுகள் மட்டுமே இருக்கின்றன. இந்த சாத்தியக் கூறுகளை குவாண்ட்டம் கோட்பாடு “சாத்தியக்கூற்று அலைகள்” (Probability Wave) என்று கூறுகிறது. இந்த சாத்தியக்கூறுகளை கணித்துச் சொல்ல மட்டும் தான் நம்மால் முடிகிறது. சாத்தியக்கூற்றுக் கணிப்பீட்டின் அடிப்படையில் தான் மனிதர்களது விஞ்ஞானம் எனும் வண்டியே ஓடிக் கொண்டிருக்கிறது.

“சாத்தியக்கூற்று அலைகள்” எனும் இந்தக் கோட்பாடு, பிரசித்தி பெற்ற “இரட்டைப் பிளவுப் பரிசோதனை” (Double Slit Experiment) மூலம் ஆய்வுகூடத்தில் மறுக்க முடியாத விதத்தில் நிரூபிக்கப் பட்டது. இந்தப் பரிசோதனையில் விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை என்னவென்றால், அவர்கள் கண்களால் பார்க்கும் போது இலத்திரன் துகள்கள் சடப்பொருள் போலவும், பார்க்காத போது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி போலவும் நடந்து கொள்கின்றன என்பது தான். இந்தப் பரிசோதனையின் முடிவுகளை வைத்துத் தான் குவாண்ட்டம் பொறிமுறையின் “நிச்சயமின்மை” கோட்பாடு மறுக்க முடியாதவாறு நிரூபிக்கப் பட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு தடவையும், இந்த சாத்தியக்கூற்றுக் கணிப்பீடுகள் துல்லியமாகப் பலித்துக் கொண்டிருக்கின்றன என்பது தான். யதார்த்தத்தில் சாத்தியக் கூறுகள் என்றால், சில தடவை பலிக்க வேண்டும்; சில தடவை பலிக்காமல் போக வேண்டும். இது தானே இயற்கையின் நியதி? ஆனால், இந்த நியதிக்கு மாற்றமாக ஒவ்வொரு தடவையும் இந்தச் சாத்தியக்கூற்றுக் கணிப்பீடுகள் தவறாமல் பலித்துக் கொண்டே இருக்கின்றன. “இது எப்படி சாத்தியம்?” என்ற கேள்வி இங்கு எழும்பும். இந்தக் கேள்விக்கு குவாண்ட்டம் கோட்பாடு சொல்லும் பதில் இது தான்:

அது ஏன் அவ்வாறு துல்லியமாகப் பலிக்கின்றது என்பது தான் யாருக்குமே புரியாத புதிராக இருக்கிறது. கணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்தக் கணிப்பீடு தவறாமல் பலிக்க வேண்டும் என்று அவற்றுக்குக் கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் தான் கணிப்புகள் பலிக்கின்றன. இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால், இப்பேரண்டத்தில் நாம் அறிந்து கொண்டதை விட, அறிவுக்கு எட்டாத விசயங்கள் தான் அதிகம் இருக்கின்றன. அவற்றை அறிய எவ்வளவு முயற்சித்தாலும், நாம் தோற்றுத் தான் போவோம். அதனால் அது ஏன் என்ற கேள்வியை ஒரு பக்கம் வைத்து விட்டுப் பேசாமல், இதனால் நமக்குக் கிடைக்கக் கூடிய பயனை மட்டும் அடைவதில் நம் கவனத்தைச் செலுத்துவது தான் புத்திசாலித் தனம்.

இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் விதமாக குவாண்ட்டம் கோட்பாடு “வாயை மூடிக்கொண்டு கணிக்கும் வேலையை மட்டும் பார்” (Shut up and calculate) என்ற ஒரு புது நிலைபாட்டை முன்வைத்தது.

உண்மையில் இன்று நமது அன்றாட வாழ்வில் பாவனையில் இருக்கும் நவீன இலெக்ட்ரோனிக் உபகரணங்கள், கம்பியூட்டர் போன்ற அதிநவீன கண்டுபிடிப்புகள் அனைத்தும் குவாண்ட்டம் கோட்பாடுகளுக்கு அமையவே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன என்பதுவும், இவை அனைத்தும் “சாத்தியக்கூற்றுக் கணிப்பீட்டின்” அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் தான் நம்மில் பலர் அறியாத உண்மை.

இன்றைய உலகின் நவீன அணு சக்தித் தொழினுட்பம் கூட குவாண்ட்டம் கோட்பாட்டின் “சாத்தியக்கூற்றுக் கணிப்பீட்டின்” அடிப்படையில் தான் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால், இந்த நவீன கண்டுபிடிப்புகளின் உண்மையான சொந்தக்காரனான குவாண்ட்டம் கோட்பாட்டுக்குக் கிடைக்க வேண்டிய புகழ் அனைத்தும், ஐன்ஸ்டைன் போன்ற திருட்டு விஞ்ஞானிகளுக்குப் போய் சேர்ந்திருப்பது தான்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

 

Episode 07: சக்திச்சொட்டுச் சிக்கல் (Quantum Entanglement): 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..