Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 15
Posted By:Hajas On 10/9/2016 5:21:27 AM

cialis cena 2018

cialis cena lekarna read here

 

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

தொடர் 2: வேற்றுக்கிரகவாசிகள்


Episode 14: மரியா ஓர்சிக் (Maria Orsic):

Episode 15: 2ம் உலகப்போர்


இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் நாசி ஜேர்மனி தோல்வியைத் தழுவும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது, ஹிட்லர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாசிகள் ஜேர்மனியிலிருந்து இரகசியமாக வெளியேறினர். அண்ட்டார்க்டிக் கண்டத்தில், புதிய ஸ்வாபியா தேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட தமது இராணுவத் தளத்தை நோக்கி இவர்கள் புலம்பெயர்ந்தனர்.
இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறும் போது, முப்பது U-Boat ரக நீர்மூழ்கிக் கப்பல்களோடும், பெரும் அளவிலான பொருட்களை ஏற்றிக் கொண்டு பயணிக்கும் விதத்தில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சில பிரும்மாண்டமான நீர்மூழ்கிக் கப்பல்களோடும், ஜேர்மனியின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டு பறக்கும் தட்டுக்களோடும் தான் இவர்கள் அண்ட்டார்க்டிக் நோக்கித் தப்பித்துச் சென்றனர். ஹிட்லரின் படையில் முக்கிய பொறுப்புக்களை வகித்த பல நாசிகளும் கூட இந்தக் கூட்டத்தோடு தப்பித்துச் சென்றனர்.
யுத்தத்தின் இறுதியில், ஜேர்மனியைக் கைப்பற்றி வெற்றி கொண்ட ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நேச நாடுகள், நாசிகளின் பல உயர் அதிகாரிகளையும், பிரதான தலைவர்களையும் தேடி நாடு முழுவதும் சல்லடை போட்டார்கள். கடைசி வரை யாருமே அகப்படவில்லை. தேடிப் பார்த்த பிறகு தான், அவர்களெல்லாம் ஏற்கனவே நாட்டை விட்டுத் தப்பிச் சென்றது தெரிய வந்தது. தப்பிச் சென்ற நாசிகளைத் தேடிப் பிடிப்பதற்கு உலகின் நாலாபக்கமும் நேச நாடுகள் வலைவீசின. ஆனால், இவர்களது எந்த வலையிலும் சிக்காமல், நாசிகள் தென் துருவத்தைச் சென்றடைந்து விட்டனர்.


இந்தச் சம்பவங்கள் குறித்த சில ஆதாரங்களைப் பின்வரும் லிங்க்குகளில் பார்க்கலாம்:


https://upload.wikimedia.org/…/commons/f/f1/NewSwabiaMap.jpg
http://cdn.theeventchronicle.com/…/01/Nazi-Base-Antarctica.…
https://uncensoredspeechworldwide.com/…/new-swabia-the-thi…/
https://s-media-cache-ak0.pinimg.com/…/605b6ce3bee52c5deaa7…
https://i.ytimg.com/vi/yd-mVXwnQO4/maxresdefault.jpg
https://www.youtube.com/watch?v=yd-mVXwnQO4
https://www.youtube.com/watch?v=-fmO0A2zuWM


2ம் உலகப்போர் இறுதியில் அமெரிக்கா:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமெரிக்க வரலாற்றின் பல திருப்புமுனைகளுக்குக் காரணமாக அமைந்த இரண்டு சம்பவங்கள் 1947ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தன:
சம்பவம் 1:
ஏற்கனவே அண்ட்டார்க்டிக் நோக்கித் தப்பிச் சென்ற நாசிகளின் 30 நீர்மூழ்கிக் கப்பல்களில் இரண்டு கப்பல்கள் அமெரிக்கக் கடற்படைகளால் ஆர்ஜெண்டினாவை அண்டிய கடற்பரப்பில் 1947 இல் கைப்பற்றப் பட்ட சம்பவம்.
சம்பவம் 2:
ஜூலை மாதம் 8ம் திகதி 1947 இல் அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாநிலத்தில் ரொஸ்வெல் எனும் ஊரில் மூன்று பறக்கும் தட்டுக்கள் விபத்துக்குள்ளாகி வீழ்ந்த சம்பவம்.
பறக்கும் தட்டுக்கள் குறித்த இந்தச் சம்பவம், “ரொஸ்வெல் சம்பவம்” என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. சம்பவத்தின் போது மூன்று பறக்கும் தட்டுக்கள் அவதானிக்கப் பட்டதாகவும், அவை விபத்துக்குள்ளாகித் தரையில் வீழ்ந்ததாகவும், இந்தப் பறக்கும் தட்டுக்களுக்குள், மனித உருவத்துக்கு நெருக்கமான, ஆனால், மூன்று அடி உயரம் மட்டுமே கொண்ட வேற்றுக் கிரகவாசிகள் இருந்ததாகவும் சம்பவம் கூறுகிறது.
அந்தப் பகுதியை அண்டிய பிரதேசத்தில் இருக்கும் அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான சக்திமிக்க ராடார் கருவிகளின் ராடார் கதிர்கள் காரணமாக இந்தப் பறக்கும் தட்டுக்களின் கட்டுப்பாட்டுத் தொழினுட்பம் சிலவெளை குழம்பியிருக்கலாம் என்றும்; இதன் விளைவாக இவை விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும் சம்பவத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அமெரிக்க அரசின் FBI புலனாய்வுத் துறைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.
மேலும், இந்த வேற்றுக் கிரகவாசிகளுள் சிலர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து காணப்பட்டதாகவும், ஓரிரு வேற்றுக்கிரகவாசிகள் மட்டுமே அமெரிக்க இராணுவத்தின் இரகசியப் படைப் பிரிவின் மூலம் மீட்கப் பட்டுக் கொண்டுசெல்லப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தையும் கூட அப்போதிருந்த அமெரிக்க அரசாங்கம் மொத்தமாக மூடிமறைக்க முயற்சித்தது. வானிலை மாற்றங்களை அவதானிக்கும் பொருட்டு வளிமண்டலத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் சில “வானிலை பலூன்கள்” (Weather Balloons) தாம் ரொஸ்வெல் நகரில் செயழிலந்து வீழ்ந்தன என்று, கதையை மாற்றி, அமெரிக்க அரசு மீடியாக்களில் பரப்பத் தொடங்கியது.
இருந்தாலும், இந்த உண்மையை அவர்களால் நீண்ட நாள் மறைத்து வைத்திருக்க முடியவில்லை. அரசின் கட்டுப்பாட்டையும் மீறி இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கசியத் தொடங்கியது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த சார்சிகள் ஓரிருவர் அல்ல. மொத்த ஊர் மக்களுமே இந்தச் சம்பவத்திற்கு சாட்சிகளாக இருந்தனர்.
இந்தச் சம்பவத்தையொட்டி ரொஸ்வெல் நகரில் புதிதாக ஓர் அருங்காட்சியகமே திறந்து வைக்கப் பட்டது. இந்த அருங்காட்சியகம், “ரொஸ்வெல் UFO அருங்காட்சியகம்” (Roswell UFO Museum) என்ற பெயரில் இன்று வரை இருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்த சில ஆதாரங்களைப் பின்வரும் லிங்க்குகளில் பார்த்துக் கொள்ளலாம்:
http://www.plantcitymarket.com/…/9/14991428/2768988_orig.jpg
http://www.intergalacticvault.com/…/Are-Aliens-Real-Roswell…
http://www.episodeseason.com/…/proof-of-roswell-ufo-crash.j…
http://www.etsonly.com/images/roswell/FBI-PROOF-ALIENS.png
http://www.roswellufomuseum.com/museum.html
http://www.ufoevidence.org/GovtDocs/FBI3/FBI3-16.gif
http://www.openminds.tv/…/…/RoswellDailyRecordJuly9_1947.jpg
https://i.ytimg.com/vi/iWg9B_cbwHk/hqdefault.jpg
ஆர்ஜெண்ட்டினாவை அண்டிய கடற்பிரதேசத்தில் நாசி ஜேர்மனியின் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தையும், ரொஸ்வெல் நகரில் நடந்த பறக்கும் தட்டு விபத்துச் சம்பவத்தையும் தொடர்ந்து, அமெரிக்காவினுள்ளும் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன.
அதாவது, 1937 இல் நாசி ஜேர்மனியில் பறக்கும் தட்டு வீழ்ந்த சம்பவத்தையடுத்து ஜேர்மனியில் எவ்வாறெல்லாம் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டனவோ, அதே போல் 1947 இல் ரொஸ்வெல் நகரில் பறக்கும் தட்டுக்கள் விபத்துக்குள்ளாகி வீழ்ந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் அரச மட்டத்தில் பல திடீர் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன.
ஆர்ஜெண்ட்டினாவில் கைப்பற்றப்பட்ட நாசி நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தவர்களைக் கைது செய்து, அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம், அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டும், ரொஸ்வெல் பறக்கும் தட்டுக்களில் இருந்து மீட்கப்பட்ட வேற்றுக் கிரகவாசிகளோடு மேற்கொள்ளப்பட்ட இரகசியத் தொடர்பாடல்கள் மூலம் பெறப்பட்ட பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டும், அமெரிக்க அரசாங்கம் சில பாரிய செயல்திட்டங்களை ஆரம்பித்தது. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்:
முதலாவது செயல்திட்டம்:
அமெரிக்க அரசாங்கத்தின் மொத்தக் கட்டுப்பாட்டையும் ஏற்கனவே தம் வசம் வைத்திருந்த இலுமினாட்டி முகவர்களது நேரடிக் கண்காணிப்பின் கீழ், “மஜஸ்ட்டிக் 12” (Majestic 12 / Code name: MJ12) என்ற பெயரில் ஓர் இரகசிய இயக்கம் அமெரிக்க இராணுவத்தினுள் தோற்றுவிக்கப் பட்டது. இந்த இயக்கத்தின் வாயிலாகப் பல இரகசிய இராணுவ செயல்திட்டங்களும், ஆய்வுகளும் நிவாடா மானிலத்திலிருக்கும் Groom Lake / Area 51 எனும் இரகசிய இராணுவத் தளத்தில் ஆரம்பிக்கப் பட்டன.
குறிப்பாக விபத்துக்குள்ளான பறக்கும் தட்டுக்களையும், அவற்றிலிருந்து மீட்கப்பட்ட வேற்றுக்கிரகவாசிகளையும் பற்றிய பல ஆய்வுகள் ஏக காலத்தில் இங்கு மேற்கொள்ளப் பட்டன. இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.
முதலாவது நோக்கம்:
இந்தப் பறக்கும் தட்டுக்கள் இயங்கும் தொழினுட்ப இரகசியங்களைக் கண்டறிந்து கொள்வதன் மூலம், இதே போன்ற ஒரு பறக்கும் தட்டைத் தாமும் தயாரிக்க முயற்சிக்கும் தேவையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது.
இரண்டாவது நோக்கம்:
இவற்றிலிருந்து மீட்கப்பட்ட வேற்றுக்கிரகவாசிகளோடு பல்வேறு அடிப்படைகளில் தொடர்பாடல்களை மேற்கொள்வதன் மூலம், அவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள், அவர்களது நோக்கம் என்ன போன்ற பல கேள்விகளுக்கு விடை காணும் தேவையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. இதன் போது உயிருடன் மீட்கப்பட்ட வேற்றுக்கிரகவாசிகளுடன் பல பேச்சுவார்த்தைகளைக் கூட அமெரிக்க இரகசிய இராணுவ அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இவை குறித்த ஒருசில காணொளி ஆதாரங்களைப் பின்வரும் லிங்க்குகளில் பார்க்கலாம்:
https://www.youtube.com/watch?v=NowL5h4tOWY
https://www.youtube.com/watch?v=UXGQlY9dozg
https://www.youtube.com/watch?v=xXIWKQOu-k8
https://www.youtube.com/watch?v=a7uqP46zdsA
https://www.youtube.com/watch?v=qpmuhPptW34
https://www.youtube.com/watch?v=7BFLprchhnw
https://www.youtube.com/watch?v=DLIOSGVkaEU
இவ்வாறான இரகசிய ஆய்வுகள் மூலமும், பேச்சுவார்த்தை / தொடர்பாடல்கள் மூலமும் இறுதியில் அமெரிக்கா பல அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்களைப் பெற்றுக் கொண்டது. பெறப்பட்ட இந்தத் தகவல்களையொட்டி அமெரிக்க அரசாங்கத்தின் பல நிலைபாடுகளே தலைகீழாக மாறின. குறிப்பாக இந்த ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு பாரிய செயல்திட்டத்தை அமெரிக்கா அவசரமாக ஆரம்பித்தது. அது என்னவென்பதை அடுத்து பார்க்கலாம்.
இரண்டாவது செயல்திட்டம்:
ரொஸ்வெல் பறக்கும் தட்டு விபத்துச் சம்பவம் நடந்த அதே ஆண்டில் (1947), அமெரிக்கக் கடற்படையின் அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த “ஜேம்ஸ் ஃபொரெஸ்டல்” (James Forrestal) மூலம் “Operation Highjump” என்ற பெயரில் உத்தியோகபூர்வமான ஓர் அவசரகால இராணுவ நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டது.
ஏற்கனவே நாம் குறிப்பிட்ட “அட்மிரல் ரிச்சர்ட் பர்ட்” (Admiral Richard Byrd) எனும் கடற்படைத் தளபதியையும் பிரதானமாக உள்ளடக்கியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. அவரோடு சேர்த்து, Admiral Nimitz, Admiral Krusen ஆகிய இன்னும் இரண்டு கடற்படைத் தளபதிகளும் கூட இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பாக நியமிக்கப் பட்டிருந்தார்கள்.
4000 இராணுவ வீரர்கள், 23 யுத்த விமானங்கள், 6 யுத்த ஹெலிகப்டர்கள், 13 யுத்தக் கப்பல்கள், மற்றும் 1 விமானம் தாங்கிக் கப்பல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பிரும்மாண்டமான கடற்படைப் பிரிவை இந்த மூன்று தளபதிகளதும் தலைமையின் கீழ் அமெரிக்க அரசாங்கம் தென் துருவத்திலிருக்கும் அண்ட்டார்க்டிக் கண்டத்தை நோக்கி அனுப்பி வைத்தது.
இந்த அவசர இராணுவ நடவடிக்கையின் நோக்கம், அண்ட்டார்க்டிக் எனும் தென் துருவ நிலப்பரப்பைக் கைப்பற்றுவதாகத் தான் இருந்தது. ஆனால், மீடியாக்களில் அமெரிக்கா வேறொரு கதையைத் தான் பரப்பி விட்டது: “அண்டார்க்டிக் கண்டத்தில் இருக்கும் நிலக்கரி, மற்றும் கனிய வளங்கள் சார்ந்த ஓர் ஆய்வுப் பயணம் இது” என்று தான் வெளியுலகத்துக்கு அமெரிக்கா சொல்லிக் கொண்டது.
தென் துருவத்தை அடைந்த இந்தக் கடற்படைப் பிரிவு, ஏற்கனவே நாசி ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் “நியூ ஸ்வாபியா” எனும் நிலப்பரப்புக்கு எதிர்த் திசையில் இருக்கும் கரையோரத்திலேயே கரையிறங்கி முகாமிட்டது. இவர்கள் கரையிரங்கி முகாமிட்ட நிலப்பரப்பு “சிறிய அமெரிக்கா” (Little America) என்று பெயரிடப்பட்டது.
வெளியுலகுக்குப் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும், இந்த இராணுவ நடவடிக்கையின் உண்மையான நோக்கம் வேறொன்றாகவே இருந்தது: ஏற்கனவே அண்ட்டார்க்டிக்கில் முகாம் அமைத்திருக்கும் நாசி ஜேர்மனி வசம் இருக்கக் கூடிய இரண்டு பறக்கும் தட்டுக்களையும், அவை சார்ந்த தொழினுட்ப இரகசியங்களையும் நாசிகளிடமிருந்து கைப்பற்றுவது தான் இவர்களது பிரதான இலக்காக இருந்தது.
மேலும், அண்ட்டார்க்டிக்கில் ராணுவத் தளம் அமைத்திருக்கும் நாசி ஜேர்மனியர்களுக்கு பறக்கும் தட்டுத் தொழினுட்பத்தைக் கற்றுக் கொடுப்பது போன்ற பலவிதமான உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய உண்மைத் தகவல்களையும் இந்த நடவடிக்கையின் போது திரட்டிக் கொள்வதும் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது.
குறிப்பு:
இந்தச் சம்பவங்களையொட்டி இன்னொரு புறம் அமெரிக்க உளவுத் துறையான CIA, ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட பல விஞ்ஞானிகளைக் கொண்டு, Project Paperclip என்ற பெயரில் இன்னோர் இரகசிய செயல்திட்டத்தை ஆரம்பித்தது. இந்த ஆய்வுக்கு அது தேவையில்லை என்பதால், அதை விட்டு விட்டு மீண்டும் விசயத்துக்கு வருவோம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்

Episode 16: Operation Highjump




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..