Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 16
Posted By:Hajas On 10/9/2016 6:40:11 AM

buy sertraline

buy sertraline uk

 

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

தொடர் 2: வேற்றுக்கிரகவாசிகள்

Episode 15: 2ம் உலகப்போர்

Episode 16: Operation Highjump

 

Operation Highjump எனும் இந்த இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடித்து நாடு திரும்புவதற்காக அமெரிக்க அரசாங்கம் கணிப்பிட்டு, இதற்காக ஒதுக்கிய காலக்கெடு 6 – 8 மாதங்களாகவே இருந்தது. ஏனெனில், தென் துருவத்துக்குச் சென்று, முதலில் நாசிகளோடு யுத்தம் செய்து, அவர்களை நிர்மூலமாக்க வேண்டும்; அதன் பிறகு அவர்கள் வசம் இருக்கக் கூடிய பறக்கும் தட்டுக்கள், அவற்றின் தொழினுட்பங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்று கூட விடாமல் தேடிக் கண்டுபிடித்துக் கைப்பற்ற வேண்டும்; பிறகு அவற்றையெல்லாம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவே திரும்ப அமெரிக்காவுக்குக் கொண்டு வரவும் வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சொதப்பாமல் செய்து முடிப்பதற்குக் குறைந்த பட்சம் 6 – 8 மாதங்கள் அமெரிக்கக் கடற்படைப் பிரிவுக்குத் தேவைப்படும் என்பது தான் இராணுவத்தின் கணிப்பாக இருந்தது. எனவே தான் இந்தக் காலக்கெடு ஒதுக்கப்பட்டது. இவ்வளவு காலத்தையும் தென் துருவத்தில் கழிப்பதற்கு ஏற்ற விதத்திலேயே தேவைப்படும் பொருட்கள், தளவாடங்கள் ஆகிய அனைத்தும் கூடவே அனுப்பப்பட்டன.

ஆனால், உண்மையில் அண்ட்டார்க்டிக்கில் நடந்ததோ இவர்கள் முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம். வெறும் 8 வாரங்களிலேயே (இரண்டு மாதங்கள்) எல்லாமே முடிந்து விட்டது. திட்டமிட்டுக் கட்டம் கட்டமாகக் காய் நகர்த்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட முக்கியமான இந்த இராணுவ நடவடிக்கை மொத்தமுமே ஒருசில வாரங்களில் தலைகீழாக மாறிப் போனது. எட்டாவது வாரத்திலேயே படு தோல்வியைச் சந்தித்த நிலையில் சின்னாபின்னமாக்கப்பட்ட மிச்ச மீதி இராணுவத்தோடு அமெரிக்கக் கடற்படைப் பிரிவு தலை தப்பினால் போதும் என்று அங்கிருந்து ஓட்டம் எடுத்தது.

அமெரிக்கக் கடற்படைப் பிரிவின் பல வீரர்களை இழந்தும், பெறுமதி மிக்க பல யுத்தக் கப்பல்களும், கிட்டத்தட்ட அத்தனை யுத்த விமானங்களும் ஒருசில நாட்களிலேயே சுக்கு நூறாக்கப் பட்டும், எதிரிகளிடம் அமெரிக்கா படுதோல்வியடைந்தது. இதற்குக் காரணம், அண்ட்டார்க்டிக்கில் இருந்த நாசிகள் கூட இருந்த சில விசித்திரமான இராணுவத் தொழினுட்பங்கள் தாம். இதுவரை தாம் வாழ்வில் பார்த்திராத சில விசித்திரமான ஆயுதங்கள் மூலம் அமெரிக்க விமானங்களும் கப்பல்களும் தாறுமாறாகத் தாக்கப் பட்டன. அந்த ஆயுதங்களுக்கு எந்த விதத்திலும் அமெரிக்கப் படைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவை தொழினுட்பத்தில் நூதனமானவையாக இருந்தன. மேலும், பல வேற்றுக்கிரகப் பறக்கும் தட்டுக்களும் நாசிகளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு அமெரிக்கப் படை மீது தொடர்த் தாக்குதல்களை நடத்தின. திக்குமுக்காடிப் போன அமெரிக்கப் படைகள் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருப்பதற்குள்ளேயே பாதிப் படையை இழந்து விட்டிருந்தது.

இனியும் அங்கிருந்தால், ஒருவர் கூட உயிரோடு வீடு போய்ச் சேர முடியாது என்பதை அப்போதே உணர்ந்து கொண்ட அமெரிக்க இராணுவம், வேறு வழியில்லாமல் அடுத்த கணமே இருப்பதை வாரிச் சுருட்டிக் கொண்டு பிடறியில் கால் பட ஓட்டமெடுக்கத் தொடங்கியது.

மிச்சம் மீதியிருந்த படைப்பிரிவோடு அண்ட்டார்க்டிக்கிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்லும் வழியில், ஆபிரிக்கக் கரையோர நாடுகளுள் ஒன்றான சிலி துறைமுகத்தில் அமெரிக்கக் கப்பல்கள் சில நாட்கள் நங்கூரமிட்டிருந்தன. இதன் போது, அங்கு அட்மிரல் ரிச்சர்ட் பர்ட் ஒரு மீடியாவுக்குப் பேட்டி கொடுத்தார். அந்த நாட்டின் பத்திரிகைகளில் ஒன்றான “El Mercurio” எனும் பத்திரிகை நிருபர் Lee van Atta என்பவரே அட்மிரல் ரிச்சர்ட் பர்டைப் பேட்டி கண்டார்.

இந்தப் பேட்டியின் போது அட்மிரல் ரிச்சர்ட் பர்ட் சொன்ன சில வார்த்தைகள், அவற்றைக் கேள்விப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விடத் தொடங்கின. அமெரிக்காவின் இந்தப் பயணம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த பலரது கவனத்தையும் இந்தப் பேட்டி குறித்த செய்திகள் வெகுவாக ஈர்க்கத் தொடங்கின. இதன் விளைவாகப் பலரும் இது குறித்துத் தேடவும் தொடங்கி விட்டார்கள்.

இவ்வாறு பல சர்ச்சைகளைக் கிளப்பிய இந்தப் பேட்டியின் போது அட்மிரல் ரிச்சர்ட் பர்ட் வெளியிட்ட கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு தான் அமைந்திருந்தது:

“நம்மால் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக நாம் பல பெறுமதியான படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டோம்.”

“இரண்டாம் உலகப் போர் முடிந்து விட்டதென்று இனி நாம் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாது. இன்னொரு யுத்தத்துக்கு இப்பொழுதே அமெரிக்கா ஆயத்தமாகிக் கொள்வது தான் சிறந்தது என்பதே எனது அனுபவத்தையொட்டிய அபிப்பிராயம்.”

“எதிர்வரக் கூடிய இந்த யுத்தமானது, இதுவரை மனித சமூகம் செய்த யுத்தங்களைப் போல் நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தமாக இருக்காது. மாறாக, துருவப் பிரதேசங்களில் இருந்து வரும் புதுவிதமான எதிரிகளோடு தான் நாம் யுத்தம் செய்ய வேண்டியிருக்கும். மேலும், இந்தப் புது எதிரிகளைப் பொருத்தவரை, அவர்களது வானூர்திகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலோ, தொழினுட்பமோ எமது விமானங்களுக்கு இருக்காது. வட துருவத்திலிருந்து தென் துருவத்துக்கும், தென் துருவத்திலிருந்து வட துருவத்துக்கும் இடையில் சில நிமிடப் பொழுதுகளுக்குள் தங்கு தடையின்றி, அனாயாசமாக மாறி மாறிப் பயணிக்கும் அளவுக்கு அவர்களது வானூர்திகளின் ஆற்றல்கள் இருக்கும்.”

அட்மிரல் ரிச்சர்ட் பர்ட் இன் இந்தக் கருத்துக்கள், இது குறித்து அவதானித்துக் கொண்டிருந்தோர் மத்தியில் பல கேள்விக்குறிகளைத் தோற்றுவித்து விட்டன. இது அமெரிக்காவுக்கு இன்னொரு தலையிடியாக மாறி விட்டது. இந்தப் பேட்டி குறித்த சம்பவங்களை மூடி மறைப்பதற்கு அமெரிக்கா மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டியிருந்தது. பல முயற்சிகளின் பின், வழமை போலவே இந்தப் பேட்டி குறித்த செய்தியும் மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டுக் குழிதோண்டிப் புதைக்கப் பட்டது.

நாடு திரும்பிய பின், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியால் வெள்ளை மாளிகைக்கு அட்மிரல் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அங்கு ஜனாதிபதியோரு அந்தரங்கமான சில கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப் பட்டார். இந்தக் கலந்துரையாடல்களின் பின்னர், அண்ட்டார்க்டிக்கில் நடந்த சம்பவம் குறித்தும், சிலி பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியைக் குறித்தும் எந்த மேடியாவிடமும் அதன் பிறகு அவர் வாய் திறக்கவே இல்லை. கடைசி வரை இது விசயத்தில் மௌனத்தையே கடைப்பிடித்தார்.

இதற்கிடையில்.... 

ஏரியா 51 இல் இருக்கும் இரகசிய இராணுவத் தளத்தில் வேற்றுக்கிரகவாசிகளோடு நடத்திக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், கூட்டு முயற்சிகள் எல்லாம்... அமெரிக்கா எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மெல்ல மெல்லப் பாதகமான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப் பட்டிருந்த சில உடன்படிக்கைகளைக் கூட வேற்றுக் கிரகவாசிகள் மீறும் விதத்தில் நடந்து கொள்ளத் தொடங்கியதை அமெரிக்கா அவதானித்தது.

அமெரிக்காவின் கணக்குகள் இங்கும் தப்புக் கணக்குகளாக மாறிக் கொண்டிருந்தன. அமெரிக்கா ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தது போல் வேற்றுக் கிரகவாசிகள் அவ்வளவு நல்லவர்கள் கிடையாது என்பதையும் அமெரிக்கா கண்டுகொள்ளத் தொடங்கியது. அவர்களது செயற்பாடுகளுக்குப் பின்னால் பல உள்நோக்கங்கள் இருப்பதை மெல்ல மெல்ல அமெரிக்க இரகசிய அரசு புரிந்து கொள்ளத் தொடங்கியது.

இதன் விளைவாக சுதாகரித்துக் கொண்ட அமெரிக்கா, இந்த வேற்றுக்கிரகவாசிகளின் இரகசியத் திட்டங்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டும், தாம் விட்ட சில தவறுகளின் பின்விளைவுகளைத் தவிந்து கொள்ளும் பொருட்டும் தனது தீர்மானங்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

நாள் செல்லச் செல்ல இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் எதிகளாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். அன்று தொடங்கிய இந்தப் பணிப்போர் இன்று வரை நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால், உத்தியோகபூர்வமாக யுத்தம் என்ற அளவுக்கு மோதிக்கொள்ள இரண்டு தரப்பினரும் இதுவரை துணியவில்லை. இதற்கும் சில காரணங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

ஒருபுறம், அமெரிக்கா போன்ற நாடுகளைப் பொருத்தவரை வேற்றுக் கிரகவாசிகள் மீது உத்தியோகபூர்வமாகத் தாக்குதல் தொடுப்பதற்கு, இவர்கள் பயப்படக் காரணம், அவர்களது தொழினுட்ப வளர்ச்சியின் மீது இருக்கும் அச்சம் தான். வேற்றுக்கிரகவாசிகளது உண்மையான பூர்வீகம் பற்றியும், அவர்களது முழுப் பலம் என்னவென்பது பற்றியும் சரியான அறிவு இல்லாத நிலையில் அவர்களோடு மோதுவது என்பது, ஆழம் அறியாமல் காலை வைப்பது போலாகி விடுமோ என்ற எச்சரிக்கை உணர்விலேயே வேற்றுக்கிரகவாசிகள் விடயத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இதுவரை திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

மறுபுறம், வேற்றுக்கிரகவாசிகளைப் பொருத்தவரை, அவர்களது தொழினுட்பங்களும், பறக்கும் தட்டுக்களது ஆற்றல்களும் மனித தொழினுட்பங்களை விடப் பல மடங்கு அபாரமாக இருந்தாலும், மனிதர்களோடு உத்தியோகபூர்வமாக யுத்தப் பிரகடனம் செய்வதை அவர்களும் பயப்படத் தான் செய்கிறார்கள். ஏனெனில், என்ன தான் தொழினுட்பத்தில் அவர்கள் முன்னேறியவர்களாக இருந்தாலும், மனிதன் வசம் இருக்கக் கூடிய ஒருசில தொழினுட்பங்களுக்கு அவர்களது பறக்கும் தட்டுக்களை வீழ்த்தக் கூடிய ஆற்றல்கள் இருப்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு அமெரிக்க இராணுவம் போன்றவற்றின் வசம் இருக்கும் அதி சக்தி வாய்ந்த ராடார் போன்ற கருவிகளிலிருந்து வெளிப்படக் கூடிய சில கதிர்களின் தாக்கத்தால் வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டுக்கள் செயலிழப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதை இரு தரப்பினரும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். ரொஸ்வெல் பறக்கும் தட்டு விபத்துச் சம்பவம் கூட, அந்தப் பிரதேசத்தில் இருந்த அமெரிக்க ராடார் மையத்திலிருந்து புறப்பட்ட ராடார் கதிர்களால் எதிர்பாராதவிதமாகத் தாக்கப்பட்டே ரொஸ்வெல் பறக்கும் தட்டுக்கள் வீழ்ந்தன என்று கூட ஒருசிலர் அபிப்பிராயப் படுவதுண்டு.

மேலும், மனிதர்களது பிரதான ஆயுதமாக இருக்கும் அணு ஆயுதங்கள் விடயத்தில் வேற்றுக் கிரகவாசிகளுக்கும் கொஞ்சம் அச்சம் இருக்கிறது என்ற உண்மையை அவர்களது நடவடிக்கைகளே பிற்காலத்தில் காட்டிக் கொடுத்து விட்டன. உதாரணத்துக்கு, 1957 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27, ஆகஸ்ட் 30, மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தினங்களில் தென் துருவத்தை அண்டிய வான வெளியில் தொடர்ச்சியாக அமெரிக்கா வெடிக்க வைத்த மூன்று அணுகுண்டுகளும் வெடித்த பிறகு, அனேகமான பறக்கும் தட்டுக்களது நடமாட்டங்களெல்லாம் அமெரிக்க ராணுவத்தின் அணு ஆயுதக் கிடங்குகளைச் சுற்றி வட்டமிடுவதிலும், நோட்டமிடுவதிலும், வேவு பார்ப்பதிலுமே அதிகம் குறியாக இருந்ததை அமெரிக்கா மோப்பம் பிடித்து விட்டிருந்தது. இதையொட்டி மேலும் ஆய்வுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல; வேற்றுக் கிரகவாசிகளுக்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியனவே என்ற உண்மை உறுதிப் படுத்தப் பட்டது.

இவ்வாறு இரு சாராரும் ஒருவரையொருவர் அஞ்சும் விதத்தில் இரு சாராரிடமும் இருக்கும் பலவீனங்களைக் கருத்திற் கொண்டு, நேரடி யுத்தத்தை இரு தரப்புமே தவிர்ந்து தான் வருகின்றனர். இருந்தாலும் அவ்வப்போது எதிர்பாராத சிறு சிறு கைகலப்புகள் ஏற்படத் தான் செய்கின்றன. அதே போல் அவ்வப்போது சில இரகசியப் பேச்சுவார்த்தைகளும் கூட இதுவரை நடக்கத் தான் செய்கின்றன. என்ன பேசிக் கொள்கிறார்கள், அவர்களுக்குள் என்ன தான் உண்மையில் நடந்து கொண்டிருக்கிறது போன்ற பல தகவல்கள் இதுவரை மர்மமாகவே இருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க, தென் துருவத்தைப் பொருத்த வரை, Operation Highjump இல் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகும் அமெரிக்கா விட்டுக்கொடுக்கவில்லை. அதன் பிறகும் அமெரிக்கா, தென் துருவத்தைக் குறிவைத்துத் பல இராணுவ நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொள்ளத் தான் செய்தது. கூடவே பிரித்தானியா, ரஷ்யா போன்ற மற்றும் பல வல்லரசு நாடுகளும் கூட தென் துருவத்துக்கான நடவடிக்கைகளில் அமெரிக்காவோடு இணைந்து கொள்ளத் தொடங்கின.

இறுதியில் எப்படியோ, சமாதானமான ஓர் அடிப்படையில் அண்ட்டார்க்டிக் கண்டத்தில் இவர்களும் காலூன்றி விட்டார்கள். அதன் பிறகு “அண்ட்டார்க்டிக் ஒப்பந்தம்” எனும் ஓர் ஒப்பந்தத்தின் மூலம், “இனிமேல் யாரும் அண்ட்டார்க்டிக் கண்டத்துக்கு ஆயுதபாணியாகச் செல்லத் தடை” என்ற ஒரு சர்வதேச நிலைபாட்டையும் எடுத்துக் கொண்டார்கள். இந்த நடவடிக்கைகளுக்கான உள் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

அதே நேரம், ஏற்கனவே தென் துருவத்தில் இராணுவத் தளம் அமைத்திருந்த ஜேர்மன் நாசிகளுக்குப் பிறகு என்ன நடந்ததென்றும் சரியாகத் தெரியவில்லை. அதாவது, அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளது கூட்டு முயற்சியில் பிற்காலத்தில் தென் துருவத்தில் மேள்கொள்ளப்பட்ட பல இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, அங்கிருந்த நாசிகளுக்கு என்ன நடந்ததென்பது மர்மமாகவெ இருக்கிறது.

தென் துருவத்தில் தளம் அமைத்த இந்த ஜேர்மன் நாசிகளைக் குறித்து ஆதாரபூர்வமான எந்தவிதமான தடயங்களும் இன்று இல்லை. ஒரேயொரு கதை மட்டுமே இது குறித்துச் சொல்லப்படுகிறது; ஆனால், இந்தக் கதையை உண்மையென்று நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லாதிருப்பதால், எடுத்த எடுப்பிலேயே இந்தக் கதையை நம்பவும் முடியவில்லை; அதே நேரம் ஒரேயடியாக இந்தக் கதையைப் புறக்கணித்து விடவும் முடியவில்லை. கதை இது தான்:

அமெரிக்காவோடு நடந்த கைகலப்புகளுக்குப் பின்னர், நாசிகள், தென் துருவத்தில் நிலத்துக்கு அடியில் மிகவும் ஆழத்தில் மனிதர்கள் வாழத் தகுந்த ஒரு பாரிய பிரதேசத்தைக் கண்டுபிடித்ததாகவும்; அங்கு போய் இவர்கள் நிரந்தரமாகக் குடியமர்ந்து விட்டதாகவும்; இந்தப் புதிய குடியிருப்புக்கு “புதிய பெர்லின்” என்று பெயரிட்டதகவும் இந்தக் கதை குறிப்பிடுகிறது. மேலும், இவ்வாறு புலம்பெயர்ந்த பின், நாசிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சமாதானம் ஏற்பட்டது என்றும், இதையொட்டி, நாசிகளின் தூதரகம் ஒன்று மிகவும் இரகசியமான முறையில் நியூ யோர்க் நகரில், பெயர் குறிப்பிட முடியாத ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தின் இரண்டு மாடிகளுக்கு இடையில் ஓர் இரகசிய மாடி அமைக்கப் பட்டு, அந்த மாடியிலேயே இவர்களது தூதரகம் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும், இலுமினாட்டிகளோடு மட்டுமே இவர்கள் இரகசியத் தொடர்புகளை இன்று வரை பேணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இந்தக் கதை கூறுகிறது.

இந்தக் கதை எவ்வளவு தூரத்துக்கு நம்பக் கூடியதாக இருக்கிறது என்ற தீர்மானத்தை இப்பொழுதே நாம் எடுக்க வேண்டியதில்லை. ஏனெனில், இந்தத் தொடரின் நான்காவது பாகத்தில் இது குறித்து இன்னும் சில தகவல்கள் சொல்லப்படவிருக்கின்றன. அவற்றையும் மொத்தமாகப் பார்த்து முடித்த பிறகே இது குறித்து ஒரு முடிவுக்கு வருவது சிறந்தது என்பதே எனது அபிப்பிராயம். இப்போதைக்கு இதை இத்தோடு நிறுத்திக் கொண்டு மீண்டும் விசயத்துக்கு வரலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 17: சிக்மா செயல்திட்டம்




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..