Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
6 ஆழகான குட்டி உண்மை சம்பவங்கள் .படிக்கும் போது பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சி வச பட வைக்கும்
Posted By:peer On 12/28/2016 1:27:46 AM

discount card prescription

prescription coupons link

சம்பவம்-1
----------------
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே
பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன
என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம்
தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப
பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த
வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள்
ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம்
காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த
வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம்
இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை
தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில
நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட
வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடதிற்கள.

சம்பவம்-2
----------------
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த
அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்
வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும்
கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து
போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த
முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்
இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும்
இருக்கலாம். எவ்வளவு அனுபவமும்
இருக்கலாம்..அறிவு விசித்திரமாகவும்
இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி
கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்
தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்
,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய
கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3
----------------
ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு
ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக
இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது.
அதனால், அந்த விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப்
பார்த்து,
“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து
தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச்
சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக் கொன்றுவிட
வேண்டியது தான்” என்று சொல்லியபடி
குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச்
சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக்
கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக்
குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக்
கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,
குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,

அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம்
கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க
முயற்சி செய்.
நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக்
கொன்று விடுவார்கள்" என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.
அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு,
அந்த விவசாயிடம் "நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி,
மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று
சொல்லிச் சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,
“நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக்
கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.
அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக
எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக
அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து
போகும்படியாக குதிரை ஓடியது.
மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை
அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத்
தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த
மருந்துதான் காரணம்.

என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு
நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும்.
இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து
கொண்டாடி விடுவோம்” என்றான்.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து
நடந்தாலும் மருத்துவர் கொடுத்த
மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....
இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை
கிடைத்தது என்பதை உணராமல், பலரும்
உண்மையைப் பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம்-4
----------------
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு
பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ
ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர்
கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை.

'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்
டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த
காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ
காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண்
கலங்கினார். தோளில் கிடந்த துண்டை
எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு,
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்
கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க
பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச்
சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது
என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை
விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில்
என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக
இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே
பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய
அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும்
இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி
அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது.. அவர்களை பின்தொடர்ந்தேன்..

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம்
அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி
காத்திருந்தது..

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள்
சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய
சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்.
அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன்
மகனை கீழே கிடத்தி , தலையிலையும்
நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி
அழுதார்.

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன
காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும்
தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில், இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம்
பணம் இல்லை என்று.

உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில்
புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு
தெரியாமல் இறந்து போன தன் மகனை
மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த
அந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது.

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை
என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம்
தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..

சம்பவம்-5
----------------
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு
வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்." ஒரு கட்டு
கீரை என்ன விலை....?"" ஓரணாம்மா""ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.

அரையணான்னு சொல்லி நாலு கட்டு
கொடுத்திட்டு போ""இல்லம்மா வராதும்மா"."
அதெல்லாம் முடியாது. அரையணாதான்".
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை
எடுத்துக்கொண்டுசிறிது தூரம்
சென்றுவிட்டு"மேல காலணா போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"முடியவே
முடியாது. கட்டுக்கு அரையணாதான்
தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா
உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு
கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்
வைக்க போகும் போது கீழே சரிந்தாள்."என்ன
டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று
அந்த தாய் கேட்க"இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்""சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும்,
சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த
தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
ரெண்டரையணா வருதும்மா.....?என்று
கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல
தர்மம் பார்க்ககூடாது,தர்மத்துல வியாபாரம்
பார்க்ககூடாதுப்பா" என்று கூறினாள்.........
இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம்-6
----------------
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென
மழைச் சாரலும் வீசியது. வேகமாக
நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக
ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார். மழைச்
சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும்
இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின்
ஒரு பக்கத்தில் நின்று கணவனை
துணைக்கு அழைத்தால். இருட்டில்
எதுவும் தெரியவில்லை. மின்னல்
மின்னிய போது கணவன் பாலத்தின்
மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது
தெரிந்தது.
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன்
திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்கு
அழுகையாய் வந்தது. இப்படி பயந்து
அழைக்கிறேன். என்ன மனிதர் இவர்
திரும்பி கூட பார்க்கவில்லையே என
மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து
கொண்டே கண்களை மூடிக் கொண்டு
கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல
மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை
கடந்துவிட்டாள். கணவரை
கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு
கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து
தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்
பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்.

ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். தூரத்தில்
பார்க்கும் போது அன்பு இல்லாதவர்
போல இருந்தாலும் அருகில் சென்று
பார்க்கும் போது தான் அவரின் அன்பு
தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும்
அருகில் வரும்போதே பொருள்
புரிகிறது.




Moral Story
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..