Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கோ யாருக்கு மாதா?
Posted By:peer On 4/4/2017 1:50:06 PM

buy naltrexone online india

buy naltrexone

நாட்டு வளர்ச்சியா? மாட்டு இறைச்சியா?
~<<<<~~<<<<~~~
பசுப்பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் சுவாமி விவேகானந்தரிடம் தம் இயக்கத்துக்கு நிதியுதவி கேட்டு வந்தார்.
அப்பொழுது நடந்த உரையாடல்

சுவாமி: உங்கள் சங்கத்தின் நோக்கமென்ன?

அவர்: நாங்கள் எங்கள் கோமாதாக்களை கசாப்புக்கார்ர்கள் வாங்கி வதைபுரியா வண்ணம் பார்ப்பதுடன் நோயுற்றும் கிழமாயும் அங்ககீனமாயுமுள்ள பசுக்களைக் காப்பாற்றுகின்றோம்.

சுவாமி: இது சிறந்த நோக்கந்தான்.உங்கள் வருமான வழிகள் எவை?

அவர்:தங்களைப் போன்ற காருண்ய சீலர்கள்அளிக்கும் நன்கொடைகள் மூலம் மேற்படி வேலை நடைபெற்று வருகிறது.

சுவாமி: உங்களிடம் இப்போதுள்ள மூலதனம் எவ்வளவு?

அவர்: மார்வாடி வியாபாரிகள்தான் இச்சபையின் காவலர்கள்.அவர்கள் ஏராளமாகப் பொருளுதவி புரிந்துள்ளனர்.

சுவாமி:மத்திய இந்தியாவில் மிக்கக் கொடிய பஞ்சம் மக்களைக் கொள்ளை கொண்டு போகின்றது.பட்டினியால் இறந்தோர் ஒன்பது லட்சம்பேர் என்று அரசு கூறுகிறதே. உணவின்றி மரிப்போரைக் காக்க உம் சங்கம் ஏதேனும் முயற்சி செய்திருக்கிறதா?

அவர்:பஞ்சம் போன்றவற்றுக்கு நாங்கள் உதவுவதில்லை.எங்கள் நோக்கமெல்லாம் பசுப் பாதுகாப்பு மட்டுமே.

சுவாமி:லட்சக்கணக்கான நமது சகோதர்ர்கள்,
சமயத்தவர்கள் வறுமையால் மடியும் போது ஓர் ஆழாக்கு அரிசி கொடுத்து உதவுவது கடமையென்று உங்கள் சங்கத்துக்கு தோன்றாத விந்தைதான் என்ன?

அவர்:அது கர்மவினை.அவர்கள் செய்த பாவத்திற்காக இந்த பஞ்சம் வந்திருக்கிறது.தம் வினைக்கான துன்பத்தை அவர்கள் அனுபவிக்கின்றனர்.

சுவாமி:இப்படி கொடிய வார்த்தைகளைச் சொல்ல உமக்கு வெட்கமாக இல்லையா?அப்படிப் பார்த்தால் பசுக்களும் தமது முன் கர்மத்தின் பயனாய் கசாப்புக்காரனின் வாளுக்கோ பிணிக்கோ ஆளாகின்றன.எனவே அவற்றுக்கு உதவி செய்திட வேண்டிய அவசியமில்லை.

அவர்:தாங்கள் கூறுவதும் சரியே.ஆனால் நமது சாஸ்திரங்கள் "கோ நமது தாய்" என்கின்றனவே.

சுவாமி:ஆம். அவை உமது தாய்கள் என்பதை நான் அறிவேன்.உங்களைப் போன்ற புத்தி உள்ளவர்களை வேறு யார் பெறமுடியும்!

( ஆதாரம்:திரிசரபுரம் தேசியக் கலாசாலைத் தமிழாசிரியர் உறையூர் எஸ்.வி.வரதராஜய்யங்கார்
எழுதிய "ஶ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் விரிவான திவ்ய சரித்திரம்.பக்கம்: 477,478,479.)




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..