Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 52
Posted By:Hajas On 5/5/2017 10:59:38 PM

buy naltrexone online cheap

buy naltrexone no prescription blog.planetcalamari.com

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 51: (Nordic Aliens தொடர்ச்சி 05)

Episode 52: (Nordic Aliens தொடர்ச்சி 06)

Image may contain: 3 people, text
.
கட்டம் 2 - Bill Chalker இன் ஆய்வு:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பீட்டரின் சம்பவத்தை ஆய்வு செய்யப் புகுந்த பில், எடுத்த எடுப்பிலேயே சம்பவம் சார்ந்த சான்றுகளை ஆய்வு செய்வதற்கு பதிலாக, முதலில் பீட்டரின் பின்புலம் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். எனவே, பீட்டரின் பூர்வீகத்திலிருந்தே ஆய்வை ஆரம்பித்தார். இவரது விரிவான ஆய்வுகளின் விளைவாக பீட்டர் குறித்த இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அவற்றுள் ஒருசிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.

பீட்டர் கூரியின் பிறப்பிடம் அவுஸ்திரேலியா அல்ல. அவர் லெபனான் நாட்டச் சேர்ந்தவர். 1964ம் ஆண்டு லெபனானில் பிறந்த இவர், 1973ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, 1981 இல் விவியன் எனும் அவுஸ்திரேலியப் பெண்ணைச் சந்தித்தார். இவர்கள் இருவரும் காதலித்து, இறுதியில் 1990 இல் திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

பீட்டரின் வாழ்வில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஏற்பட்ட முதல் அனுபவம், லெபனானில் 1971ம் ஆண்டு, அவர் 7 வயதுச் சிறுவனாக இருந்த போதே ஏற்பட்டது. பீட்டரும், அவர் வயதை ஒத்த இன்னும் ஏழு சிறுவர்களும் பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு விளையாடுவதற்காக வழமை போல் சென்றார்கள். மேலே மொட்டை மாடிக்கு ஏறிச் செல்லும் வாசல் ஒடுக்கமாக இருந்ததால், ஒவ்வொருவராகத் தான் அதனூடாக மேலே செல்வது வழக்கம். வரிசையாக ஒவ்வொருவராக ஏறிய பிறகு கடைசியாக பீட்டர் மேலே ஏறி மொட்டை மாடியை அடைந்த போது, ஏற்கனவே மேலே சென்ற ஏழு சிறுவர்களும் எந்த அசைவும் இல்லாமல் பதுமைகளைப் போல் உறைந்து போய் உணர்விழந்து நின்று கொண்டிருந்ததையும், அவர்களுக்கு நேர் மேலாக அந்தரத்தில் மிகவும் நெருக்கத்தில் முட்டையின் வடிவில் ஓர் ஊர்தி நின்று கொண்டிருந்ததையும் பீட்டர் கண்டார். இந்தக் காட்சியைக் கண்டது மட்டும் தான் பீட்டருக்கு ஞாபகமிருந்தது. அடுத்த நொடியில் என்ன நடந்ததென்று எதுவுமே தெரியவில்லை.

சற்று நேரம் கழித்து பீட்டர் உட்பட எட்டுப் பேரும் ஒரே நேரத்தில் மொட்டை மாடிக்குப் பதிலாக கீழே தரையில் நின்று கொண்டிருப்பதை ஏல காலத்தில் உணர்ந்தனர். மொட்டை மாடியில் இறுதியாகப் பார்த்த காட்சிக்கும், சற்று நேரம் கழித்து கீழே தரையில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்த தருணத்துக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை எட்டுப் பேராலுமே மீட்டிப் பார்க்க முடியவில்லை. எவ்வளவு நேரம் மேலே இருந்தோம்? மேலே இருந்து எப்படிக் கீழே வந்தோம்? இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது? என்பன போன்ற பல கேள்விகளுடன் எட்டுச் சிறுவர்களும் ஒருவரையொருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டார்களே தவிர, அதில் ஒருவருக்குக் கூட சம்பவம் குறித்த எந்த ஞாபகமும் இருக்கவில்லை.

பிற்காலத்தில் பீட்டர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த பிறகும் கூட அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் அவர் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருந்தன. உதாரணத்துக்கு 1994ம் ஆண்டில் ஒரு தடவை பிரகாசமான வெளிச்சத்தோடும், சத்தத்தோடும் கூடிய ஒரு வெடிப்பு போன்ற ஒரு சம்பவம் வீட்டினுள் நிகழ்ந்த போது அவரது மனைவி விவியன் கூட அதற்கு சாட்சியாக இருந்தார்.

இன்னொரு தடவை கட்டிலில் மனைவியோடு தூங்கிக் கொண்டிருந்த போது பல ஊசிகளால் ஏக காலத்தில் குத்தப் பட்டது போன்ற உணர்வோடு மொத்த உடலும் செயலிழந்து போக, தன்னை ஏதோ ஒன்று மூடிக் கொண்டிருப்பதைப் பீட்டர் உணரவே, பக்கத்தில் படுத்திருந்த மனைவியைத் தட்டி எழுப்ப முயன்றார். எவ்வளவோ முயன்ற போதும் மனைவியைத் தொடுவதற்குக் கையைக் கூட நகர்த்த முடியவில்லை. நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு கஷ்டப்பட்டு மனைவியைத் தொட்டதும், மறு கணமே, தன்னை முழுவதுமாக மூடிக் கொண்டிருந்த விபரிக்க முடியாத அது, ஒரே நொடியில் மாயமாக விலகிச் சென்றதாக பீட்டர் குறிப்பிட்டார். இதைப் பற்றி விவரிக்கும் போது, தனது மொத்த உடலிலிருந்தும் ஏதோ ஒன்றை யாரோ உறிஞ்சிக் கொண்டிருந்ததைப் போல் உணர முடிந்ததாகவும், மனைவியைத் தொட்ட மறு கணமே இந்த உறிஞ்சல் உணர்வு சுத்தமாக இல்லாமல் போனதாகவும் பீட்டர் குறிப்பிட்டார். 

இதன் பிறகு இன்னொரு தடவை 1996 நவம்பர் மாதம், இன்னொரு குறிப்பிடத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. இரவு கட்டிலில் தனது மனைவியோடு உறந்திக் கொண்டிருக்கும் போது திடீரென்று அறையினுள் ஏதோ ஓர் இனம்புரியாத சக்தி ஊடுறுவி, அறை முழுவது பரவுவதைப் போல் உணர்ந்த பீட்டர் திடுக்கிட்டுக் கண் விழித்தார். கண் திறந்து பார்த்த போது, நீண்ட போர்வைகளால் உடல், தலை எல்லாவற்றையும் முழுமையாகப் போர்த்திக்கொண்டது போன்ற தோற்றத்தில் குள்ளமான பல உருவங்கள் அறையிலிருக்கும் முகம்பார்க்கும் கண்ணாடியினுள்ளிருந்து ஒவ்வொன்றாக வெளியாகி அறையினுள் பிரவேசித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.

கண்ணாடியினுள்ளிருந்து அறைக்குள் பிரவேசித்த இந்த உருவங்கள் பக்கத்தில் நெருங்க நெருங்க பீட்டரின் உடல் முழுவதும் அசைய முடியாதவாறு செயலிழந்து கொண்டே போனதை அவரால் உணர முடிந்தது. முழு உடலும் செயலிழந்து போன பின், தனது உடல் கட்டிலிலிருந்து மேலெழும்பி அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதையும், கால் பக்கம் கண்ணாடியை நோக்கியவாறு தனது உடல் மிதந்து கொண்டே கண்ணாடி நோக்கிச் செல்வதையும் பீட்டர் செய்வதறியாது அவதானித்துக் கொண்டிருந்தார். தனக்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பீட்டரால் தெளிவாக உணர முடிந்த போதும், எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்க முடியாதவாறு தனது அவயவங்களெல்லாம் செயலிழந்து தான் ஒரு பிணம் போல் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்தரத்தில் மிதந்து கொண்டே கண்ணாடி நோக்கிச் சென்ற பீட்டரின் பாதம் கண்ணாடியைத் தொட்டதும், அது கண்ணாடி போலில்லாமல், ஏதோ நீருக்குள் தனது பாதங்கள் அமிழ்வது போல் பீட்டரால் உணர முடிந்தது. கண்ணாடி திண்மமாக இல்லாமல் ஏதோ திரவம் போல் மென்மையாக இருந்தது. இது நடந்து கொண்டிருந்த அதே கணத்தில் தனது உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போன்ற ஓர் உணர்வும் ஏற்பட்டதாக பீட்டர் குறிப்பிட்டார். இவ்வாறு கண்ணாடியினுள் அமிழ்ந்து கொண்டே சென்ற பீட்டரின் உடல் தலையின் மட்டத்தை அடையும் போது பீட்டரின் சுயநினைவு பறி போய் விட்டது. அதன் பிறகு என்ன நடந்ததென்று எதுவுமே அவருக்குத் தெரியவில்லை. மீண்டும் சுய நினைவுக்குத் திரும்பிய போது, மீண்டும் கட்டிலில் தான் படுத்திருப்பதையே உணர முடிந்தது.

இவ்வாறான பல சம்பவங்கள் பீட்டர் வாழ்வில் நிகழ்ந்ததுண்டு. அவற்றையெல்லாம் யார் கேட்டாலும், உள்ளதை உள்ள படி சொல்வதற்கு அவர் ஒருபோதும் சங்கடப் பட்டதில்லை. ஆனால், 1992 இல் நிகழ்ந்த உடலுறவுச் சம்பவம் குறித்து மட்டும் பீட்டர் நீண்ட நாட்களாக மற்றவருக்கு விபரமாகச் சொல்லாமல் மறைக்கவே முயன்று வந்தார். அவ்வப்போது சம்பவம் குறித்துக் கேட்கப் பட்ட போது கூட அவர் முழுச் சம்பவத்தையும் சொல்லாமல் பாதியை மட்டுமே சொல்பவராக இருந்தார். இந்தச் சம்பவத்தின் தன்மை, அதை அடுத்தவர்களிடம் வெளிப்படையாகச் சொல்ல விடாமல் அவரை அதிக சங்கடத்தில் ஆழ்த்தியதுண்டு.

ஆனால், 1996 இல் இந்தச் சம்பவம் பற்றிய விரிவான ஆய்வில் இறங்கிய Bill Chalker இன் பல விடாமுயற்சிகளுக்குப் பிறகே பீட்டர் இது குறித்து ஓரளவு வாய் திறக்க ஆரம்பித்தார். 1998ம் ஆண்டளவில் இந்தச் சம்பவம் குறித்து ஒளிவு மறைவில்லாமல் கலந்துரையாடும் அளவுக்கு பீட்டர் தைரியமடைந்த பிறகே அவரிடமிருந்து முழுமையான தகவல்களை Bill Chalker இனால் திரட்டிக் கொள்ள முடிந்தது.

இதன் போது, சம்பவத்தின் யதார்த்தத் தன்மையை சந்தேகமின்றி நிரூபித்துக் கொள்ளும் பொருட்டு, வேற்றுக்கிரகவாசியிடமிருந்து பீட்டர் சேகரித்து வைத்திருக்கும் இரண்டு முடி இழைகளையும் விஞ்ஞான ரீதியில் தான் DNA பரிசோதனைகளுக்கு உட்படுத்த விரும்புவதாக Bill Chalker குறிப்பிட்டார். அதற்கு உடனே சம்மதித்த பீட்டர் அதுவரை பத்திரமாக வைத்திருந்த இரண்டு முடிகளையும் Bill Chalker இடம் ஒப்படைத்தார்.

முடி இழைகளின் DNA மர்மம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1998 ஆம் ஆண்டு இரண்டு முடி இழைகளையும் பெற்றுக்கொண்ட Bill Chalker, உயிர்-இரசாயணவியல் (biochemistry) துறையில் தேர்ச்சி பெற்ற ஆய்வாளர்கள் சகிதம் அவற்றை DNA பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். 

“PCR (polymerase Chain Reaction) DNA profiling” எனும் இந்தப் பரிசோதனைகளை நடத்துவதிலும், மேற்பார்வை செய்வதிலும், “Understanding DNA” எனும் நூலை எழுதியவரும், பிரபல DNA ஆய்வாளர்களுள் ஒருவருமான Dr. Horace Drew என்பவரே இந்த DNA ஆய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.

இந்த DNA பரிசோதனைகளின் அடிப்படை நோக்கம், இந்த முடி இழைகளுக்குச் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதாகவே இருந்தது. ஆனால், ஆய்வில் பெறப்பட்ட முடிவுகளோ, பிரச்சினையின் சிக்கல் தன்மையை இன்னும் அதிகரிப்பதாகவே இருந்தன.

ஆய்வின் முதற்கட்டமாக, முடியின் தோற்றத்தை ஆய்வு செய்த போது, அவை, வெள்ளை நிறத்துக்கு மிகவும் நெருக்கமான பொன் நிறம் சார்ந்ததாகவும், அதே நேரம் கண்ணாடித் தன்மை (ஊடாக மறுபக்கம் தெரியக் கூடிய தன்மை) கொண்டதாகவும், மிகவும் மெல்லியதாகவுமே இருந்தன. அதாவது, பீட்டர் குறிப்பிட்ட கதையின் பிரகாரம் இந்த முடி இழைகள், நிச்சயமாக குறிப்பிட்ட வெள்ளை இனப் பெண்ணிடமிருந்தே வந்திருக்க வேண்டும்; பக்கத்திலிருந்த ஆசிய நாட்டுப் பெண்ணிடமிருந்து வந்திருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஆசிய நாட்டுப் பெண்களின் முடிக்கான சாயல் எதுவுமே இந்த முடியில் இல்லை. வட நாட்டு வெள்ளையரின் முடிக்குரிய தன்மைகள் மட்டுமே இந்த முடி இழைகளில் காணப்பட்டன.

ஆனால், DNA பரிசோதனைகளின் முடிவில் பெறப்பட்ட தகவல்களோ இதற்குத் தலைகீழாகவும், மேலும் சுவாரசியமாகவும் இருந்தன. இந்த முடிவுகள் பற்றிய விரிவான விளக்கம் 1999ம் ஆண்டு, Dr. J. Allen Hynek என்பவரின் தலைமையில் சிக்காகோ நகரில் இயங்கும் பறக்கும்தட்டு ஆய்வு மையத்தின் “International UFO Reporter” எனும் பிரசுரத்தில் கூட “Strange Evidence” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. இது குறித்து ஓரளவுக்கு இப்போது பார்க்கலாம்.

முதல் கட்ட DNA பரிசோதனையானது, முடியின் தண்டுப் பகுதியில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதன் போது, ஏதாவதொரு வடநாட்டுப் பெண்ணுக்குரிய உயிரியல் சான்றுகளைத் தான் அவர்கள் அந்தப் பரிசோதனையின் முடிவில் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆய்வின் பெறுபேறுகள் சற்று மாற்றமாகவே இருந்தன. 

ஆய்வின் முடிவுகள் தெளிவைத் தருவதற்குப் பதிலாகப் மேலும் பல கேள்விகளையே எழுப்பின. இவற்றுக்கு விடை காணும் நோக்கத்தில் அதே முடி இழைகள் மீண்டும் ஒரு தடவை DNA பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டன. ஆனால், இந்தத் தடவை முடியின் தண்டுப் பகுதிக்குப் பதிலாக முடியின் வேர்ப்பகுதியே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளையும் தொகுத்து நோக்கிய போது புதிதாக இன்னும் சில பிரச்சினைகள் முளைத்தன. ஒரே முடி இழையில் இரண்டு வகையான DNA கையெழுத்துக்கள் (DNA signatures) இருப்பது கண்டறியப் பட்டது. இது, உயிரியல் நியதிகளுக்கே முரணானது. மனித உயிரியல் நியதிகளின் படி இது அசாத்தியமானது. எனவே இது எப்படி சாத்தியம் என்பது குறித்து ஆய்வு செய்தவர்கள் யோசிக்கலாயினர்.

மேலும், பிரத்தியேகமாக இந்த முடி இழைகளின் கரு DNA இன் (nuclear DNA) ஜீன் தொடரை அவதானித்த போது, வைரஸ் தொற்று சார்ந்த நோய்கள் இந்த முடியின் சொந்தக்காரரைத் தாக்க முடியாதவாறு (Viral resistance) இதன் ஜீன் தொடரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, DNA மீள வடிவமைக்கப் பட்டிருப்பது போல் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக, மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியோடு நேரடியாகத் தொடர்புடைய CCR5 (chemokine receptor type 5) எனும் புரதப் பகுதியில் இதன் ஜீன் தொடரில் பிரத்தியேகமாக இரண்டு ஜீன்கள் அழிக்கப் பட்டிருந்ததையும், எஞ்சியிருந்த ஏனைய ஜீன்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததையும் ஆய்வின் போது அவதானிக்க முடிந்தது. இது எப்படி சாத்தியம்? எனும் இன்னொரு கேள்வி முளைத்தது. ஏனெனில், இன்றைய உலகின் அதி நவீன மரபணு விஞ்ஞானத்தால் கூட இந்தப் பொறிமுறை இதுவரை நூற்றுக்கு நுறு வீதம் சாத்தியமில்லை.

அதாவது, இன்றைய மருத்துவ / மரபணு சார்ந்த விஞ்ஞான உலகில், AIDS நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்புச் சக்திகளை இயல்பிலேயே தமது உடலில் கொண்டிருக்கக் கூடிய ஒருசில அரிதான மனிதர்களின் மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது, அவர்களது DNA இலும் CCR5 புரதப் பகுதியில் இவ்வாறான சில ஜீன் தொடர் மாற்றங்கள் கண்டறியப்பட்டதுண்டு. இவ்வாறான ஆய்வுகள் மூலம் மருத்துவ உலகில் கண்டறியப்பட்ட உண்மை என்னவென்றால், HIV போன்ற வைரஸ் கிருமிகள், T கலங்கள் (T cells) வாயிலாக மனித உடற்கலங்களினுள் நுழைவதற்கு இந்த CCR5 புரதப் பகுதிகளே தலைவாசல்கள் போல் செயல்படுகின்றன என்பது தான்.

இந்த CCR5 புரதப் பகுதியின் ஜீன் தொடரில் முறையான / துல்லியமான சில மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்றால், இவ்வாறான நோய்கள் மனிதனுக்கு ஏற்படுவதை முற்றாகத் தடுக்க முடியுமென்று இன்றைய மரபணு விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால், இன்றிருக்கும் மனித தொழினுட்பங்களை வைத்துக் கொண்டு இதைத் துல்லியமாகச் சாதிப்பதென்பது முடியாத காரியம். அந்த அளவுக்கு மனித விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை என்பது தான் இன்றைய மரபணு விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை.

நிலைமை இவ்வாறிருக்க, 1992ம் ஆண்டு பீட்டரின் பிறப்புறுப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்ட, அதுவும் அவருக்கோ, அவர் மனைவிக்கோ, அல்லது அந்த நாட்டில் வாழும் எந்த மனித இனத்தவருக்குமோ கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத விந்தையான ஒரு மயிர் இழையிலிருக்கும் DNA இல், இந்த CCR5 ஜீன் தொடர் மாற்றம் துல்லியமாக ஏற்படுத்தப் பட்டிருப்பது எப்படி சாத்தியம்?

இந்த ஒரு கேள்வியே, ஆய்வாளர் Bill Chalker, மற்றும் ஆய்வில் ஈடுபட்ட மரபணு நிபுணர்கள் ஆகியோரை வெகுவாக யோசிக்க வைத்து விட்டது. இந்தக் கேள்விக்கு விடை காண்பதாக இருந்தால், முதலில் இந்த முடியிலிருக்கும் இரண்டு DNA கையெழுத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் யாரென்பதைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே அது ஓரளவுக்கேனும் சாத்தியப்படும் என்பதை Bill Chalker உணர்ந்தார். இதன் விளைவாக, அவரது அடுத்த கட்ட ஆய்வு, இரண்டு DNA கையெழுத்துக்களதும் உரிமையாளர்களைத் தேடும் திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

ஏற்கனவே பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட பிரகாரம், இந்த முடியின் ஜீன் தொடர் கட்டமைப்பு, மனித இனத்தின் ஜீன் கட்டமைப்புக்களுக்கே மிகவும் நெருக்கமாக இருந்தது. எனவே, இது ஏதோ ஒரு மனித உடல் சார்ந்த முடி தான் என்பதில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. ஆனால், மாறுபட்ட இரண்டு வகையான DNA கையெழுத்துக்களின் அடிப்படையிலேயே குழப்பம் ஆரம்பித்தது. அதாவது, முடியின் தண்டுப் பகுதிக்குச் சொந்தக் காரர் ஒரு வடநாட்டு வெள்ளையர் என்பதாகவும், முடியின் வேர்ப் பகுதிக்குச் சொந்தக் காரர், சீனப் பிராந்தியத்தில் வாழும் மொங்கலோயிட் (Mongoloid type) ரகத்தைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக இன்றைய நவீன உலக மனித இனத்தவர்களிலேயே மிகவும் அரிதான ஓர் இனமாகக் கருதப்படும் ஓர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதாகவுமே பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

ஆதாவது, எளிய நடையில் இதைக் கூறுவதென்றால், முடியின் தண்டுப் பகுதியின் DNA தகவல்கள், “இந்த முடி ஒரு வட ஐரோப்பிய வெள்ளை இனத்து மனிதருக்கே சொந்தம்” என்று கூறும் அதே வேளை, அதே முடியின் வேர்ப் பகுதியோ, “இல்லை இது ஒரு மொங்கலோயிட் இனத்தைச் சேர்ந்தவருக்கு, அதுவும் குறிப்பாக சீனா – தாய்லாந்து எல்லைப் பிராந்தியங்களுள் ஒன்றான, “யுன்னான்” (Yunnan) எனும் மாகாணத்தையொட்டிய பிரதேசங்களில் மட்டும் வெளியுலகத் தொடர்புகள் அதிகம் இல்லாமல், காட்டுவாசிகளைப் போல் தனித்து வாழக் கூடிய “லாஹு” (Lahu) என்றழைக்கப்படும் ஒரு தனித்துவமான இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான முடி” என்று கூறுவதாகவே இருந்தது.

இது எப்படி சாத்தியம்? என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு பலவாறும் யோசித்த பிறகு, இறுதியில் எடுக்க முடிந்த தீர்மாணம் ஒன்றேயொன்று தான். DNA மட்டத்தில் தொழினுட்ப ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களின் விளைவாக உருவாக்கப்பட்ட ஒரு கலப்பினத்தைச் (Nordic – Asian Hybrid) சார்ந்த ஒருவருக்கு மட்டுமே இந்த முடி சொந்தமாக இருக்க முடியும்; இதைத் தவிர வேறு முகாந்திரங்கள் எதுவுமே இல்லை என்பது தான் ஆய்வாளர் Bill Chalker ஆல் எடுக்க முடிந்த ஒரே முடிவு.

ஆனால், இந்த DNA தரவுகளுக்குப் பொருந்திப் போகக் கூடிய இயற்கையான ஒரு மனித இனம் இதுவரை இந்த உலகில் எங்குமே இல்லை. எனவே, இது இயற்கையான ஒரு மனித இனத்தைச் சேர்ந்த ஒருவரது முடி அல்ல. ஒன்று இது செயற்கையாக (cloning போன்ற ஏதாவதொரு தொழினுட்பத்தின் ஊடாக) உருவாக்கப்பட்ட ஒரு மனித உடலுக்குச் சொந்தமான முடியாக இருக்க வேண்டும். அல்லது இது பீட்டர் குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிளைச் சார்ந்த முடியாகவே இருக்க வேண்டும் என்ற தீர்மாணத்துக்கே Bill Chalker இறுதியில் வந்தார். இவை குறித்த விரிவான விளக்கங்கள் 2005 இல் வெளியிடப்பட்ட “Hair of the Alien” எனும் நூலில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் வாழும் லெபனான் நாட்டுப் பூர்வீகத்தைக் கொண்ட பீட்டருக்கும், அவரோடு உடலுறவு கொள்ள வந்த வடநாட்டு வெள்ளையினப் பெண் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் வெள்ளை முடிக்கும், இது எதற்கும் சம்பந்தமே இல்லாமல் எங்கோ தொலைவில் சீனாவின் எல்லையில் இருக்கும் “லாஹு” எனும் பழங்குடி மக்களுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு என்ன? இந்தக் கேள்விக்கான விடையையும் கண்டறிய வேண்டிய தேவை ஆய்வாளர் Bill Chalker க்கு ஏற்பட்டது. எனவே, இதையொட்டிய இன்னோர் ஆய்வையும் அவர் பிரத்தியேகமாக மேற்கொண்டார். இது பற்றிய விபரங்களை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 52: (Nordic Aliens தொடர்ச்சி 07)




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..