Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   Career Counselling   Technology
  Power of Creator   Religious   Moral Story
  Medical   Kids   Sports
  Quran & Science   Politics   Poetry
  Funny / Jokes   Video   Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
  Others   சுய தொழில்கள்
 
நோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான்
Posted By:peer On 6/3/2017 2:28:53 AM

அருளின் தேவதை

ஆண்டுக்கொருமுறை

கால வீதியில்

காலெடுத்து வைக்கின்றாள் -

சாந்தியின் தூதாக !

 

அவள்தான் ரமழான் ! 

அவள் புன்னகையில் 

ஆயிரம்  பூர்ணிமைகள் !

கண்களிலே 

கருணைச் சுடர்கள் !

 

அவள் 

நான்கு வேதங்களை

ஈன்றளித்த

புனிதத்தாய் !

பாவக் கறைகளை

அவள்

பரிவோடு துடைக்கின்றாள் !

நரகக் கூண்டுகளில்

அடைபட்ட பறவைகளை 

விடுதலை செய்கின்றாள் !

பிறைச் சுடர் கொண்டு

அக அகல்களில் எல்லாம் 

ஆன்மீக வெளிச்சம்

ஏற்றி வைக்கின்றாள் !

பசியென்ற அமுதம்

பரிமாறிப் பூமியையே 

சொர்க்கமாய் ஆக்குகிறாள் !

 

பணத்தைப் பகிர்ந்து கொள்ள

ஏழைவரி !

பசியைப் பகிர்ந்து கொள்ள

உண்ணா நோன்பு !

 

எதுவுமே தேவையற்ற

இறைவன்

நோன்பை  மட்டும்

தனக்கென்று கேட்கின்றான் !

தருவதற்கு

கொடுத்து வைக்க வேண்டாமா ?

 

அடடா !

எத்தகைய  பெருமை !

இறைவனே நம்முன்

இரக்கின்ற ஏழை !

கொடை வள்ளல்

நாமெல்லாம் !

வேலைக்கே கூலியுண்டு !

ஓய்வுக்கு யார் தருவார் ?

ஆனால்-

வயிற்றின் இந்த ஓய்வுக்கு 

வல்லோன் இறைவன்

தன்னையே சம்பளமாய்த்

தந்து விடுகின்றான் !

உபவாசம் இருப்போரின்

வாய் வாசம் இறைவனுக்கு

கஸ்தூரி வாசம் !

இதுதான் அவன்

ஆலயத்தின்

நறுமணத் தூபம் !

 

இல்லாமல் பசிக்கின்ற

ஏழையரின் துயருணர 

இருப்பவனைப் 

பசிக்க வைக்கும்

இணையற்ற 

தத்துவமே நோன்பு !

அங்க ரதத்தை 

அங்கிங்கே அலைகழிக்கும்

ஐந்து குதிரைகளை

அடக்கும் கடிவாளமிது !

மனிதன்

ஆசைகளின் எடுபிடியாய்

ஆடாமல் அவைகளைத்

தன்

எவலராய் மாற்றும்

அதிகார வலிமையிது !

உதிர வீதிகளில்

உலா வரும் சாத்தானும்

சிந்தை நடுங்கும்

சிகப்பு விளக்கு இது !

சொர்க்க வாசல்களைத்

திறக்கின்ற சாவியிது !

நரக வாசல்களையோ

அடைத்து விடும் பூட்டும் இது !

ஆன்மாவுக்கு இது

கூட்டுப் புழு பருவம் !

ஞான மலர்தேடி 

தேனெடுக்க உதவுகின்ற

வண்ணச் சிறகுகள்

வளர்வது இதிலேதான் ! 

பருகாமல் உண்ணாமல் 

பட்டினி கிடந்து விட்டால் 

நோன்பாகி விடாது !

ஐம்பொறியும் உறுதியுடன்

அனுஷ்டிக்கும் விரதமிது !

புறம்பேசல் என்னும்

இறந்த சகோதரனின்

இறைச்சி உண்ணும்

அநாகரீகம்

நடத்தாமல் இருப்பதே

நாவின் நோன்பு !

அழுகிய வார்த்தைகளை

அருந்தாமல் இருப்பதே

செவியின் நோன்பு !

ஆபாசம் கண்டால் 

அருவெருப்பதே

கண்ணின் நோன்பு !

ஆசைகள் பரிமாறும் 

அறுசுவை விருந்தை 

மறுப்பதே

மனத்தின் நோன்பு !

இந்த உலகத்தின்

இன்பங்கள் என்ன

அந்தக் 

கதிர்நிலவைக் 

கொண்டுவந்து 

கைகளிலே கொடுத்தாலும் 

சொர்கத்தின் எல்லா

சுகங்களையும் கொண்டுவந்து

காலடியில் வைத்தாலும்

இறைவா ! உன்

அன்பின் முன் இவையெல்லாம்

தூசு என்று

எட்டி உதைக்கின்ற

ஏற்றத்தைப் பெற்றுவிட்டால்

அதுதான்

ஆன்மாவின் நோன்பு !

இந்தப் பக்குவம்

எய்திவிட்டால் 

பின்

உறக்கமும் 

வணக்கமாகிவிடும் !

சுவாசமே தஸ் பீஹு 

ஆகிவிடும் ! 

பிரார்த்தனை பிறகு

தேவை இல்லை -

தனியாக !

ஏனென்றால்-

நாமே 

பிரார்த்திக்கப்படும் 

பொருளாய் ஆகிவிடுகிறோம் !

 

நன்றி : சிராஜ் 1983 -ஜூலை )
Poetry
Date Title Posted By
3/1/2018 12:16:03 PMசிரியா: நாம் யாருக்காக வாழ்கின்றோம் அம்மா!peer
1/6/2018 4:28:41 AMஇமைகளின் பார்வைகள் - ஏர்வாடி சிந்தாpeer
12/7/2017 10:48:52 PMடிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம்peer
12/7/2017 10:43:38 PMபாபரி மஸ்ஜிதே!peer
5/29/2017 4:54:47 AMமாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்..peer
9/3/2016 11:08:46 AMஇமைகளின் பார்வைகள்peer
1/16/2016 1:11:28 AMஉப்பாற்று ஓடை...peer
1/16/2016 1:09:30 AMவீரம் போற்றுதும் ..peer
8/31/2015 12:23:43 AMநல்லூருக்கு உதாரணமாய்.. எங்கள் ஊர் ஏர்வாடி ....Hajas
3/4/2015 1:24:13 AMமாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்)peer
11/21/2014 12:33:45 PMசொந்த மண்ணில் சொந்தங்களோடு.....peer
12/22/2013 9:40:31 PMஇது எந்த ஊரு நியாயமுங்க ..........?peer
3/19/2013என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!peer
10/30/2012குர்பானி ஆடு - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012ஒரு மழை இரவு... - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012கண் இழந்த அரசு - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012விவாக முறிப்பில்....- ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012தேடல் - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012போர்த்தழும்புகள் - ஏர்வாடிசிந்தாpeer
10/30/2012எதை சாதித்தன ஏவுகனைகள் - ஏர்வாடிசிந்தாpeer
7/16/2012தேர்வில் வெல்ல தேவையானவைகள்peer
7/16/2012திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…peer
7/28/2010ஹிஜாப் தரும் சுதந்திரம்!Hajas
1/6/2009உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லலsohailmamooty
1/5/2009   இலவசம் வந்தது; இல்லம் தொலைந்ததுsohailmamooty
1/4/2009பாலஸ்தீன பாலகனேjasmin
12/23/2008புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்!jasmin
12/17/2008செருப்பின் புனிதம்peer
12/13/2008நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும்jasmin
5/31/2008Allah knows best!jasmin
3/28/2007THE COOKIE THIEF.........zulfa
2/10/2007Nursery Rhymes...v/s. ...Politiciansjasmin
1/3/2007Foe President BushHajas
3/15/2006பணம் பணமறிய அவா!sisulthan
3/15/2006விட்டுவிடுங்கள் அவனை...sisulthan
10/2/2005First poem in our life.Mohamedris
8/10/2005I know I am beautifuljasmin
5/30/2005If Prophet Muhammad (SAW) Visit Youjasmin
12/20/2004A Mother Is Special!!!jasmin
8/9/2004Gone are the days........but not the memoriesjasmin
7/25/2004Eternal Ink...jasmin
7/25/2004What happened to the Ummah ??jasmin
7/18/2004Ya Allah, Forgive me....jasmin
7/17/2004THE POEM OF DEATHjasmin
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..