Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும்
Posted By:Hajas On 7/10/2017 9:45:32 AM

"பூமியின் (அ)பூர்வ கதை"

(பூமியின் மொத்த வரலாற்றில் ஒரு வேக பயணம்)

 

(பாகம் :7 -"பூமியின் திகில் நாட்கள்")

(பாகம் :8) (புல்வெளியும் பரிணாமமும் )

#ரா_பிரபு

ஊர்வன வகுப்பின் பிரமாண்ட வீழ்ச்சிக்கு பின் படிப்படியாக பாலூட்டிகள் எழுச்சியுற தொடங்கி இருந்தது. அவைகள் முதுகெலும்பு கொண்டவையாக குட்டி போடுபவையாக பால் ஊட்டுபவையாக தேவை பட்டால் அன்னாந்து வானத்தை பார்க்க கூடியவையாக கைகளில் ஐந்து விரல் கொண்டவையாக இருந்தன.

70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்......

இப்போது நமது கால இயந்திரத்தை 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி பார்த்தால் ஒரு புதிய வகை தாவரம் உண்டாகி வருவதை காண முடியும். திடீரென அவைகள் பூமி முழுக்க பற்றி படர்வதை காண முடியும்.

அந்த தாவரத்தின் பெயர் 'புல்' கள்.

"போயும் போயும் ஒரு புல்லை வெடிக்க பார்பதற்கா நம்ம காஸ்டலி கால இயந்திரத்தை நிறுத்தனீங்க "? என்று நீங்கள் கேட்கலாம்.
பின்னால் ஒரு மிக பெரிய பரிணாம மாற்றத்தை நடத்தி..முன்பு சொன்ன 'அறிவாளி விலங்கு 'வருகைக்கு இவை முக்கிய காரணமாக இருக்க போகின்றன என்பதை அறிந்தால் புல் களின் முக்கியதுவதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

என்ன விஷயம் அது?

 

புற்கள் பூமியில் படர்ந்த போது அவைகள் மற்ற மரம் செடி கொடிகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது. விளைவாக ஒரு மரத்திற்கும் இன்னோரு மரத்திற்கும் இடைவெளி அதிகமாகியது . 
இதன் விளைவாக இது வரை மரத்தை விட்டு கீழே இறங்கி பழக்கம் இல்லாத சில பாலூட்டிகள் (குரங்குகளுக்கும் முந்தைய குரங்குகள் ....) முதன் முறையாக சமதளத்தில் நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டன அப்படி நன்கு வளர்ந்த புல் வெளியில் நடக்கும் போது எதிரி வருவது தெரியாமல் போகும் ஆபத்து இருந்தது அதனால் அவைகள் அடி கடி நிமிர்ந்து நடக்க வேண்டி இருந்தது. 
அதாவது இரண்டு காலில் நடக்க வேண்டி இருந்தது. இந்த நடத்தை கைகளுக்கு வேலை இல்லாமல் சும்மா வீச செய்ததது. அதாவது கைகளின் வேலை மிச்சமாவதால் கைகள் சும்மா இருந்தது.

சும்மா இருக்கும் கைகள் கால போக்கில் சும்மா இருக்காமல் பல வேலை செய்யவும் நிமிர்ந்து நடக்கும் தேவை கால போக்கில் அந்த விலங்கை இரு காலில் நடக்கும் படி பரிணாம வளர்ச்சி அடைய செய்யவும் புற்கள் மூல காரணங்களாக இருந்தது.

Image may contain: food

(நண்பர்களே !பரிணாமம் பற்றியும் பல மாற்று கோட்பாடுகள் ...கருத்துக்கள் ..
உண்டு .
நான் இப்போது சொல்லி கொண்டிருப்பது இன்றைய தேதிக்கு உலகம் ஏற்று கொண்டுள்ள டார்வின் பரிணாம கொள்கையை அடிபடையாக கொண்டது தான் )

படி படியாக புதிய வாழ்க்கை முறைக்கு தேவையானதை போல அந்த பாலூட்டி பரிணாம மாற்றத்தை அடைந்து கொண்டு வந்தது. குறிப்பாக நிமிர்ந்து நிற்க தொடங்கிய பின் தலைக்கு பாயும் ரத்தஓட்ட அளவு வேறு விதமாக மாறியதில் மூளையின் சிந்திக்கும் திறன் புதிய பரிமாணத்தில் பரிணாமம் கண்டது.
தனது கை கால் நகம் பல் மட்டுமே பயன்படுத்தி பழக்க பட்ட அந்த குரங்குகள் முதல் முறையாக பொருட்களை ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியது.

26 லட்சம் ஆண்டுகளுக்கு முன் முதல் முதலாக அவைகள் கற்களை பயன்படுத்தின . 
அதை கூர்மையாக ஆக்கி மரகுச்சி யில் கட்டி ஈட்டி ஆக்கின. கல்லை கூர் தீட்டி வெட்டுவதற்கு பயன்படுத்தின. விலங்குகளிடம் இருந்து காக்க ...சிக்கி முக்கி கொண்டு நெருப்பு மூட்ட... என்று பல அன்றாட வேலைகளை கற்களை பயன்படுத்த தொடங்கியது

அதாவது......

'கற்காலம்' என்கிற ஒரு யுகம் தொடங்கியது.

Image may contain: outdoor

அடுத்ததாக ...
அவன் (இனி "அது" யிலிருந்து "அவன் "க்கு மாறிடறது நல்லது .) முதலில் பயந்து பிறகு மிக சிறப்பாக கையாண்ட ஒரு விஷயம் நெருப்பு.
காற்காலங்களில் காடுகளில் மிக அதிக அளவு ஆக்சிஜன் இருப்பதால் அடிக்கடி தீ விபத்துக்கள் நடந்தன. இதை தொடர்ச்சியாக கவனித்த அவன் இதை நம்மால் கட்டு படுத்த முடியும் என்றும் தேவைக்கு தகுந்தாற் போல பயன் படுத்த முடியும் என்றும் புரிந்து கொண்டான்.

8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் :

நெருப்பு அவன் செல்ல பிள்ளையாக மாறி இருந்தது. தனது குகைக்கு பாதுகாப்பிற்கு நெருப்பை ஏற்றி வைத்து விட்டு நிம்மதியாக தூங்க போனான் அந்த....
"ஹோமோசேப்பியன்ஸ்....."

நெருப்பை பழகிய பின் உணவை சுட்டு சாப்பிட்டான் அது அவன் உடலில் வேறு வித மாறுதல்களை உண்டு பண்ணியது மூளை செயல்திறன் முன்பை விட அதிகரிக்க வழி செய்தது.

Image may contain: outdoor and nature

2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் :

மனிதன் தனது குரங்கு தினத்தில் இருந்து ..குரங்கு தனத்தில் இருந்து முற்றிலும் மாறி நவீன மனித தனதுடன்..மனித மனதுடன்..... குரல்வளையை குரல் எழுப்ப கற்று கொண்ட திறன் உடன்..... சப்தத்தை தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியும் என்ற புரிதலோடு 'மொழி ' யை தொடங்கி வைத்து.... நிமிர்ந்து நிற்கும் பழக்கத்துடன் ...மனிதனாக மாறி நின்றது 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்.

கால இயந்திரத்தில் கியர் மாற்றி நாம் நிறுத்தி இருக்கும் அடுத்த நிறுத்தம்..
1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் :

மனிதன் தனது இருப்பிடமான ஆப்ரிக்காவில் இருந்து நீண்ட தூர பயணத்தை மேற் கொண்டான். அடுத்த பல ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு அந்த பயணம் நிற்கவே இல்லை. அவன் தலைமுறை இடம்பெயர்தலை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தது.
அன்றைய கண்ட அமைப்பு அவன் நில பாதையிலேயே சொந்த பாதங்களாலேயே உலகில் அடுத்த முனைக்கு செல்ல ஏதுவாக இருந்தது.

நமது கால இயந்திரத்தை நாம் இப்போது 50000 ஆண்டுகளுக்கு முன் நிறுத்த வேண்டி உள்ளது.

காரணம் இப்போது பூமியின் இன்னோரு வரலாற்று மாறுதல் நிகழ இருக்கிறது. பூமி தனது அடுத்த அழிவை சந்திக்க இருகின்றது. அந்த மாறுதலுக்கு பெயர் ."ஐஸ் ஏஜ்".
பூமியின் வட துருவத்தில் பனி உறைந்து படி படியாக உலக உருண்டை முழுதும் பரவி கொண்டு வருவதை இப்போது பார்க்கலாம் .

ஆனால் ...

Image may contain: sky

இந்த ஐஸ் ஏஜ் என்பது வின்கல் மோதுவது போல ஒரே நாளில் நடக்கும் உடனடி நிகழ்வு அல்ல அது முழுதும் தனது விளைவுகளை காட்ட இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் நமக்கு இருக்கிறது எண்பதால் .இப்போதைக்கு வட துருவத்தில் நேரத்தை வீணாக்காமல் நமது கால இயந்திரத்தை கிளப்பி மீண்டும் மனிதனை பின் தொடர்வோம்..

இப்போது தனது பயணத்தில் மனிதன் சைனாவையும் ஆஸ்திரேலியாவையும் அடைந்து இருந்தான் . அதே போல 30000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவை வந்து அடைந்தான்.

20000 ஆண்டுகளுக்கு முன் முன்பு தொடங்கி இருந்த ஐஸ் ஏஜ் தனது வீரியத்தை காட்ட தொடங்கி இருந்தது.

பூமி முழுக்க குளிர தொடங்கியது. மனிதனை தங்கி இருந்த இடத்தை விட்டு நகர விடாமல் செய்தது.
அந்த அடைந்து கிடந்த நேரங்களில் தான் அடைந்து கிடந்த இடத்தில் ஒரு காரியத்தை செய்தான் மனிதன். அந்த காரியம் அவனை பிற சக விலங்குகளிடம் இருந்து தனித்துவம் வாய்ந்தவானாக பிற்கால வரலாறுவரை அவனை தனித்து எடுத்து காட்டியது.

அவன் செய்த அந்த காரியத்திற்கு பெயர் "ஓவியம்".

-பூமி இன்னும் சுழலும்........

 

 பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு

 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..