buy the abortion pill can i buy the abortion pill online bollebygdsbil.se buy the abortion pill loette precio espana loette precio sin receta * 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவன் கைதாகும்போது, முகத்தைப் பொத்திக் கொண்டு செல்வதும், 100 கோடி ஊழல் செய்தவன் கைதாகும்போது, டாட்டா காட்டியபடி சிரித்துக் கொண்டே செல்வதும் இந்த நாட்டில்தான்...! * சாதரணமாய் பிக்பாக்கெட் அடித்தவனுக்கு சிறையில் கொசுக்கடியுடன்,நாலைந்து பேர் தங்கும் சுகாதாரமற்ற அறையில் இடம் தருவதும்.., கோடி கோடியாய் ஊழல் செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவனுக்கு, டிவி வசதியுடன் சொகுசு அறை தருவதும் இந்த நாட்டில்தான்...!
*கஷ்டப்பட்டு பட்ட மேற்படிப்பு படித்தவன் வேலையில்லாமல் திண்டாடுவதும், 5 ஆம் வகுப்பு கூட படிக்காமல், சாராயம் விற்றவனெல்லாம் கல்வி அமைச்சர் ஆகி, பல கல்லூரிகளை நடத்துவதும் இந்த நாட்டில்தான்...!
*அரிசியை விளைவித்த விவசாயி, அரிசிக்காக ரேசன் கடையில் வரிசையில் நிற்பதும், ஆபாச வழக்கில் சிக்கிய ஆசிரமச் சாமியாரிடம் ஆசி பெற, வரிசை கட்டி நிற்பதும் இந்த நாட்டில்தான்...!
* கோடிக்கணக்கில் வங்கிக் கடன் வாங்கியவன், அதைக் கட்டாமல், வெளிநாட்டுக்குக் தப்பிச் செல்வதும், ஆயிரக்கணக்கில் கடன் வாங்கிய விவசாயி அதைக் கட்ட முடியாமல், விஷம் குடித்து சாவதும் இந்த நாட்டில்தான்...!
* தண்ணீர் கேட்டு போராடுபவர்கள் மீது தடியடி நடத்துவதும், மதுவிலக்கை அமுல்படுத்த அழுத்தம் கொடுத்தால், மதுக்கடைக்கு காவல்துறை பாதுகாப்பளிப்பதும் இந்த நாட்டில்தான்...!
*தேசப்பிதாவைக் கொன்றவனை தேசத் தலைவனாகக் கொண்டாடுவதும், தேச நலனுக்காகப் போராடுபவன் மீது தேசத் துரோக வழக்கு பாய்வதும் இந்த நாட்டில்தான்...!
* ஜனநாயகம் என்ற பேரில், சர்வாதிகார ஆட்சி நடப்பதும், சாமானியர்களின் அரசு என்ற பேரில், சாமியார்களின் ஆட்சி நடப்பதும் இந்த நாட்டில்தான்
|