Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
 
இமைகளின் பார்வைகள் - ஏர்வாடி சிந்தா
Posted By:peer On 1/6/2018 4:28:41 AM



இருண்டக் காடொன்றில்
தனித்துவிடப்பட்ட
குழந்தை நான்…
தூரத்தில் ஒளிறும்..
உன் தேடலோசைகள்..
தடைபடும் போதெல்லாம்..
மௌனங்களும் கூட..
அச்சுறுத்துகிறது.
..
என்னை நீ தேடுகிறாய்..
உன் தேடலை
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

படரந்து கிடக்கும்
சிறுபூக்களின் வாசங்களில்..
உன் மேனியின் சுகந்தத்தை
நாசிகள் தேடித்தேடி..
ஏமாற்றங்களை
முகர்கின்றது..

பாவத்தின் தீப்பந்தங்களில்..
எரிந்துக் கொண்டிருக்கும்
கானகத்தில்..
இருளாகிக் கொண்டிருக்கிறது
வழித்தடங்கள்..
..
எரியும் கானகத்தின்
வெளிச்சத்தில்..
என்னை நீ.. அறிவாய் என்றே..
சுட்டெரிக்கும் தழலருகே..
காத்துக் கொண்டிருக்கின்றேன்..
சாம்பலாகிப் போவதற்குள்..
மீட்டெடுப்பாயா நீ..??

மின்னல் வெளிச்சங்களில்
தடம் நகர்கின்றேன்..
தூரத்தில் ஒலிரும்
உன் தேடலோசைகளை..
விழுங்கிக் கொண்டிருக்கின்றன
மின்னலை ஒட்டிய
பேரிடி முழக்கங்கள்..

அந்தோ..அப்பேரிடியில்
செவிடாகிப்போகும் காதுகளை..
மின்னல் விழுங்க காத்திருக்கும்
பார்வைகளை..
எப்போது மீட்டெடுப்பாய் நீ

கானகத்தில்
தனித்து விடப்பட்ட குழந்தை நான்..
மண்டியிட்டு..
உன் பாதச்சுவடுகளைத்..
தேடித் தவழ்கிறேன்…
நிச்சயம்
என் விம்மல் சப்தங்களை..
செவிமடுப்பாய் நீ..
….
உலர்ந்துக் கொண்டிருக்கும்
என் கண்ணீர்துளிகளை..
இருளுக்குள்…
விதைத்துக் கொண்டே நகர்கிறேன்..
திவலைகளில்
ஒளிர்கின்றது..
உன் புன்னகைப் போரொளி..
மெல்ல.. இருளின்
திரையகற்றுகிறது…
கருத்த இக்கானகம்.

- ஏர்வாடி சிந்தா.




Poetry
Date Title Posted By
1-3-2018சிரியா: நாம் யாருக்காக வாழ்கின்றோம் அம்மா!peer
7-12-2017டிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம்peer
7-12-2017பாபரி மஸ்ஜிதே!peer
3-6-2017நோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான்peer
29-5-2017மாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்..peer
3-9-2016இமைகளின் பார்வைகள்peer
16-1-2016உப்பாற்று ஓடை...peer
16-1-2016வீரம் போற்றுதும் ..peer
31-8-2015நல்லூருக்கு உதாரணமாய்.. எங்கள் ஊர் ஏர்வாடி ....Hajas
4-3-2015மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்)peer
21-11-2014சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....peer
22-12-2013இது எந்த ஊரு நியாயமுங்க ..........?peer
19-3-2013என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!peer
30-10-2012குர்பானி ஆடு - ஏர்வாடிசிந்தாpeer
30-10-2012ஒரு மழை இரவு... - ஏர்வாடிசிந்தாpeer
30-10-2012கண் இழந்த அரசு - ஏர்வாடிசிந்தாpeer
30-10-2012விவாக முறிப்பில்....- ஏர்வாடிசிந்தாpeer
30-10-2012தேடல் - ஏர்வாடிசிந்தாpeer
30-10-2012போர்த்தழும்புகள் - ஏர்வாடிசிந்தாpeer
30-10-2012எதை சாதித்தன ஏவுகனைகள் - ஏர்வாடிசிந்தாpeer
16-7-2012தேர்வில் வெல்ல தேவையானவைகள்peer
16-7-2012திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…peer
28-7-2010ஹிஜாப் தரும் சுதந்திரம்!Hajas
6-1-2009உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லலsohailmamooty
5-1-2009   இலவசம் வந்தது; இல்லம் தொலைந்ததுsohailmamooty
4-1-2009பாலஸ்தீன பாலகனேjasmin
23-12-2008புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்!jasmin
17-12-2008செருப்பின் புனிதம்peer
13-12-2008நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும்jasmin
31-5-2008Allah knows best!jasmin
28-3-2007THE COOKIE THIEF.........zulfa
10-2-2007Nursery Rhymes...v/s. ...Politiciansjasmin
3-1-2007Foe President BushHajas
15-3-2006பணம் பணமறிய அவா!sisulthan
15-3-2006விட்டுவிடுங்கள் அவனை...sisulthan
2-10-2005First poem in our life.Mohamedris
10-8-2005I know I am beautifuljasmin
30-5-2005If Prophet Muhammad (SAW) Visit Youjasmin
20-12-2004A Mother Is Special!!!jasmin
9-8-2004Gone are the days........but not the memoriesjasmin
25-7-2004Eternal Ink...jasmin
25-7-2004What happened to the Ummah ??jasmin
18-7-2004Ya Allah, Forgive me....jasmin
17-7-2004THE POEM OF DEATHjasmin
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..