Home >> Articles >> Article
  Login | Signup  

Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 3
Posted By:Hajas On 1/10/2018 11:37:27 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் 2 : (கடத்தும் ஏலியன்கள் )

பாகம் 3 : " மறைந்த குறிப்புகள் "

 

கடந்த பாகத்தில் UFO sight கதைகளை படித்து விட்டு நண்பர்கள் பல பேர் கமெண்ட் இல் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரு கேள்வி "ஏன் எல்லா நிகழ்வுகளும் வெளிநாடுகளில் நிகழ்கின்றன இந்தியாவில் ஏன் ஏலியன் வருவது இல்லை? " உண்மை என்னவென்றால் அவ்வபோது பல UFO கள் குறைவில்லாமல் இங்கே கிடைத்து கொண்டு தான் இருக்கின்றன . ஆனால் வெளிநாடுகள் போல் இங்கே பிரபலம் ஆவது இல்லை. மேலும் நம் நாட்டில் வி்சித்திர நிகழ்வு ஏதாவது நிஜமாகவே நடந்தாலும் நாம் முதலில் பழியை போடுவது ஆவிகள் மேல் தான். ஏலியன் மேல் நமக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. வேற்றுகிரகவாசி என்றால் என்ன என்றே தெரியாதவர்களும் பல பேர் இருக்க தான் செய்கிறார்கள்.(ஆனா ஆவியை அறியாதவர் யாரும் இல்லை )

 

உண்மையில் இந்தியாவில் இந்த நிகழ்வுகள் நடக்கிறதா இல்லையா ? நடந்தால் அது எங்கே நடக்கிறது.? "Kongaka la paas " இது இமாலையாவில் 16965 அடி உயரத்தில் உள்ள இந்திய சீன எல்லை பகுதி. இங்கே ஒரு மர்ம இடம் இருக்கிறது . அதாவது UFO பேஸ் இந்த இடத்தில் மட்டும் சீனாவும் சரி இந்தியாவும் சரி ராணுவ வீரர்களை அங்கே நிறுத்திவைபதில்லை ஆனால் தவறாமல் தூரத்தில் இருந்து கண்காணித்து வருகின்றன. அதற்க்கு காரணம் அங்கே அவ்வபோது பார்த்த சில மர்ம பறக்கும் பொருட்கள் தான். அதை பல முறை பல பேர் பார்த்து உறுதி செய்து உள்ளனர் 2012 இல் ஒரு ராணுவ வீரர் மிக உறுதியான பல ஆதாரங்கள் பதிவு செய்தார். அவ்வளவு ஏன் அங்கே செல்லும் பயணிகள் கூட அதை பார்த்து இருக்கிறார்கள். அதில் ஒரு பயணியின் அனுபவம் ..ஆச்சர்யத்துடன் தான் பார்த்த பறக்கும் பொருள் பற்றி அங்கே கூட வந்த கைடு இடம் கேட்டாராம். அதற்க்கு அவன் சொன்ன பதில் " இது நான் அடிக்கடி பாத்துட்டு தான் சார் இருக்கேன் இதில என்ன ஆச்சர்யம் "
(இமாலையாவில் ஆவியை பார்த்து இருந்தா அந்த கைடு பயந்து இருப்பது நிச்சயம் )

 

சரி இப்போ சில சம்பவங்களை பாருங்கள்

👽 15 March, 10:20 காலை டெல்லி flying club ஐ சேர்ந்த 25 பேர் வானில் ஒரு சுருட்டு வடிவ அமானுஷ்ய பறக்கும் பொருளை பார்த்தார்கள் அதுவும் கிட்ட தட்ட 100 அடிக்கு . பார்த்து கொண்டிருக்கும் போதே மறைந்து போனதாக அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

👽 2007 ஆம் ஆண்டுஆக்டோபர் 29 இல் கொல்கத்தாவில் அதிகாலை 3.30 தொடங்கி 6.30 வரை ஒரு விசித்திர பொருளை பலரும் பார்த்தார்கள் அதன் வேகம் பிரமிக்க தக்கதாய் இருந்தது மேலும் முக்கோண வடிவத்தில் இருந்து நீண்ட வடிவமாக உருமாற கூடியதும் ஒளி உமிழ கூடியதுமாய் அது இருந்தது . 100 கணக்கான ஆட்கள் அதை E.M bypass எனும் இடத்தில ஒன்று கூடி பார்த்தார்கள் பலர் அதை வீடியோ எடுத்தார்கள் தொலைக்காட்சி செய்திகளில் அது இடம் பெற்றது. அப்போது பிர்லா பிளானிடோரியத்தின் இயக்குனராய் இருந்த D.P துரையும் இதை பார்த்தார்"extremely interesting and strange". என்று கருத்து தெரிவித்தார்.

👽 2013 ஆகஸ்ட் 4 இமயமலை லாடாக் இல் ராணுவ வீரர் ஒருவர் முதலில் UFO பார்த்ததாக பதிவு செய்தார். ஆசர்யம் என்ன வென்றால் அதன் பின் 100 கு மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

👽 2014 இல் 23 ஜூலையில் லக்னவ் ராஜாஜி புறத்தில் எடுக்க பட்ட சூரிய அஸ்தமன போட்டோ பலவற்றில் UFO பதிவாகி உள்ளது.

👽 2013 ஜூன் 20 இரவு 8.55 க்கு சென்னை முகப்பேர் இல் வசிக்கும் பல பேர் UFO பார்த்து இருக்கிறார்கள் .(இக்கட்டுரை படிக்கும் வாசக நண்பர் யாரும் அதில் அடக்கம் எனில் எனக்கு தெரிய படுத்தினால் மகிழ்வேன் )

ஒரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன். இந்திய விமானிகள் ஒவொரு மாதமும் குறைந்தது 5 க்கு மேற் பட்ட விசித்திர பறக்கும் பொருள் பார்ப்பதாக பதிவு செய்கிறார்கள் . ஆகையால்............


ஏலியன் இந்தியர்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது என்ற சந்தேகம் இனி உங்களுக்கு வேண்டாம்.

வேற்றுகிரகவாசிகள் பற்றிய நிகழ்வுகள் பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் இன்று நேற்று கிடைத்தவை அல்ல. கிட்ட தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே பறக்கும் தட்டு சாட்சியாளர்கள் இருக்கிறார்கள். என்ன ஒன்னு தான் பார்த்தது பறக்கும் தட்டுதான் என்று அவர்களுக்கே தெரியாது. பறக்கும் தட்டுகான வர்ணனைகள் அந்த கால எல்லா மத புராணங்களிலும் உண்டு. எல்லா பழைய கதைகளிலும் வேற்றுகிரகவாசிகள் பற்றிய "மறைந்த குறிப்புகள் " இருப்பதாக தோன்றுகிறது.

 

வானத்தில் ஏதோ வெளிச்சமாக பார்த்ததை... வானத்தில் இருந்து நெருப்பு வந்ததாக பார்த்ததை தன்னை பின் தொடரும் நட்சத்திரம் அல்லது வானத்தின் ஒளியை பார்த்ததை பல இடங்கில் புராண காலத்தில் வர்ணிக்க பட்டு இருப்பது பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்கிறார்கள்.


பைபிளில் பறக்கும் தட்டு பார்த்ததற்கான வர்ணணைகள் உண்டு.
பைபிளில் வரும் எசேக்கியேல் 1. 1-28 வசனம் பாருங்கள் வர்ணனைகள் உங்களை ஆச்சர்யபடுத்தும்.

" இதோ, வடக்கேயிருந்து புழல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன், அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது. அதன் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின, அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது. அவைகள் ஒவொன்றுக்கும் நான்கு முகமும் நான்கு இறக்கைகளும் இருக்க கண்டேன் " ....என தொடங்கி அவைகள் தீ போல இருந்தது அவைகள் ரக்கையின் விதம் முக அமைப்பு என்று அந்த வசனம் விரிவாக வர்ணித்து சொல்கிறது. "அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷ முகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன. " என்று வசனம் வர்ணிப்பது நிச்சயம் வேற்றுகிரக வாசிகளின் விசித்திர முகரைகளை தான் என்கிறார்கள். அத்துடன் நிற்கவில்லை அதை தொடர்ந்து அந்த வசனம் பறக்கும் தட்டை வர்ணிப்பதை பாருங்கள்  "சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது, அவைகள் நாலுக்கும் ஒரேவிதசாயல் இருந்தது, அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாபோல் இருந்தது.


அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை. அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன, அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின, அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின. "  இந்த வர்ணனை ஒரு ஸ்பேஸ் ஷிப் டேக் ஆப் ஆவதை சொல்வது போல இருக்கிறது அல்லவா.


மேலும் வசனம் 24 இல் அவைகள் பறக்கும் போது சப்தம் எப்படி இருக்கும் என்று சொல்ல பட்டுள்ளதை பாருங்கள் "அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக்கேட்டேன், அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது, அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன. " (செட்டைகள் என்றால் ரக்கைகள் )

குர்ஆனில் பல வசனங்கள் பல்வேறு விதமான சொர்கங்களை பல உலகங்களை பற்றி பேசுகிறது . மற்றும் குர்ஆனில் சொல்ல படும் 'ஏஞ்சல் ' வேற்றுகிரகத்தினராக இருக்கலாம்

இது போன்ற ஏலியன் வர்ணனைகள் எல்லா மத புராணங்களிலும் காண படுகிறது.
ஹிந்துக்கள் புராணங்களில் வரும் இந்திர லோகம் , விஷ்ணு லோகம்,ப்ரம்மலோகம் போன்றவை வேறு வேறு கிரகங்களாக இருக்கலாம். இன்று நமக்கு ஐன்ஸ்டைனின் ரிலேடிவ் தியரி படி வெவேறு ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு இருக்கும் வெளியின் வெவ்வேறு இடங்களில் காலங்கள் வெவ்வேறாக மாறுபடும் என்று தெரியும் மிக ஆச்சர்யமாக இதை அப்படியே ஹிந்து புராணங்கள் வர்ணிக்கிறது . உதாரணமாய் பிரம்மாவின் ஒரு நாள் என்பது நமது சாதாரண சோலார் சிஸ்டதின் வருடம் படி 306,720,000 ஆண்டுகளுக்கு சமம் .

டைம் டைலேஷன் கான்செப்டுகள் புராணங்கில் வர்ணிக்க பட்டு இருப்பது உங்களை ஆச்சர்ய படுத்தும் .. வெவ்வேறு லோகத்தின் கால வேறு பாட்டை பற்றி அவைகள் சொல்வதை பாருங்கள்.. அதாவது மனிதனின் ஒரு வருடம் என்பது தான் தேவர்களின் ஒரு நாளாம் . அப்படி அவர்களின் 365 நாள் தான் தேவர்களின் ஒரு வருடம்.(அதாவது நமக்கு 365 வருடம் ) அப்படி தேவர்களின் வருட படி 12000 தேவர்கள் வருடம் சேர்ந்ததை தான் ஒரு சதுர யுகம் என்கிறார்கள். அப்படி 2000 சதுர் யுகம் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள் .(அதாவது முன்பு சொன்னது போல நம்ம பூமி கணக்கு படி 306,720, 000 ஆண்டுகள்) இப்படி பட்ட பிரம்மாவின் 365 நாள் தான் பிரம்ம வருடம் அப்படி மொத்தம் 100 பிரம்மா ஆண்டுகள் தான் பிரம்மாவின் ஆயுட்காலம் என்று புராணங்கள் வர்ணிக்கின்றன. அப்புறம் அவர் ஆயுள் முடிந்த பின் "மகா பிரளயம் வரும் அதில் பிரம்மா அழிக்க படுவார் அதன் பின் 100 பிரம்ம ஆண்டுகளுக்கு எந்த உருவாக்கமும் இருக்காது அதன் பிறகு மீண்டும் பிரம்மாவை மகா விஷ்ணு உருவாக்குவார் " என்று வர்ணிக்க பட்டு இருப்பது பிரபஞ்ச அழிவா அல்லது பிக் பேங் நிகழ்வா என்று நம்மை யோசிக்க வைக்கிறது.


பொதுவாக பல யுகங்களுக்கு ஒரு முறை நம்மை அவர்கள் வந்து பார்த்து விட்டு செல்வதாக நாம் நினைக்கலாம் ஆனால் நமக்கும் அவர்களுக்குமான கால வேறு பாட்டை கணக்கில் கொண்டால் நம் பூமி ஆரம்பம் முதல் அழியும் வரை அப்போபோ அவர்கள் வந்து பார்த்து விட்டு போவது அவர்கள் ஊர் கணக்கில் ஏதோ ஒரு மாத டூர் ஆக கூட இருக்கலாம்.

பொதுவாக பறக்கும் தட்டுகளை பல இடங்களில் நாம் நமக்கே தெரியாமல் படம் எடுத்து வைத்திருகிறோம் என்கிறார்கள் ஏலியன் ஆய்வாளர்கள். பல புகை படங்களில் தற்செயலாக பறக்கும் தட்டுகள் படம் பிடிக்க பட்டுள்ளடன. பழைய ஓவியங்கள் பல வற்றில் பறக்கும் தட்டுகள் போன்ற அமைப்புகள் வரைய பட்டு இருக்கின்றன அவ்வளவு ஏன் பழங்காலத்து குகை ஓவியங்களில் கூட பறக்கும் தட்டுகள் காண படுகின்றன . தட்டுகள் நமக்கு தெரிவது இன்று நேற்று இல்லை போல.

1998 இல் ஒரு இத்தாலிய பெண் எழுத்தாளர் இப்படி பட்ட ஓவியங்களில் ஒளிந்துள்ள பறக்கும் தட்டுகள் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தார் . அதில் பல ஆச்சர்யமான விஷயங்கள் தெரிந்தன. ஒரு ஓவியர் மிக தெளிவாக ஊர் மக்கள் வானத்தில் ஏதோ விசித்திர பறக்கும் பொருள் நெருப்பு கக்கி செல்வதை வரைந்து இருந்தார். குறிப்பாக.."Madonna with Saint Giovannino" என்ற புகழ் பெற்ற 15 ஆம் நூற்றாண்டு ஓவியத்தை அவர் மிக முக்கியமாக குறிப்பிட்டு இருந்தார் .(முடிந்தால் அதை தேடி பாருங்கள் ) அந்த ஓவியத்தில் மடோனா ஓவியத்திற்கு பின் புலத்தில் வானத்தில் ஒரு மர்ம பொருள் பறப்பதையும் அதை தூரே ஒருவர் ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்பதையும் மிக தெளிவாக ஓவியர் வரைந்து இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

ஏலியன்கள் இருப்பதற்கான அன்றாட ஆதாரங்கள் இன்றளவும் நிறைய கிடைத்து கொண்டே தான் இருக்கிறது. வேற்றுகிரக வாசிகள் நம்மை எப்போதும் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்று சொல்ல படுகிறது. உலகமெங்கும் பல இடங்களில் திடீரென உண்டாகும் கிராப் சர்கில் எனும் பயிர் வட்டங்கள் வெறும் பயிரில் மட்டும் அல்ல பாலைவனத்தில் பனி படலத்தில் மற்றும் பெரும் சேற்று பகுதிகளிலும் உண்டாகி இருக்கிறது அந்த விசித்திர வடிவமைப்பு என்ன சொல்ல வருகிறது என்ற மர்மம் ஒரு புறம் இருக்கட்டும் .நம்மை விட மிக மிக உயர்ந்த தொழில் நுட்பத்தில் வாழும் அவர்கள் ஏன் இப்படி கற்கால ஸ்டைலில் படம் வரைந்து பாகம் குறிக்க வேண்டும் ? அவைகள் நம்மை டிஜிட்டல் மார்க்கத்தில் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்கு சிலர் ஒரு காரணத்தை சொல்கிறார்கள் அதாவது வேற்றுகிராகவாசிகள் ஒரே இனம் அல்ல அதில் பல இனங்கள் உண்டு. ( ஏலியன் vs பிரடேட்டர் !! ? ) அதில் நல்லது கெட்டது உண்டு.. அவற்றில் ஒரு இனம் அடுத்த இனத்திற்கு தெரியாமல் நம்மை தொடர்பு கொள்ள பார்க்கிறது உயர் தொழில் நுட்பம் வாயிலாக தொடர்பு கொண்டால் அடுத்த குழு க்கு அது தெரிந்து விடும் என்பதால் தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

அதே சமயம் ஒரு முறை நம்மை அவர்கள் அட்வான்ஸ் டெக்னாலஜி மூலம் தொடர்பு கொண்டதாக சொல்ல படும் சம்பவம் ஒன்று உண்டு..


அதை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷

 பாகம் 4 : ஏலியன்களும் ஆதாரங்களும் 
Others
Date Title Posted By
10/24/2018 7:08:38 PMகஜினி முகம்மது - எச் ஐ வி சேகரின் கனிவான கவனத்திற்குpeer
10/13/2018 6:36:31 AMஇருட்டில் தேடி வந்த உதவுpeer
10/13/2018 6:36:12 AMஇருட்டில் தேடி வந்த உதவுpeer
1/23/2018 10:58:52 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 20Hajas
1/22/2018 1:01:27 PMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 19Hajas
1/22/2018 11:38:36 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 18Hajas
1/21/2018 8:44:07 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 17Hajas
1/19/2018 8:42:55 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 16Hajas
1/18/2018 9:46:13 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 15Hajas
1/18/2018 5:04:07 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 14Hajas
1/16/2018 8:53:34 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 13Hajas
1/16/2018 3:34:42 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 12Hajas
1/14/2018 11:19:47 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 11Hajas
1/14/2018 10:45:44 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 10Hajas
1/14/2018 10:20:00 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 9Hajas
1/14/2018 10:01:38 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 8Hajas
1/14/2018 9:35:00 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 7Hajas
1/12/2018 1:13:31 PMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 6Hajas
1/12/2018 12:49:16 PMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 5Hajas
1/12/2018 12:25:33 PMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 4Hajas
1/10/2018 10:09:18 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம்2Hajas
1/10/2018 8:55:49 AMமர்மங்கள்_முடிவதில்லை - பாகம்1Hajas
1/17/2017 3:59:58 AMWhy Havildar Abdul Hamid Is One of Indian Army’s Most Celebrated & Revered Soldiers of All TimeHajas
8/21/2016 9:39:25 AMPlot for sale in Eruvadijasmin
8/21/2016 9:32:39 AMPlot for sale in Eruvadijasmin
5/14/2016 5:36:35 AM725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா'nsjohnson
5/1/2016 2:52:38 AMதிருநெல்வேலி‬.....ஊர் பெருமை!!Hajas
4/30/2016 3:01:01 AMபேங்க் லாக்கரில் பணம் வைப்பது ஆபத்து!nsjohnson
4/30/2016 1:51:37 AMஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.nsjohnson
4/30/2016 1:41:38 AMமைல்கல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !nsjohnson
2/6/2016 3:46:03 AMgoogle groups லிருந்து நான் ரசித்ததுnsjohnson
9/29/2015 10:46:35 PMஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் - தொல்பொருள் ஆராய்ச்சிHajas
8/26/2015 12:36:27 AMடைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive...........பாகம் 1Hajas
8/1/2015 10:16:40 AMநம் கலாமுக்கு இன்னொரு பெயர் உண்டு...'கலோனல் பிருத்விராஜ்'Hajas
7/28/2015 2:46:20 AMமரணம் இப்படித்தான் இருக்குமா...?Hajas
7/27/2015 3:37:21 AMவிலைவாசி (சிறுகதை)Hajas
6/26/2015 2:53:46 AMவித்தகத் தந்திரங்கள் - இந்தியக் கல்வி அமைப்புpeer
4/25/2015 2:41:43 AMதந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்!Hajas
1/9/2015 4:55:54 AMநான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.Hajas
1/5/2015 10:24:02 PMமனிதநேயம் வாழும் ஊர்!Hajas
12/31/2014 4:42:05 AMநம் நாளங்காடி!Hajas
12/9/2014 8:49:04 AMஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு!Hajas
12/5/2014 9:12:45 AMஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!Hajas
11/30/2014 1:10:32 PMமோடியின் குஜராத்தும் – ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு பார்வைHajas
10/14/2014 4:28:03 AMகடைசி தலை முறைHajas
10/11/2014 5:04:01 AMமுஸ்லிம் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன?Hajas
9/8/2014 7:00:11 AMபிள்ளையாரப்பா பெரியப்பா, புத்திமதியை சொல்லப்பா! – கீழை ஜஹாங்கீர் அரூஸிHajas
7/13/2014 6:05:43 AMஇந்தியா ஒரு தரம்... இந்தியா ரெண்டு தரம்...Hajas
6/22/2014 3:15:32 AMபாஜகவின் ஃபாசிஸ சித்தாந்தம் வெற்றி பெறுமா?Hajas
6/21/2014 11:11:08 AMஆண்களின் உலகம்!Hajas
6/14/2014 3:35:51 PMஉளுந்து சாகுபடிக்காரனின் சாபம் – ம.செந்தமிழன்Hajas
2/2/2014 10:49:45 AMஉறவுகள் மேம்பட, சமுதாயம் சீரடைய - இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை (1)jasmin
1/25/2014 10:41:17 AMஉறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய - 3 ஆம் பரிசு பெற்ற கட்டுரைjasmin
1/7/2014 1:05:42 AMதீரர் திப்பு சுல்தானின் சுதந்திர தாகம்Hajas
1/6/2014 10:58:38 AMபின்லேடன் கொல்லப்படவில்லை:Hajas
12/19/2013 11:52:56 AMஅமெரிக்காவுடன் உறவு கூடாது என்றே மானமுள்ள இந்தியன் உரக்க சொல்வான்.Hajas
12/17/2013 5:36:54 AMஅரசியலாக்கப்படும் ஓரினச்சேர்க்கை!Hajas
12/6/2013 12:11:55 AMமதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!Hajas
12/5/2013 12:40:10 AMஇந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!Hajas
11/25/2013 3:11:46 AMசில பொன்மொழிகள்.Hajas
11/8/2013 11:19:36 AMமோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்!Hajas
11/6/2013 9:49:19 PMகாசு – பணம் – துட்டு – மணி: மோடி – படேல் – சூப்பர் கதை!Hajas
10/6/2013 4:14:34 AMJob Interview at Dubai - Bank (Dubai Isalamic Bank)ganik70
3/24/2013இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2ammaarah
3/17/2013காணாமற்போகும் கதைச் சொல்லிகள்...peer
3/16/2013உலக கொள்ளையர்களும் இந்தியாவின் அலுவாலியாவும் ஒருவரே -அதிரடி கட்டுரைHajas
3/13/2013சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!Hajas
2/2/2013தமிழில் டைப் செய்ய - Tamil Typingganik70
1/1/2013மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!Hajas
12/3/2012இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!peer
8/15/2012RISK FREE BUSINESS OPPORTUNITYstmohideen
7/30/2012டயர் (Tyre) வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்ganik70
4/21/2012மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல்ganik70
4/15/2012Power cut? Don't worry, look at the brighter sideHajas
4/1/2012கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1)ganik70
12/17/2011மௌனகுரு - சிரிக்க சிந்திக்கHajas
11/22/2011"பைக்' இல்லாதவனை "சைட்' அடிக்கறதை விட பாழுங்கிணத்துல விழலாம்-- இரா.செந்தில்குமார்Hajas
10/27/2011கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?Hajas
10/24/2011வீண் செலவு வேண்டாமேHajas
5/25/2010Kunagudi Hanifa Viduthalaieruvadi_acp
5/3/2010உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்peer
3/16/2010தேடுங்கள்; கண்டடைவீர்கள்!sohailmamooty
3/14/2010கலாமுக்கு கட்டுப்பாடு?ganik70
1/4/2010பின்னடைவால் பிரச்னையா?jahirs
12/11/2009கோடை குளிருமா!..? வாடை வருடுமா!..?sohailmamooty
10/16/2009உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்திjaks
10/6/2009மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் !Hajas
8/30/2009Google - புத்தகங்களும் இனி இலவசம் ...ganik70
8/23/2009India behind Lanka's victory over LTTE: BookHajas
6/29/2009சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி!peer
6/13/2009Stock Brokers Enter Real Estate Sectorstmohideen
6/10/2009Best Investmnet Oppertunity in 250 KW Wind Turbine Generatorstmohideen
5/18/2009HISTORY OF LTTEHajas
4/14/2009General Motors (USA) seeks fundsstmohideen
3/31/2009MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE STEPS.ganik70
3/26/2009Young Indians say 'no thanks' to American dreamHajas
3/25/2009நில உரிமை நகல் பார்வையிடganik70
3/15/2009Gujarat- Reality TodayHajas
1/22/2009இஸ்லாம் போராளிகள் மத‌மா ? ‍ ப‌. சித‌ம்ப‌ர‌ம்jasmin
12/31/2008மதுரை உட்பட 9 மாவட்டங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு கட்டாயம்sohailmamooty
12/6/2008Why Pakistan won’t give up lashkarHajas
11/23/2008தன்னம்பிக்கைjasmin
11/3/2008சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவுHajas
10/30/2008Who is sitting on the top of the World?peer
10/15/2008Help the People in Assamjasmin
9/29/2008Why a bias against Jamia Nagar?Hajas
9/21/2008AN OPEN LETTER TO THE PRIME MINISTER OF INDIAHajas
6/15/2008எது பெண்ணுரிமை?jasmin
5/18/2008The Male Brain vs. The Female BrainHajas
4/24/2008A Messiah for our time: Muhammed (PBUH) - Khushwant Singhpeer
4/10/2008The Last Days of Cheap Chinese ProductsHajas
12/21/2007Beware !! It can happen to anyoneHajas
11/13/2007Indians are living beyond means: SurveyHajas
11/5/2007Frontier takes Pak troops away from India borderHajas
11/1/2007Silence of the lambs: Gujaratpeer
10/28/2007Catching inflation by the tailHajas
10/17/2007Roads Near Kabul Grow DangerousHajas
10/4/2007Upholding family valuesHajas
9/3/2007Naxals-LTTE nexus in Tamil Nadu: An Alliance in the Making?jasmin
8/28/2007Jaffna, a nightmare for journalistsHajas
8/26/2007While Buying FurnitureHajas
8/22/2007The nuclear deal: key issues and political circumstancesHajas
8/20/2007Words Of WisdomHajas
8/20/2007Sardarji Jokesjasmin
8/15/2007India at 60Hajas
8/14/2007Indians most proud of their culture: SurveyHajas
7/30/2007Indian family values intact: SurveyHajas
7/20/2007It's a miracle planes land safely in IndiaHajas
7/17/2007Indias Automakers Face Big Hurdles in Pursuing Global AmbitionsHajas
6/23/2007How the India's Other Half LivesHajas
6/23/2007When you lose your passportHajas
6/19/2007Patils wrong on veil: HistoriansHajas
6/18/2007Iraq: Hundreds Go Missing or Get Killed at CheckpointsHajas
6/7/2007Mohammad to be number one boys name in BritainHajas
5/28/2007U.S. Role in Lebanon DebacleHajas
5/28/2007Militants Widen Reach as Terror Seeps Out of IraqHajas
5/26/2007'My brain will not let go'Hajas
4/26/2007Great Emperor Mohaiyuddeen Muhammad AurangazebHajas
4/18/2007India s Most ExpensiveHajas
4/7/2007India goes bananas over its 'future'Hajas
3/31/2007It's Performance, Not Position that CountsHajas
3/29/2007HOW HAPPY IS LIFE WITHOUT A GIRLFRIEND ;-)Hajas
3/25/2007why kids cheat?zulfa
3/24/2007More Factszulfa
3/23/2007Maths and Hazrat Ali radiallahuHajas
3/22/2007Factszulfa
3/18/2007Pearls of Wisdomzulfa
3/10/20077 dont's after a mealHajas
2/24/2007Drunk DrivingHajas
2/19/2007Muslim fertility fall sharper than restHajas
2/7/2007Why married men shouldn't go abroad alone ?Hajas
2/6/2007Caste clouds India's high hopesHajas
1/25/2007`Who cares for the fate of victims?'Hajas
1/21/2007Frustrated MomHajas
1/18/2007The best moments in lifeHajas
12/23/2006FAMILYHajas
12/17/2006Haj subsidy unIslamic, use that money on our education, healthpeer
12/14/2006Eco tourism at Kovai CoutrallamHajas
12/6/2006Why Women Cry Easily !Hajas
11/18/2006Quiz - a Different TypeHajas
10/28/2006Jokesjasmin
10/3/2006Dr. Zakir Naik has invited Pope Benedict XVIHajas
9/18/2006An insufficient apologypeer
7/22/2006Beauty of Maths!peer
7/6/2006Safe heaven for neglected old womenpeer
6/7/2006A SMALL BUT LOVELY STORYHajas
4/26/2006Dubai's relentless construction boompeer
12/17/2005EASY vs DIFFICULTHajas
10/8/2005Attributes of allahbasidh
10/8/2005Does love need a reason..............................?Hajas
10/1/2005Indias Educational Surveychat2musad
9/29/2005Kids r InnocentHajas
9/9/2005Natural Disaster- Katrina Vs. Mumbai Rainschat2musad
8/27/2005Measuring The Rainfallchat2musad
8/23/2005My experiences on July 26 in Mumbai Rain (Tamil)takani
8/9/2005Disaster in Our Homesjasmin
7/3/2005Daddy, why did we have to attack Iraq?peer
5/23/2005Women should rethink displays of overt sexualitypeer
4/4/2005April Fool's DayHajas
2/6/2005Tricky Englishjasmin
8/9/2004a letter from satanjasmin
7/26/2004Who is the worst of all?peer
7/25/200410 things families can do to fight povertyjasmin
7/18/2004Some Tips for Mothers-in-Lawjasmin
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..