Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்
Posted By:peer On 3/1/2018 1:57:02 AM

அல் குர் ஆன் பேசுகிறது .

1.  (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரிந்த பூமியை நோக்கி எடுத்துச் செல்லும் ,மேலும் நாம் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக உள்ளோம் (அல் குர் ஆன் )

இந்த வஹியுடைய வார்த்தைகள் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம் ) அவரகளின் ஆட்சிப் பிரதேசமாகிய ஷாம் எனும் பகுதியை பற்றியே குறிப்பிடுகின்றது .

2. மேலும் அவர்கள் அவர் விடயத்தில் சூழ்ச்சி செய்யவே நாடினார்கள் .எனவே நாம் அந்த சூழ்ச்சிகளில் இருந்து அவரை காப்பாற்றி அவர்களை இழிவடைந்தவர்களாக்கினோம் . மேலும் அகிலத்தாருக்கு நாம் அருளாகக் கொடுத்த பூமிக்கு அனுப்பப் பட்ட லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களையும் காப்பாற்றினோம் .(அல் குர் ஆன் )

இங்கு இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களை பாதுகாத்ததாக குறிப்பிடும் அல்லாஹ் ,லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களையும் அரபு தீபகற்பம் மற்றும் ஈராக் பகுதிகளில் இருந்து ஷாம் பிரதேசத்தின் பால் 
அனுப்பப் பட்டு அவர்களையும் பாதுகாத்ததாக குறிப்பிடுகின்றான் .

3.  தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமில் இருந்து அருள் புரியப்பட்ட பிரதேசங்களால் சூழ்ந்த மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி  ஸ்ரா  எனும் நடுநிசிப் பயணம் மேற்கொள்ளச் செய்த இறைவன் மிகப் பரிசுத்தமானவன் .
அவருக்கு நமது அத்தாட்சிகளை காண்பிக்கவே (இவ்வாறு செய்தோம் ). நிச்சயமாக( உமது இரட்சகனாகிய ) அவன் மிக்க செவியேட்போனும் ,பார்ப்பவனுமாவான் .(அல் குர் ஆன் 17:01)

இங்கு மஸ்ஜிதுல் அக்ஸா என்பது பாலஸ்தீன பூமி என்றும் அதுவே ஷாம் தேசத்தை கட்டி எழுப்பக் கூடியது என்றும் கூறுகின்றான் . இதுபற்றி தப்ஸீர் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகையில் மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ உள்ள பகுதி என்பது ஷாம் பிரதேசமாகும் என்று கூறுகிறார்கள் . 

 


 ஷாமின் நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் 
இஸ்லாத்தின் தெளிவான மாநபியின் (ஸல் ) முன்னறிவிப்புக்கள் இதோ.. .!

1. சலமா பின் நுபைல் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் . மூமின்களின் சாம்ராஜியம் கட்டி எழுப்பப் படுவது ஷாமில் இருந்துதான்  (ஆதாரம் :- தபரானி )

2. ரசூல் (ஸல் ) சொல்லக் கேட்டதாக அலி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகின்றார்கள் 

அல் புதலாஉ (அப்தால்கள் ) என்பவர்கள் ஷாமிலேயே இருப்பார்கள் அவர்கள் நாற்பது பேர்களை கொண்டவர்கள் அவர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை பகரமாக்குவான் . அவர்களுக்காகவே மழை பொழியும் , அவர்களுக்காகவே எதிரிகளுக்கெதிராக உதவி வழங்கப்படும் . அவர்கள் மூலமாகவே ஷாம் வாசிகளுக்குரிய வேதனை நீக்கப்படும் (ஆதாரம் :- அஹ்மத் )

இமாம் இப்னு தைமியா அவர்கள் கூறுகிறார்கள் :-

இங்கு இவர்களையே  ல் அப்தால்  என்று பேரறிஞ்சர்கள் கூறுவார்கள் .ஏனெனில் இவர்கள் நபிமார்களுக்கு பின் அவர்களது பணியை உண்மையாகவே நிறைவேற்ற வந்தவர்கள் . யதார்த்தம் புரியாது செயற்படக் கூடியவர்கள் அல்லர் . இவர்கள் ஒவ்வொருவரும் அறிவு , பேச்சாற்றல் ,மற்றும் இபாதத் ,சமயோசித ஆற்றல் என்பவற்றில் முழுமையானவர்கள் . 
நமார்களது பணியை மாற்றமில்லாத வகையில் அவர்களுக்கு பகரமாக செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் . இதன் காரணமாகவே அறிஞ்சர்கள் இவர்களையே  மறுமை வரை சத்தியத்தின் காவலர்களாக நின்று வெற்றி பெறும் கூட்டம்  எனக் கூறுகின்றார்கள் . (ஆதாரம் :- பதாவா இப்னு தைமியா )

அல்லாஹுத்தஆலா பூமியில் நபிமார்களுக்கு பொறுப்பாக கொடுத்தது முற்று முழுதாக அவனுடைய தீனை நிலை நாட்டி ,மனிதர்களுக்கிடையே அவனின் சட்டத்தை அமுல் படுத்துவதாகும் . நபிமார்களின் வருகை 
ரசூல் (ஸல் ) அவர்களுடன் பூர்த்தியானதன் பின் இப்போது அந்தப் பணியை இந்த  ல் அப்தால்  கள் தாம் செய்வார்கள் என்பதையும் ,காலத்தின் கரங்களில் ஷாம் பகுதியை நோக்கி முன்னறிவிப்பு எனும் சுபசோபனம் சொல்லப் பட்டதற்கும் நடப்பு நிலவரங்களுக்கும் இடையில் தூய இணக்கம் காண வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது .

பசர் அல் அசாத் எனும் கொடியவன் வீழ்த்தப் படுதல் மட்டுமே ஷாமின் கள நிலவரமல்ல , இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் நபிமார்களின் பணியை தொடரக்கூடிய  ல் அப்தால்  களின் பாசறையும் ஷாம் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது . அங்கு நடப்பது சர்வ நிச்சயமாக கிலாபத்தின் மீள் வருகைக்கான போராட்டமே . 

அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) அறிவிக்கிறார்கள் ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் 

மிக உக்கிரமான இரத்தம் சிந்தும் போர் ஏற்படும் போது  வாளிகளில் ஒரு படையணி  டமஸ்கஸில்  இருந்து புறப்படும் அவர்களே அரபிகளில் மிகச் சிறந்த குதிரை வீரர்கள் ஆவார்கள் , தேர்ச்சி பெற்ற யுத்த வீரர்களாகவும் 
இருப்பார்கள் . அவர்களைக் கொண்டே அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலமிக்கதாக்குவான் .(ஆதாரம் :- ஹாகிம் )

இன்று உண்மையில் ஷாம் வாசிகள் தாம் உக்கிரமிக்க போர்க்களத்தில் இறங்கி நின்று அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காக குப்ரிய சிந்தனை வழி வந்த அரசுக்கெதிராக உறுதியாக தங்களை அர்ப்பணித்து போர் புரிபவர்கள் ஷாம் வாசிகளே . இது ஒரு வியக்கத் தக்க விடயமே.ஏனெனில் உண்மையில் அவர்கள் தாம் இத்தகு கடினமான தருணங்களிலும் , சூழ் நிலைகளிலும் அல்லாஹ்விற்காக பொறுமை காத்து தங்களது உயிர் ,உடமை ,உறவுகள் அனைத்தையும் இழந்து அல்லாஹ்வின் பாதையில் போராடும் மிகச் சிறந்த போர் வீரர்கள் . மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று மிக்கவர்கள் .

இன்ஷா அல்லாஹ் இத்தகைய சிறப்பு மிக்க ஷாம் வாசிகளின் அணியில் இருந்து தான் அல்லாஹ்வின் மார்க்கத்தை பலப் படுத்துகின்ற  ல் அப்தால்  களின் கூட்டமும் உள்ளடங்கி இருக்கும் . இப்போது இந்த முஸ்லீம் உம்மத்தின் அங்கத்தவர்களான எமக்கு முன்னிருக்கும் கேள்வி , இது தான் . ஷாமின் சிறப்பு பற்றிய அறிவிப்புகள் தெளிவானவை எனவே நாம் இந்த தூய பணியில் பார்வையாளர்களா ? பங்காளர்களா ? 

அகிலங்கள் அனைத்தினதும் உரிமையாளனே உனது மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காக எமது ஈமானிய உறவுகள் ஷாமிலும் முழு உலகிலும் உனக்காக ஆற்றுகின்ற தூய அர்ப்பணிப்புகளை ஏற்று அவர்களின் பாதங்களை உனது மார்க்கத்தில் உறுதியாக்குவாயாக . மேலும் அருள் பெற்ற அல் அப்தால்  களின் அணியில் எம்மையும் பங்காளர்களாக ஆக்குவாயாக .

 
via FB Mohideen Ahamed Lebbe Bro
 



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..