Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
காயிதேமில்லத் யார் ?
Posted By:peer On 6/6/2021 4:35:17 PM

இன்றைய இளைஞர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான அவர் ஆற்றிய அரும்பணிகள் சிலவற்றை.... அவரை அறியவேண்டும் என்பற்கான பதிவு.


காயிதேமில்லத் யார் ?

இந்த கேள்வி இன்னும் பலருக்கு தேவைப்படலாம்.

இவர் இஸ்லாமிய மக்களுக்கு பாடுபட்ட தலைவராக இருக்கலாம்,என்று சிலரும், இல்லை இவர் பிரிவினை வாத கட்சியின் தலைவர் என சிலருக்கு வெறுப்பும் இருக்கலாம்.

ஆனால் இந்த.நாட்டில் மக்களை மேம்படுத்த தனது படிப்ப,அறிவு, உழைப்பு, உயிர் அனைத்தையும் பயன்படுத்திய சில அரசியல்வாதிகளில் நான் காயிதே மில்லத்தை முதலிடத்தில் வைக்கிறேன்.
ஏன்..?


#மக்களவை உறுப்பினராக டில்லியில் இருக்குமளவும் வெஸ்டேன் கோட் எனுமிடத்தில் சிறிய ஓலை வேயப்பட்ட அறையில் தான் இருந்தார்.

#குரோம்பேட்டையில் இருள் அடர்ந்த சிறிய வீட்டில் கையற்ற சேரில் வாழ்ந்து வந்தார்.

#சென்னை கட்சி அலுவிலகத்துக்கு டிராம், ரெயில் வண்டியில் சென்று வந்தார்.கட்சி அலுவலகத்தில் இரவு தங்க வேண்டி வந்தால் பேப்பர் கட்டை தலையில் வைத்தபடி தூங்கினார்.

#புதுக்கல்லூரி ஆரம்பிக்க இரண்டு வருடம் சிங்கப்பூர், மலேசியா பினாங்கில் ஊருக்கு வராமல் துண்டேந்தி வசூல் செய்தார்.

#சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு எதிரான ஏக்கர்கள் அளவிலான இடத்தை மாமனாருக்கு தொழில் நஷ்டம் வந்து போது கொடுத்தவர்.

#கடைசி வரை எந்தத் தேவைகளுக்காகவும் வாழவில்லை. தனது ஒரே மகனை ராணுவத்துக்கு அனுப்புவேன் என்றவர்.

#தனது மகன் என்று தெரிந்து பெருந்தலைவர் காமராசர் பொறியில் படிப்புககு அனுமதி வழங்கினேன் என்ற போது அந்த படிப்பை நிறுத்திவிட்டு வரச் சொன்னவர்.

#தமிழ் இந்திய தேசிய மொழியாக இருக்கலாம் என்று உணர்வுப்பூர்வமாகப் பேசியவர்.

#எந்தத் தேர்தலிலும் தானோ, தனது ஆதரவாளர்களையோ, தனது கூட்டணியையோ வெல்ல வைத்தவர்.
இவைகளையெல்லாம் தாண்டி அவரது வாழ்வில் நடந்த.இறையருட் செயல்களைக் கேள்விப்படுகையில் நான் ஆச்சரிய முறுகிறேன்.

நாங்கள் டெல்லி சென்ற போது முதுபெரும் வழக்கறிஞர் அதாவுல்லாஹ் சொன்னது.
#காயிதே மில்லத்தும் அவரும் ஒரு பெருநாள் தொழுக்கைக்கு கடமைகளை முடித்து விட்டு செல்கிற போது தொழுகை முடிந்து இருந்ததாம். என்ன இறைக் கடமையை விட்டு விட்டோமோ என்று எண்ணுகையில் தொழ வைத்த மதகுரு அசரத் சொன்னாராம். எனது தொழுகையின் போது சிறிநீர் வந்துவிட்டது. அதனால் தொழுகை பூர்த்தியாகாது. எனவே இனியொரு.தடவை தொழுவோம் என்றாராம். இருவரும் இறைத் தொழுகையை மகிழ்வோடு நிறைவேற்றினார்களாம்.

#அதேபோல் மாநிலங்களவை புதிதாக துவங்கப்பட்டபோது உறுப்பினர்கள் ஆனவர்களை இரண்டு வருட முடிவில் சிலரை நீக்க வேண்டி வந்த போது திருவுளச்சீட்டு போடப்பட்டது. அதில் காயிதே மில்லத்துக்கும். பிரபல சட்டமேதை டி.டி.கே எனப்படும் கிருஷணமாச்சாரிக்கும் போட்டி.

அப்போது அவர் அமைச்சர் ஆனால். இறையருள் காயிதேமில்லத் பக்கம் இருந்தது. திருவுளச்சீட்டில் அவர் பெயர் வந்தது. காயிதே மில்லத் அவர்கள் எந்த சமூகத்திற்கும், எதிராக அவரது உரைகளில் எந்தக் கருத்தும் சொல்லியதில்லை.

நூற்றுக்கணக்கான பள்ளிகள், 14 கல்லூரிகள் ஏற்படக் காரணமானவர்.
இன்னும் உண்டு. அவரது பிறந்த நாளில் நினைவுகள் எழுந்தன.
இவரைப் போல சமூகத் தலைவர்கள் பாடுபட்டால் அந்த சமூகம் பெரும் பாய்ச்சலோடு வளரும். அப்படியான தலைவர்கள் இப்போதும் வரவேண்டும்.அதுவே எனது ஆசையும், வேண்டுதலும்.

நன்றி: வழக்கறிஞர் M M Deen




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..