Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
You must vote (Tamil)
Posted By:namaduoor On 4/21/2006

எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்று தெயவில்லை. என் கணிப்பில் எதுவும் சயில்லை. அதனால் ஓட்டுப் போடவில்லை என தங்கள் செய்கைக்கு நியாயம் கற்பிப்பார்கள் சிலர். களம் இறங்கியுள்ள கட்சிகளின் கொள்கைகளைஇ செயல்பாடுகளைஇ சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒரு கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும். வாக்களிப்பது நம் தார்மிகக் கடமைகளுள் ஒன்று என்பது படித்தவர்களுக்கு ஏன் புவதில்லை?
யார் ஆண்டால் என்ன? என விட்டேத்தியாக இருக்காமல் நம்மை ஆளப்போகிறவர் யார்? என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். தேர்தலின் போது தான் சாமான்யனின் மதிப்பு உயருகிறது. அந்த ஒரு நாள் கதாநாயகன் அவன்தான். எனவே தான் அந்த மயாதையை அவன் இழக்கத் தயாராக இல்லை.
படித்தவர்கள் தேர்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். நம் ஓட்டுமையை வீணாக்கக்கூடாதுஇ நாமே பல குற்றங்களுக்கு ஏதுவாக இருக்கக் கூடாது என்று உணராமல் பிழை செய்கிறார்கள். எனவேதான் "வாக்குமை நம் பிறப்புமை. வாக்களியுங்கள்' என மக்களுக்கு உணர்த்த விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்படியும் போடாதவர்களை என்ன செய்ய? குடு குடு கிழவியைத் தூக்கிக் கொண்டு வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள். கண் தெயாதவர்கள் கூட வந்து வாக்களிக்கிறார்கள். ஆனால் கற்றறிந்த நாம்இ அரசின் திட்டங்களை நேரடியாக அனுபவிக்கும் நாம்இ எதை எப்படிச் செய்தால் ஆதாயம் கிட்டும் எனத் தெந்த நாம் ஓட்டுப் போடவில்லை என்பது சயா?
இந்த ஒரு சிறு கடமையைக் கூடச் செய்யாதவர்கள் அரசின் கடமை எது எது என்று பட்டியல் இடுகிறார்கள். தும்பை விட்டு பின்னர் வாலைப் பிடிப்பவர்கள் இவர்கள். நேர்மையற்றவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று பேசுவதோடு ச. செயலில் காட்ட வேண்டாமா? நம்மை ஆளப் போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் வலிமைஇ உமை நம் விரல்களுக்கு இருக்கிறது என்று கர்வம் கொள்ள வேண்டாமா? நம் விரல்களில் வைக்கப்படும் "மை' நாம் பொறுப்பற்றவர் என்ற களங்கத்தைத் துடைக்கும்.
ஒருக்கால் நமக்கு வாக்குமை மறுக்கப்பட்டுஇ நாம் அந்த உமையைப் போராடிப் பெற்றிருந்தால்இ அதன் அருமை நமக்குத் தெந்திருக்குமோ என்னவோ? தற்போது தெயவில்லை. தேச விடுதலைக்காக எத்தனை பேர் பாடுபட்டார்கள்? எத்தனை ரணங்கள்! காயங்கள்! வலிகள்! நம்மை நாமே ஆள வேண்டும் என்ற அவர்களின் ஆசைஇ கனவு நிறைவேற உயிர்த் தியாகம் செய்தவர்கள் நம்மை மன்னிப்பார்களா? ஓட்டுப் போடுவதற்குக் கூட சலிப்பா? போகாவிட்டால் என்ன செய்து கொண்டிருப்போம்? தூங்குவோம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்போம்.
ஒரே ஒரு வாக்கு கூட ஒருவன் தலைவிதியை மாற்றக் கூடுமே! ஒரு நல்லவரை அயணையில் ஏற்றுமே! ஓட்டுப் போடப் போகாதவர்கள் என்னதான் தங்கள் செயலை நியாயப்படுத்தினாலும் அது அவர்கள் நம் ஜனநாயகத்திற்கு இழைக்கும் மாபெரும் குற்றம். தேர்தல் நாளன்று விடுமுறை கொடுப்பது ஓய்வெடுக்கவோஇ ஊர் சுற்றவோ அன்று. கள்ள ஓட்டுப் போடுவது எந்த அளவுக்குக் குற்றமோ அந்த அளவுக்கு நல்ல ஓட்டைப் போடாமல் இருப்பதும்தான்! ஒரு குற்றத்திற்குத் தெந்தே துணை போக வேண்டுமா? கள்ள ஓட்டுப்போட முயற்சிப்பவர்களால்தான் கலகம் ஏற்படுகிறது. வன்முறை ஏற்படுகிறது. உயிர்ச்சேதங்கள் வரை இட்டுச் செல்கிறது. தேர்தல் முடிந்தாலும் இந்த கள்ள ஓட்டுப் பிரச்சினை பேசப்படுகிறதுஇ பிரச்சினை ஆகிறது. இதையெல்லாம் தடுக்க ஒரே வழிஇ நாம் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதுதான்.
இம்முறையாவது 100 சதவிகித வாக்குப்பதிவு இருக்குமா? இருக்க வேண்டும். தேர்தல் என்ன பக்கத்து வீட்டில் நடக்கும் பண்டிகையா? நாம் நம் சன்னலோரம் வசதியாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க? இது நம் தேர்தல். இதில் நம் பங்களிப்பு மிக மிக முக்கியம். இதைக் கூடச் செய்யாமல் இருப்பவர்கள்இ எந்தக் கட்சியையும்இ அரசியல்வாதியையும் விமர்சிக்கும் தகுதியற்றவர்கள். சொந்த வேலை இருந்ததுஇ அதனால் வாக்குப்பதிவு செய்யப் போகவில்லை என்று சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. ஓட்டுப் போடுவதும் நம் சொந்த வேலைதான். நம் தொகுதிக்கான வேட்பாளரை நாம் தேர்ந்தெடுக்கப் போகாமல்இ பின்னர் எந்த உமையில் அதைச் செய்யுங்கள்இ இதைச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது? நம்மிடையே யார் விவரம் அறியாதவர்கள்? ஓட்டுப் போடாவிட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று தெயும். எனவே அலட்சியத்தையும்இ சோம்பலையும் உதறித் தள்ளிவிட்டு வாக்களிக்கப் போவோம் - தவறாமல்! திரும்புவோம் மை கண்ட விரலோடும் மன நிறைவோடும்!

 




Politics
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..