Home >> EMAN
  Login | Signup  

ஏர்வாடி முஸ்லிம் சங்கம்

தோற்றம் : எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ஏர்வாடி மக்களின் நலனிற்காக  ஏர்வாடி சகோதரர்களால் 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை நகரத்தில் ஏர்வாடி முஸ்லிம் சங்கம் ( Eruvadi Muslim AssociatioN - EMAN )  தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய சகோதரிகளின் திருமண உதவிக்காக தொடங்கப்பட்டாலும் நாளடைவில் ஏர்வாடி மக்களின் நலனுக்காக பல்வேறு உதவிகளை வழங்க ஆரம்பித்தது.

தற்போதைய செயல்பாடுகள் :
•      நன்றாக பயிலும் ஏழை மாணவ மாணவிகளின் படிப்பிற்கு உதவுவது.
•      வசதியற்றோரின் மருத்துவ செலவிற்கு உதவுவது.
•      சிறு தொழில் தொடங்க கடன் கொடுத்து உதவுவது.
•      ஏர்வாடியில் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுவது.
•      பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் திருமணத்திற்கு உதவுவது
•      ஏர்வாடி மக்களின் ஈருலக வெற்றிக்காக பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துவது

இறைவனின் மகத்தான கருணையினால் நமது ஈமான் மூலமாக இதுவரை  ரூபாய்   13,46,748.00     மதிப்புள்ள உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏர்வாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வழங்குவதற்காக பித்ரா வழங்கிய தொகை ரூபாய் 5,43,597.00 ஆகும்

அல்ஹம்துலில்லாஹ். நாம் கடந்த 14 வருடங்களில் மட்டும் ஏறத்தாழ 14 லட்சம் ரூபாய் அளவுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். ஒரு தனி நபராக நம்மால் இவ்வாறு உதவி செய்ய முடியாது. ஆனால் நாம் ஒரு ஜமாஅத்தாக இருப்பதால் நாம் வழங்கும் 10 திர்ஹமைக் கொண்டு இது சாத்தியமாகிறது.
எனவே ஈமானில் உறுப்பினராக இல்லாத சகோதரர்கள் உடனடியாக தங்களை உறுப்பினராக்கி இந்த அறப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் அழைக்கிறோம். தங்களது சந்தாவையும் தவறாமல் செலுத்தி வரவும். மறந்து விடாதீர்கள் நீங்கள் தருவது வெறும் 10 திர்ஹம் அல்ல – பல மக்களின் வாழ்க்கை…

 

ஈமான் சந்தாவை தாங்கள் தங்களது ஆலோசனைக்குழு உறுப்பினர் மூலமாகவும் அல்லது  வங்கியின் மூலமாகவும் செலுத்தலாம். ஈமான் வங்கிக்கணக்கு விபரம் -
Account Name : Mohamed Ali or / and Mohamed Uvais
Account No : 0049 659360 050
Bank : Emirates Islamic Bank, Abuhail Branch  
செயல்முறை
•        ஈமான் உறுப்பினர்களின் குறைந்தபட்ச மாதச்சந்தாத்தொகை திர்ஹம் 10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்மையை நாடி இதற்கு அதிகமாக தர விரும்பும் உறுப்பினர்களும் அளிக்கலாம்.
•        பிரதி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையில் பொதுக்குழு கூட்டம்  நடைபெறும்.
•        பிரதி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும்
•        ஊரிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் வாசித்துக் காண்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கிணங்க முடிவு எடுக்கப்படும். எடுத்த முடிவுகள் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
•        ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு எடுக்கும் முடிவே இறுதி முடிவாகும்.
•        கூட்டத்தில் முடிவு செய்த கடன் மற்றும் உதவித் தொகைகள் ஈமான் -  ஏர்வாடி பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பதாரரிடம் வழங்கப்படும்.
•        கடன் உதவி பெறுவோர்களிடமிருந்து பத்திரத்தில் எழுதி கையொப்பம் பெறப்படும்.

ஈமானின் அறப்பணிகள் தொடர்ந்து நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும். ஈமான் நிர்வாகம் சம்பந்தமாகவும் ஏர்வாடி மற்றும் ஈமானின் வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Eruvadi Muslim Association
Dubai
United Arab Emirates
Email : emandubai@gmail.com