அமீரக ஈமான் இஃப்தார் நிகழ்ச்சி / 26.06.2015 / Photos

Posted by S Peer Mohamed (peer) on 7/10/2015 6:34:47 AM

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் கிருபையால் ஈமான் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி 26.06.2015 வெள்ளி அன்று துபையில், கராமாவில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக சகோதரர் ரபீக் ( Dnata) திருமறை வசனங்களை ஓதி விளக்கம் அளித்தார். திருக்குர்ஆனின் 19 வது

அத்தியாயத்தின் 58 முதல் 60 வசனங்களை ( 
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும்,இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.

19:59. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.


19:60. தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது)

அழகிய முறையில் ஓதிய சகோதரர் ரபீக், தொழுகையின் முக்கியத்துவத்தினை விளக்கினார்கள்.

பின்னர் ஈமானின் பணிகள் பற்றி சகோதரர் உவைஸ் தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய ஈமான் சார்பாக 41 நபர்களுக்கு மருத்துவ உதவியும் 17 திருமண உதவிகளும் வழங்கப்பட்டனர். 
மேலும் சிறு தொழில் கடன் மூவருக்கும் கல்விக் கடன் இருவருக்கும் கொடுக்கப்பட்டன.

அரசினர் பெண்கள் பள்ளிக்கு 20 டெஸ்க், பெஞ்ச்களும் ஈமான் சார்பாக வழங்கப்பட்டது.

ஈமான் மக்தப் கமிட்டியின் பணிகள் :

ஈமான் சார்பாக பிப்ரவரி 2014 அன்று பைத்துஸ்ஸலாம் பள்ளியில், பள்ளியுடன் இணைந்து மக்தப் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக ஆகும் வருமானத்திற்கு அதிகமான செலவுகளை மக்தப் கமிட்டி உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். தற்போது இந்த மக்தபில் 143 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு இந்த மக்தப் செயல்படுகிறது. தற்போது

நவம்பர் 2014 அன்று மேல முஹல்லாவில் ஆரம்பிக்கப்பட்ட மக்தபில் 77 குழந்தைகள் பதிவு 
செய்துள்ளனர்.இதற்காக ஒத்துழைப்புவழங்குபவர்கள் ஈமான் மக்தப் கமிட்டியைத் ( சகோதரர் பீர் முஹம்மத் 050-5656624) தொடர்புக் கொள்ளலாம். (இன்ஷா அல்லாஹ் விரைவில் பள்ளி செல்லும் மாணவியர்களுக்காக பெண்கள் மக்தப் ஆரம்பிக்கப்பட உள்ளது.)

ஈமான் ஜகாத் கமிட்டி பற்றிய விபரமும் தெரிவிக்கப்பட்டது. 2012 டிஸம்பர் அன்று ஆரம்பிக்கப்பட்ட ஜகாத் கமிட்டி மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாதந்தோறும் 71 குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஜகாத் தொகைகளை வழங்க விரும்பும் சகோதரர்கள் ஜகாத் கமிட்டியைத் ( சகோதரர் முஹைதீன் 050-6769902) தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பின்னர் சகோதரர் ஜகரியா (காயல்பட்டிணம்) ”குற்றவாளிக்கூண்டில் முஸ்லிம் ” என்றதலைப்பில் உரையாற்றினார்.

திருமறையின் 25 வது அத்தியாயத்தின் 30 வது வசனத்திற்கு விளக்கமாக  “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்) அவர்களது உரை அமைந்தது. முஸ்லிம்கள் தங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து நன்மைகளை அதிகரிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும், குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையில் தங்களது வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அதன் பின்னர் ஈமான் தொடங்கும்போது உறுதுணையாக இருந்த காயல்பட்டிணம் தாவூத் காக்கா சிற்றுரை நிகழ்த்தினார்.

10 பேராக இருந்த ஈமான் இந்தளவு வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மனம் மகிழ்வதாக அவர் தனது உரையில் தெரிவித்தார். தற்போதுள்ள தனது சிறந்த நிலைக்கு காரணம் சகோதரர் அபுபக்கர் ஜின்னா என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்த அவர், ஈமான் வளர்ச்சிக்கு துஆ செய்தார்.

இறுதியாக சகோதரர் ஷம்சுதீன் ஷாபி நன்றியுரை நிகழ்த்தினார். கலந்துக் கொண்ட உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த சகோதரர் ஷாபி, தொடர்ந்து உறுப்பினர்களின் சந்திப்புகளுக்காக ஈத் ,இப்தார் சிறப்பு நிகழ்வுகள் தவிர மேலதிக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் ஏறத்தாழ 150 ஏர்வாடி சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர். கராச்சி தர்பார் அந்த 3 மணி நேரம் குட்டி ஏர்வாடியாக திகழ்ந்தது என்றால் மிகையாகாது.

 

போட்டோக்கள்:

http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=77_2015_UAE-Iftar-1

http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=77_2015_UAE-Iftar-2

 











EMAN NEWS
1. 29-03-22 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 12-30-20 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
3. 28-47-19 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
4. 16-54-19 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
5. 31-36-17 அமீரக ஈமான் பாரம்பரிய விளையாட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி: (With Photos) - S Peer Mohamed
6. 21-39-17 ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு - S Peer Mohamed
7. 21-24-17 ஈமான் அமீரகம் நடத்தும் ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு - S Peer Mohamed
8. 18-17-17 ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – ஈமான் அமீரகம் - S Peer Mohamed
9. 25-33-16 ஈமானிய மொட்டுக்கள் 2016 - S Peer Mohamed
10. 08-11-16 M 2016: இஸ்லாமிய குறு நாடகம் - 3 (வரதட்சிணை) - S Peer Mohamed
11. 17-41-16 அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி - S Peer Mohamed
12. 27-24-16 ஈமான் ஜகாத் மற்றும் வரலாறு சிறப்பு நிகழ்ச்சி - S Peer Mohamed
13. 10-17-15 ஈமான் இஃப்தார் - மலரும் நினைவுகள் - S Peer Mohamed
14. 26-50-15 ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 - S Peer Mohamed
15. 02-30-15 01-ஜனவரி-2015. ஈமான் அமீரகம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி - S Peer Mohamed
16. 11-06-14 மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014 - Haja Mohideen
17. 03-48-14 ஈமான் அமீரகம் பெருநாள் கூட்டம் / 04-10-2014 - S Peer Mohamed
18. 13-42-14 வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் - S Peer Mohamed
19. 10-45-13 இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள் - S Peer Mohamed
20. 30-00-12 EMAN - Dubai: Cricket - Venue and Location Map - S Peer Mohamed
21. 22-00-12 ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி (26-10-2012) - S Peer Mohamed
22. 13-00-12 ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் 14.09.2012 - Mohamed Uvais
23. 04-00-12 ஏர்வாடி செய்திகள் - Mohamed Uvais
24. 13-00-12 ஈமான் சிறப்புக் கூட்டம் - Mohamed Uvais
25. 22-00-12 EMAN UAE - Sports Day - S Peer Mohamed
26. 24-00-12 டாக்டர் அப்துல்லாஹ் / ஏர்வாடி 6வது தெரு உரை / வீடியோ - S Peer Mohamed
27. 19-00-12 ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012 - Mohamed Uvais
28. 11-00-12 கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
29. 23-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
30. 20-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை - 2 - S Peer Mohamed



The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..