Home >> News >> Detail
  Login | Signup  
Eruvadi Muslim Association







அமீரக ஈமான் பாரம்பரிய விளையாட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி: (With Photos)

Posted by S Peer Mohamed (peer) on 12/31/2017 2:36:47 PM

29 டிசம்பர் 2017
அமீரகத்தின் ஷபீல் பார்க் அன்று சிறிது நேரம் குட்டி ஏர்வாடியாக மாறியது என்றால் மிகையல்ல…
பாரம்பரிய விளையாட்டுக்களுடன் ஏர்வை சொந்தங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஏறத்தாழ 250 சகோதர, சகோதரிகளுடன் குழந்தைகளும் குதூகலத்துடன் அங்கு குழுமினர். ருவைஸ் போன்ற தூரமான இடங்களிலிருந்தும் சகோதரர்கள் கலந்துக் கொண்டது சிறப்பு.

காலையில் பம்பரம், குச்சிக் கம்பு, ஆபியம் மணியாபியம் என பம்பரமாக சுழன்று விளையாட ஆரம்பித்தனர். விளையாடும்போது அங்கு வந்த வெளிநாட்டினர் விளையாட்டினை ரசித்து புகைப்படம் எடுத்தனர். அநேகமாக நமது ஊர் விளையாட்டுக்கள் இந்நேரம் அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ பிரபலம் ஆகி இருக்கும்.

ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் சுவையான நெய் சோறு, சிக்கன், கறிக்குழம்பு, இனிப்புடன் மதிய உணவு தலைவாழை இலையில் பரிமாறப்பட்டது. சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர். கல்யாண வீட்டு சாப்பாடு போல் இருந்ததாக ஒரு சகோதரர் குறிப்பிட்டார்.

பின்னர் வந்திருந்தவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு கயிறு இழுக்கும் போட்டி, ஏழு கல் , உறியடி. கபடி என பால்ய காலத்திற்கே இழுத்து செல்லும் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டது. 40 வயதிற்கு கீழ் மற்றும் 40 வயதிற்கு மேல் என ஓட்டப் பந்தயமும் நடத்தப்பட்டது

இது ஒரு புறம் நடக்க, சகோதரிகள் சிட்டிக்கல், பல்லாங்குழி, டாகஸி டாக்ஸி , மூலை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களில் மூழ்கினர். மொழி இன்றி சொல் என பழமொழியை சைகையுடன் சொல்லும் போட்டியும் பெண்களுக்கு நடைபெற்றது.

குழந்தைகளுக்காக லெமன் ஸ்பூன், சாக்கு ஓட்டம், தமிழில் ஆங்கில வார்த்தைகளை சொல்லும் போட்டி , ஓட்டப் பந்தயம் போன்றவை நடத்தப்பட்டது.

இதற்காக முயற்சி எடுத்து உழைத்த சகோதரர்கள் அனைவருக்கும் குறிப்பாக சகோதரர்கள் அல்தாஃப், தவ்ஃபீக், அமீர் புஹாரி , முஹைதீன் ஆகியோருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் அனைத்து நலன்களையும் அருள்வானாக.

ஊரிலிருந்து ஈமான் நிகழ்ச்சிக்காகவே வந்து கலந்துகொண்டு சிறப்பித்ததுபோல் அமையப்பெற்றது ஈமான் நிறுவனர்களில் ஒருவரான ஷாபி காக்கா , லெப்பைவளவு முத்தவல்லி பாரூக் காக்கா, புதுக்குடி ஸேக் காக்கா, அவுலியா சார் ஆகியோரின் வருகை. இது தவிர பொதக்குடி ஜலால் காக்கா , டாக்டர் ஸாஹுல் ஹமீத் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டது சிறப்பாக இருந்தது.

காலை, மாலை மண்டை வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட தேனீர் வழங்கியது cherry in the cake ஆக அமைந்தது

வாட், வேலை போன்ற டென்சனிலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெற்ற ஒரு நாளாக இந்த நாள் அல்லாஹ்வின் அருளால் அமைந்தது என்றால் மிகையல்ல…

ஜஸாக்குமுல்லாஹு கைரா.

ஈமான் டிரஸ்ட்
ஏர்வாடி


இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.

http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=69_2017_Eman_Cultural_Day-I

http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=68_2017_Eman_Cultural_Day-II

http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=67_2017_Eman_Cultural_Day-III

 

 












EMAN NEWS
1. 29-03-22 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 12-30-20 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
3. 28-47-19 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
4. 16-54-19 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
5. 21-39-17 ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு - S Peer Mohamed
6. 21-24-17 ஈமான் அமீரகம் நடத்தும் ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு - S Peer Mohamed
7. 18-17-17 ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – ஈமான் அமீரகம் - S Peer Mohamed
8. 25-33-16 ஈமானிய மொட்டுக்கள் 2016 - S Peer Mohamed
9. 08-11-16 M 2016: இஸ்லாமிய குறு நாடகம் - 3 (வரதட்சிணை) - S Peer Mohamed
10. 17-41-16 அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி - S Peer Mohamed
11. 27-24-16 ஈமான் ஜகாத் மற்றும் வரலாறு சிறப்பு நிகழ்ச்சி - S Peer Mohamed
12. 10-17-15 ஈமான் இஃப்தார் - மலரும் நினைவுகள் - S Peer Mohamed
13. 10-34-15 அமீரக ஈமான் இஃப்தார் நிகழ்ச்சி / 26.06.2015 / Photos - S Peer Mohamed
14. 26-50-15 ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 - S Peer Mohamed
15. 02-30-15 01-ஜனவரி-2015. ஈமான் அமீரகம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி - S Peer Mohamed
16. 11-06-14 மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014 - Haja Mohideen
17. 03-48-14 ஈமான் அமீரகம் பெருநாள் கூட்டம் / 04-10-2014 - S Peer Mohamed
18. 13-42-14 வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் - S Peer Mohamed
19. 10-45-13 இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள் - S Peer Mohamed
20. 30-00-12 EMAN - Dubai: Cricket - Venue and Location Map - S Peer Mohamed
21. 22-00-12 ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி (26-10-2012) - S Peer Mohamed
22. 13-00-12 ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் 14.09.2012 - Mohamed Uvais
23. 04-00-12 ஏர்வாடி செய்திகள் - Mohamed Uvais
24. 13-00-12 ஈமான் சிறப்புக் கூட்டம் - Mohamed Uvais
25. 22-00-12 EMAN UAE - Sports Day - S Peer Mohamed
26. 24-00-12 டாக்டர் அப்துல்லாஹ் / ஏர்வாடி 6வது தெரு உரை / வீடியோ - S Peer Mohamed
27. 19-00-12 ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012 - Mohamed Uvais
28. 11-00-12 கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
29. 23-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
30. 20-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை - 2 - S Peer Mohamed



The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..