ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022

Posted by S Peer Mohamed (peer) on 6/29/2022 4:03:07 PM

போட்டி விவரங்கள்

 

ஈமான் அறக்கட்டளை சார்பாக, நம் வளரும் தலைமுறையினருக்கு மக்தப் மதரஸா கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் ஊரின் நலனை கருத்தில் கொண்டும் கடந்த வருடங்களைப் போல இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக இணையதளத்தில் நத்தப்பட்ட ஈமானிய மொட்டுக்கள் நிகழ்வு இறையருளால் இந்த வருடம் ஊரில் மீலாது மைதானத்தில் இரண்டு நகழ்ச்சியாக நடைபெறயுள்ளது/

16 & 17 ஜுலை  2022 (சனி & ஞாயிறு)
இடம்:                         மீலாது மைதானம், 6வது தெரு

 

நாள் :      16 ஜுலை 2022 (சனி)

நேரம்:         காலை 9.00 to 12.30           (முதல் அமர்வு: இணையதள (Online)  போட்டிகள்)

(ஈமான் ஆடை மேளா,  பாரம்பரிய பண்டக சாலை, புத்தகங்கள் பகிர்வு, கண்ணாடி ஃபிரேம் பகிர்வு)

மாலை 4.30 to 10.00  (2ம் அமர்வு – போட்டிகள் & சிறப்பு அமர்வுகள்)

 

 

நாள் :         17 ஜுலை 2022 (ஞாயிறு)

நேரம்:        காலை 9.00 to 12.30       (முதல் அமர்வு - போட்டிகள்)

மாலை 4.30 to 10.00  (2ம் அமர்வு – போட்டிகள், சொற்பொழிவு & பரிசளிப்பு)

 

இணையதள போட்டிகள் (Online)

  1. ”வருங்கால ஹாஃபிழ்கள்” - 5 ஜுஸ்வுகள் குர்ஆன் மனனம்  
  2. “எமது முஹல்லா, எமது சிறப்பு” - பேச்சுப் போட்டி  (Online)
  3. 3.     ”வேர்களைத் தேடி” - பெண்களுக்கான வினாடி வினா போட்டி [Online Kahoot Quiz ]

    மதரஸா மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள்
  4. நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் மற்றும் இமாம் நவவி அவர்களின் 40 ஹதீத்களிலிருந்து வினாடி வினா போட்டி (Quiz)
  5. இஸ்லாமியக் குறு நாடகம் ( Drama / Skit)
  6. படம் பார்த்து நபிமார்களின்  வரலாறு  கூறும் போட்டி - சுட்டிக் குழந்தைகளின் குட்டிக் கதைகள்.

 

பொதுவான போட்டிகள்

  1. “விளையாட்டில் மிளிர்வோம் வாழ்க்கையில் ஒளிர்வோம்” - கருத்தரங்கம் -
  2. எழுத்தழகியல் (Calligraphy) கலை போட்டி மற்றும் கண்காட்சி.
  3. “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” - குறும்பட போட்டி

10. “மலரும் நினைவுகள்” – பெரியவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்

 

 
  • போட்டிகளின் விதி முறைகள், பங்குபெற பதிவு செய்யும் படிவங்களை (Registration Form) http://www.nellaieruvadi.com/em22 என்ற இணையதளத்தில் காணலாம்.
  • பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்குபெற முடியும்.
  • அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள நேரிட்டால் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மேலதிக தகவல்களுக்கு ஈமான் பிரதிநிதி முகைதீன் அவர்களை   75388 00121 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.

 

 

நிகழ்வுகள் / கண்காட்சிகள் விவரங்கள்:

பாரம்பரிய பண்டகசாலை – Traditional Shops

v  பாரம்பரிய பண்டக சாலைகள் (கடைகள்) மாதிரி  மீலாது மைதானத்தில் ஈமான் மூலம் ஏற்பாடு செய்யப்படும். இதில் வைப்பதற்காக கலந்து கொள்ள விரும்புபவர்கள் பாரம்பரிய பாத்திரத்தில் பாரம்பரிய் பண்டங்கள் ஒன்றை (உதா : கல்கோனா, கமர்கட்டு, குழல், etc..) கொண்டு வந்து  வைக்க வேண்டும்.

 

ஈமான் ஆடைமேளா

v  ஈமான் ஆடை வங்கியிலுள்ள உபயோகப்படுத்தும் படியான புத்தாக்கம் செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள், இளையோர், முதியோர் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான ஆடைகளை தேவையுடையர்கள் கண்ணியாமான முறையில் நேரில் வந்து பார்த்து தேர்ந்தெடுத்து செல்லும் வகையில் ஆடைகள் வைக்கப்படிருக்கும்.

v  உங்களிடமுள்ள அதிகப்படியான, உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் ஆடைகளை தேவையுடையர்களுக்கு பகிர்ந்து கொள்ள நாடினால் அவற்றை சலவைச் செய்து, அயர்ன் செய்து கொண்டு வந்தும் தரலாம்.  

 

எழுத்தழகியல் (Calligraphy) – மாணவ மணிகளின் கலை படைப்புகள்

v  எழுத்தழகியல் (Calligraphy) போட்டியில் கலந்துகொண்ட மாணவமணிகளின் படைப்புகள் காட்சிக்காக வைக்கபடும்.

 

புத்தகங்கள் பகிர்வோம்! அறிவைப் பெருக்குவோம்!

v  உங்களிடமுள்ள நீங்கள் படித்து முடித்த, இனிமேல் தேவைப்படாத நல்ல புத்தகங்களை கொண்டு வந்து தாருங்கள்.

v  உங்களுக்கு பயன்படக் கூடிய நல்ல புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்.

v  வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம்.

 

கண்ணாடி ஃபிரேம் வழியே கருணையை பகிர்வோம்!

v  ஈமான் கண்ணாடி ஃபிரேம் வங்கியிலுள்ள உபயோகப்படுத்தும் படியான நல்ல நிலையிலுள்ள கண்ணாடி ஃபிரேம்கள் காட்சியகப் படுத்தப் பட்டிருக்கும். தேவையுடையர்கள் கண்ணியாமான முறையில் நேரில் வந்து பார்த்து தேர்ந்தெடுத்து செல்லாம்.

v  உங்களிடமுள்ள அதிகப்படியான, உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் கண்ணாடி ஃபிரேம்களை தேவையுடையர்களுக்கு பகிர்ந்து கொள்ள நாடினால் அவற்றை கொண்டு வந்து தரலாம்.  





EMAN NEWS
1. 12-30-20 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
2. 28-47-19 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
3. 16-54-19 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
4. 31-36-17 அமீரக ஈமான் பாரம்பரிய விளையாட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி: (With Photos) - S Peer Mohamed
5. 21-39-17 ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு - S Peer Mohamed
6. 21-24-17 ஈமான் அமீரகம் நடத்தும் ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு - S Peer Mohamed
7. 18-17-17 ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – ஈமான் அமீரகம் - S Peer Mohamed
8. 25-33-16 ஈமானிய மொட்டுக்கள் 2016 - S Peer Mohamed
9. 08-11-16 M 2016: இஸ்லாமிய குறு நாடகம் - 3 (வரதட்சிணை) - S Peer Mohamed
10. 17-41-16 அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி - S Peer Mohamed
11. 27-24-16 ஈமான் ஜகாத் மற்றும் வரலாறு சிறப்பு நிகழ்ச்சி - S Peer Mohamed
12. 10-17-15 ஈமான் இஃப்தார் - மலரும் நினைவுகள் - S Peer Mohamed
13. 10-34-15 அமீரக ஈமான் இஃப்தார் நிகழ்ச்சி / 26.06.2015 / Photos - S Peer Mohamed
14. 26-50-15 ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 - S Peer Mohamed
15. 02-30-15 01-ஜனவரி-2015. ஈமான் அமீரகம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி - S Peer Mohamed
16. 11-06-14 மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014 - Haja Mohideen
17. 03-48-14 ஈமான் அமீரகம் பெருநாள் கூட்டம் / 04-10-2014 - S Peer Mohamed
18. 13-42-14 வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் - S Peer Mohamed
19. 10-45-13 இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள் - S Peer Mohamed
20. 30-00-12 EMAN - Dubai: Cricket - Venue and Location Map - S Peer Mohamed
21. 22-00-12 ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி (26-10-2012) - S Peer Mohamed
22. 13-00-12 ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் 14.09.2012 - Mohamed Uvais
23. 04-00-12 ஏர்வாடி செய்திகள் - Mohamed Uvais
24. 13-00-12 ஈமான் சிறப்புக் கூட்டம் - Mohamed Uvais
25. 22-00-12 EMAN UAE - Sports Day - S Peer Mohamed
26. 24-00-12 டாக்டர் அப்துல்லாஹ் / ஏர்வாடி 6வது தெரு உரை / வீடியோ - S Peer Mohamed
27. 19-00-12 ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012 - Mohamed Uvais
28. 11-00-12 கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
29. 23-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
30. 20-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை - 2 - S Peer Mohamed



The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..