Home >> Events Calendar
  Login | Signup  

Events


Event Date: 3/31/2021
Afterlife of S. ஹபீப்புல்லா
Date: 3/31/2021        
Time: 01:15

ஜனாப்: S. ஹபீப்புல்லா காக்கா அவர்கள் இன்று 31-03-2021 புதன் கிழமை அதிகாலை 1.15 மணி அளவில் வபாஃத் ஆனார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார்:
நெல்லை ஏர்வாடி, லெப்பை வளவு முஹல்லாவில் உள்ள, உப்பு வடக்கு தெரு கதவு எண்: 33/14. என்ற முகவரியில் வசித்து வந்தார்கள்.

அன்னார்:
தங்க மீரார் T.O.S. சவுக்கத் அலி அவர்களின் மகன் ஆவார்கள்.

அன்னார்:
ஜனாபா: அல்லிமா அவர்களின் கணவர் ஆவார்கள்.

அன்னார்:
அனீஸ் பாத்திமா,
ஆயிஷா,
ஸாலிஹா,
ஆகியோரின் அன்புத் தகப்பனார் ஆவார்கள்.

அன்னார்:
குலாம் முஹம்மது,
ஜீனத் நிஷா,
தவ்லத்,
ஹாஜிமா மெஹர் நிஷா,
ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்கள்.

அன்னார்:
பாம்பே மெட்டல் கடை உரிமையாளர் ஆவார்கள்.

அன்னார்:
முன்னாள் ஈமான் சங்க சவுதி பொறுப்பாளராக நீண்ட காலம் இருந்தார்கள்.

சமூக சேவை ஆர்வலர் மட்டுமின்றி,
பொதுச் சேவைகளிலும்,
தேவையுடையோருக்கு உதவுவதிலும்,
தன்னையும் இணைத்துக் கொள்ளும் ஒரு நல்ல மனிதர்.

பள்ளியோடு தொடர்புடையோர் அனைவருக்கும் இவரின் மறைவு தனிப்பட்ட இழப்பு.

‘தோப்’ என்று அழைக்கப்படும் முழு ஆடை அணிந்து ஏர்வாடியில் தொழ வரும் ஒரு சிலரில் இவர்களும் ஒருவர்.

எப்போதுமே முகத்தில் ஒரு மாறாத அழகிய புன் சிரிப்பு.

அவர்கள் பேசுவது அவர்களுக்கே கேட்குமா என்று கூறும் அளவுக்கு சன்னமான குரலில் சாந்தமாக அமைதியாக பதில் தரும் பாங்கு.

இவர்கள் கோபப்பட்டு,
சத்தமிட்டு
டென்ஷனாகி
நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை.

அன்னாரின் ஜனாஸா,
இன் ஷா அல்லாஹ்,

இன்று 31-03-2021 : புதன் கிழமை
லெப்பை வளவு ஜூம்ஆ பள்ளி வாசல் மையவாடியில் நல் அடக்கம் செய்யப்படும்.
நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்யவும்.
ஆமீன்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

இறைவா,

இவர்களை நீ பொருந்திக் கொள்வானாக.
இவர்களின் பாவங்களை நீ மன்னிப்பாயாக.
இவருடன் சேர்த்து எங்களையும் நீ மன்னிப்பாயாக
நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக.
இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக.
அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக.
இவர்களுக்கு நீ ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.

இவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு
அழகிய பொறுமையை தந்தருள்வாயாக.

இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பேற்றுக் கொள்வாயாக.
நிச்சயமாக நாம் படைத்தவனுக்கே உரியவர்கள்.
மேலும் நாமும் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் தான்

Posted By: peer on 3/31/2021 7:37:16 AM


« MAR
APRIL 2021
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
28 29 30 31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other