Events


Event Date: 11/13/2022
இளைஞர்களுக்கான தர்பியா (பயிற்சி) வகுப்புகள்
Date: 11/13/2022        
Time: 9:30 AM

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
ஏர்வாடி, நாங்குநேரி வட்டாரம் நடத்தும்
இளைஞர்களுக்கான தர்பிய்யா வகுப்பு.
இடம்: நடு முஹல்லம் பீர் சாஹிப் ஜும்ஆ மஸ்ஜித்,
நாள்: ரபீவுல் ஆகிர் பிறை 19, (13/11/2022 ஞாயிறு). காலை 9:30 மணி



Posted By: peer on 11/7/2022 2:23:21 PM

Afterlife of காட்டுவா சலாகுத்தீன்
Date: 11/13/2022        
Time: 9:00 PM

ஜனாஸா அறிவிப்பு

காட்டுவா சலாகுத்தீன் மாமா அவர்கள்
13- நவம்பர்-2022 ஞாயிற்றுக் கிழமை இரவு 9:00 மணியளவில் வபாஃத் ஆனார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார்:
திருநெல்வேலி மாவட்டம்,
ஏர்வாடியில், 3வது தெருவில்
கதவு எண்: 1 என்ற விலாசத்தில்
வசித்து வந்தார்கள்.

அன்னார்:
காட்டுவா குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

அன்னார்:
மர்ஹுமா: மரியக் கண்மா அவர்களின் மகன் ஆவார்கள்.

அன்னார்
மைதீன் பாத்து
அவர்களின் கணவர் ஆவார்கள்.

அன்னார்:
மர்ஹூமா: வடவம் அலிபாத்து அவர்களின் சகோதரர் ஆவார்கள்.

அன்னார்:
முகைதீன் மீரா சாஹிப்,
ஷேக் அப்துல் காதர்,
மர்ஹூம்: சவுண்டு பீர் முஹம்மது
ரசூல் முஹைதீன்,
ஆகியோரின் தகப்பனார் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், இன் ஷா அல்லாஹ்,
இன்று: 14- நவம்பர்-2022 திங்கள் கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு மேல முஹல்லம் ஜும்மா பள்ளி வாசல் மையவாடியில் நடைபெறும் என குடும்பத்தார் அறியத் தருகிறார்கள்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்யவும் ஆமீன்..

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

இறைவா இவர்களை நீ பொருந்திக் கொள்வானாக.
இவர்களின் பாவங்களை நீ மன்னிப்பாயாக.
இவர்களுடன் சேர்த்து எங்களையும் நீ மன்னிப்பாயாக
நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவர்களது தகுதியை உயர்த்துவாயாக.
இவர்களது மண்ணறையை விசாலமாக்குவாயாக.
அதில் இவர்களுக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக.
இவர்களுக்கு நீ ஜன்னத்துல்
ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.

இவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வாயாக.
இவர்கள் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பேற்றுக் கொள்வாயாக.

நிச்சயமாக நாம் படைத்தவனுக்கே உரியவர்கள்.
மேலும் நாமும் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் தான்.

இவர்களை பிரிந்து வாடும் இவர்களின் அன்பு குடும்பத்தாருக்கும்,
அருமை நண்பர்களுக்கும்,
உற்றார், உறவினர்களுக்கும்,
மிக அழகிய பொறுமையை நீ தந்தருள்வாயாக.

Posted By: peer on 11/14/2022 8:10:00 AM


« FEB
MARCH 2024
APR »
Sun Mon Tue Wed Thu Fri Sat
25 26 27 28 29 1

2

3

4

5

6

7

Death
8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

1 2 3 4 5 6
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other