Events


Event Date: 12/17/2022
Afterlife of N.A.M அப்துல் காதர் அப்பா (
Date: 12/17/2022        
Time: 12:00
வபாஃத் அறிவிப்பு:

அற்புதமான ஒரு மனிதரை இன்று நாம் இழந்து விட்டோம்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி,
6வது தெரு,
மீலாது மேடை அருகில் வசித்து வந்த
‘குளங்களக்கி அப்பா’
என்று அனைவராலும் அறியப்படும்,
ஜனாப்: N.A.M அப்துல் காதர் அப்பா (ரிட்டயர்  ( RTD ) EB) அவர்கள்
இன்று 17- டிசம்பர் - 2022
சனிக் கிழமை அதிகாலை 12:00 மணி அளவில்
வபாத் ஆனார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்

அன்னார்:
அலியப்பா
ஸமது
கண்மணி
ஆகியோரின் அருமை தகப்பனார் ஆவார்கள்.

அன்னார்:
9 வது தெருவில் வசிக்கும்
Asmeel சாஹிபு காக்காவின் அன்பு மாமனார் ஆவார்கள்.
அன்னார்:
மரியம் டிராவல்ஸ் பதுருஸ் ஜமான் அவர்களின்
தாயாருடைய சின்னாப்பா,
ஜமானுக்கு அப்பா ஆவார்கள்.

அன்னார்:
முன்னாள் மின்சார வாரிய TNEB ஊழியர் ஆவார்கள்.

வழியில் சந்திக்கும் போது, முழுமையாக முகமன் (ஸலாம்) கூறி கையை பிடித்து துஆ செய்வதுடன், உச்சி மோந்து, தலையை இரு கைகளாலும் வருடி கொடுத்து, சிரித்த முகத்தோடு,
குடும்பத்தாரின் ஆரோக்கியத்தை கரிசனத்துடன் விசாரிக்கும் நல்ல பழக்கத்தை  கொண்டிருந்தார்கள்.

நேற்று வரை யார் உதவியும் இன்றி, ஜனாஸா தொழுகை உள்பட அனைத்து தொழுகைகளுக்கும் முன் கூட்டியே வந்து கலந்து கொள்ளும் நல்ல ஒரு ஆத்மாவை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.

ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம்:
திருநெல்வேலி மாவட்டம்,
ஏர்வாடி 6 வது தெரு நடு முஹல்லம் பீர் சாஹிப் கிராண்ட் ஜும்மா மஸ்ஜித் மையவாடியில்
இன்று 17-டிசம்பர்-2022
சனிக் கிழமை
அஸர் தொழுகைக்குப் பின்
4:00 மணியளவில்
நடைபெறும் என குடும்பத்தார் அறியத் தருகிறார்கள்.
 
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுமாறு குடும்பத்தார் வேண்டுகிறார்கள்.
இன்னா லில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்.
 
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். 
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம். 
 
யாஅல்லாஹ்,
இவருடைய பாவங்களை மன்னிப்பாயாக.
இவருக்கு அருளும் செய்வாயாக.
இவருக்கு சுகத்தையும் நல்குவாயாக. இவரை மன்னித்து விடுவாயாக.
இவருடைய தங்குதலை,
மிக கண்ணியப்படுத்துவாயாக.
இவருடைய நுழைவிடத்தை விஸ்த்தீரணமாக்கித் தருவாயாக.
தண்ணீர்,ஐஸ்கட்டி,ஆலங்கட்டி ஆகியவற்றைக் கொண்டு இவரைக் சுத்தம் செய்வாயாக.
அழுக்கிலிருந்து மிக வெண்மையான ஆடையை நீ சுத்தம் செய்தது போன்று, இவரைப் பாவங்களிலிருந்து, பரிசுத்தப்படுத்துவாயாக.
இவருடைய வீட்டை விட மிகச் சிறந்ததான ஒரு வீட்டை,
இவருக்கு நீ வழங்குவாயாக.
இவருடைய குடும்பத்தை விட
மிகச் சிறந்த குடும்பத்தினரை,
இவருக்கு நீ மாற்றித் தருவாயாக.
இன்னும்,
இவரை கப்ருடைய வேதனையிலிருந்தும், காத்தருள்வாயாக.
நரக வேதனையிலிருந்தும் இவரை நீ காத்தருள்வாயாக.
இவரை நீ சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக.
சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமான
ஜன்னத் - துல் ஃபிர்தெளஸ்
எனும் சொர்க்கத்தை இவருக்கு நீ வழங்குவானாக.
 
இவரை பிரிந்து வாடும் இவரின் அன்பு குடும்பத்தார்களுக்கும்,
அருமை நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், மிக அழகிய பொறுமையை தந்தருள்வாயாக.
 
-அலிமாலிக் பீர் முஹம்மது


Posted By: peer on 12/17/2022 6:33:09 AM


« MAR
APRIL 2024
MAY »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other