• வள்ளியூர் அருகே போலி பத்திரம் தயாரித்து ரூ.1.50 கோடி நிலத்தை விற்க முயன்ற கும்பல் கைது

Posted by S.i.sulthan (sisulthan) on 3/19/2010

வள்ளியூர் அருகே போலி பத்திரம் தயாரித்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வள்ளியூர்- ஏர்வாடி மெயின் ரோட்டின் அருகே பெட்ரோல் பங்க் வடபுறம் ஏர்வாடியை சேர்ந்த அகமதுமைதீன் (60) என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் 60 சென்ட் காலி நிலம் உள்ளது. இதனை ஏர்வாடியை சேர்ந்த சேக்அப்துல்காதர் மகன் முகமதுகனி, அவரது மகன் பீர்முகம்மது ஆகியோர் போலிபத்திரம் மூலம் நிலத்தை அபகரித்து விற்பனை செய்ய திட்டமிட்டனர்.

அதற்காக பழவூரை சேர்ந்த சூரியநாராயணன் மகன் சிதம்பரம், சண்முகம் மகன் மூக்கையா, பணகுடியை சேர்ந்த முத்துசாமிபிள்ளை மகன் அய்யப்பன், சுந்தரம்பிள்ளை மகன் சுந்தர்ராஜ், ராஜாமணி மகன் ஜவஹர்ராஜ், முத்துசாமிபிள்ளை மகன் ஆறுமுகம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அகமது மைதீன் நிலத்திற்கு போலிபத்திரம் தயார் செய்துள்ளனர்.போலி பத்திரத்தை முகமதுகனி மற்றும் பீர்முகம்மது பெயரில் தயார் செய்து அதே கும்பலை சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்ய பவர் பத்திரம் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மீண்டும் அதே கும்பலை சேர்ந்த மூக்கையாவிற்கு கிரையம் செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர் அகமதுமைதீன் தனது நிலத்தை சுற்றி கல்தூண் நட்டு, முள்கம்பி வேலி போட்டுள்ளார். உடனே அந்த கும்பலை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் கல்தூண்களை உடைத்தும், முள்கம்பி வேலிகளை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஏர்வாடி அகமதுமைதீன் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் போலிபத்திரம் தயார் செய்து நிலத்தை 8 பேர் கொண்ட கும்பல் அபகரிக்க முயன்றது தெரியவந்தத

அதனை தொடர்ந்து போலிபத்திரம் தயாரித்தல், ஏமாற்றுதல், மோசடி ஆவணங்கள் தயாரித்தல், மிரட்டுதல், சொத்து நாசப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து முகமதுகனி, பீர்முகம்மது, சிதம்பரம், மூக்கையா, அய்யப்பன், சுந்தர்ராஜ், ஜவஹர்ராஜ், ஆறுமுகம் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.போலிபத்திரம் மூலம் அபரிக்க முயன்ற நிலத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.





Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..