நெல்லை மாவட்ட ஆற்றங்கரை பகுதிகளில் 4வது நாளாக போலீசார் மணல் வேட்டை

Posted by Haja Mohideen (Hajas) on 2/7/2011

நெல்லை மாவட்ட ஆற்றங்கரை பகுதிகளில் 4வது நாளாக போலீசார் மணல் வேட்டை

 

பிப்ரவரி 07,2011,00:17 IST

திருநெல்வேலி : நெல்லை மாவட்ட ஆற்றங்கரை பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் போலீசார் மணல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுவரை 95 மாட்டுவண்டிகள் உட்பட 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தார். இதனால் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளமுடியாமல் மணல் கொள்ளையர்கள் தவித்தனர். அவர்கள் லாரிகளில் மணல் அள்ளுவதை நிறுத்திவிட்டு, இரவு நேரங்களில் மாட்டுவண்டி மற்றும் டிராக்டரில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் மணல் அள்ளுவதாக எஸ்.பி.,விஜயேந்திர பிதரிக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து இரவு நேரங்களில் ஆற்றங்கரை பகுதிகளில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினார். கடந்த 3ம் தேதி முதல் ஆலங்குளம், பழவூர், பனவடலிசத்திரம், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சுத்தமல்லி, அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி போன்ற மாவட்டத்தின் ஆற்றங்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கூடன்குளம் ஆற்றங்கரை பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 3 நாட்களாக ஆற்றங்கரை பகுதியில் தொடர்ந்து நடந்த அதிரடி வேட்டையில் 95 மாட்டு வண்டிகள், 2 டிராக்டர்கள், 2 மினி லாரிகள் மற்றும் 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

http://www.dinamalar.com/district_detail.asp?id=182444






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..