தொடர்ந்து சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு தாருங்கள் :நான்குநேரி காங்., வேட்பாளர் உருக்கம்

Posted by Haja Mohideen (Hajas) on 3/28/2011

தொடர்ந்து சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு தாருங்கள் :நான்குநேரி காங்., வேட்பாளர் உருக்கம்

 

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2011,01:39 IST
 

ஏர்வாடி : ஏர்வாடியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி காங்.,வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.நான்குநேரி சட்டசபை தொகுதி ஜனநாயக கூட்டணி காங்., வேட்பாளர் வசந்தகுமார் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஏர்வாடியில் நடந்தது. கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் மோகன்குமாரராஜா தலைமை வகித்தார். மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் கிரகாம்பெல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காங்.,வேட்பாளர் வசந்தகுமார் பேசியதாவது: ஒரு எம்.எல்.ஏ. இந்த பகுதிக்கு என்ன செய்தார் என்று பொதுமக்கள் கேட்கின்ற நேரத்தில் இதையெல்லாம் செய்தார் என்று சொல்கின்ற நிலையில் உங்களுக்கு நான் செய்துள்ளேன். கிடப்பில் கிடந்த நான்குநேரி தொழில் நுட்ப பூங்கா பணியை தமிழக முதல்வரிடம் கூறி விரைவுபடுத்தினேன். தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. பச்சையாறு கால்வாயில் நான்குநேரி பகுதிகளை சேர்ந்த 46 குளங்கள் விடுப்பட்டதை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தனி கால்வாய் வெட்ட 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டசபையில் எழுப்பினேன். மேலும் நான்குநேரி பஸ்ஸ்டாண்ட், அரசு ஆஸ்பத்திரி கட்டடம், நெல்லையை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்திற்கு தனிக்கோட்டம், கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம், 22 புதிய பஸ் வழித்தடங்கள் என்று நான்குநேரி சட்டசபை தொகுதியில் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் என் பணிகள் தொடர்ந்தது. மீண்டும் பொதுமக்களாகிய உங்களுக்கு தொண்டனாக இருந்து பணியாற்ற ஒரு வாய்ப்பை தரவேண்டும். இவ்வாறு வசந்தகுமார் பேசினார். கூட்டத்தில் நெல்லை எம்.பி.ராமசுப்பு, மாநகர் மாவட்ட காங்., தலைவர் சுந்தரராஜபெருமள், மாவட்ட வர்த்தக காங்., தலைவர் சந்திரசேகர், வட்டார தலைவர்கள் பண்டாரம், செல்லத்துரை, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், மாநில பேச்சாளர் வெள்ளப்பாண்டியன், நகர காங்., தலைவர் ஜெர்மான்ஸ், வர்த்தக காங்., மாவட்ட செயலாளர் அபுபக்கர், களக்காடு காங்., வட்டார தலைவர் தனபால், நகர தலைவர் உலகநாதபிள்ளை, மாநில திமுக., பொதுக்குழு உறுப்பினர் ஜார்ஜ் கோசல், ஜவுளி வாரிய உறுப்பினர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் பரமசிவஐயப்பன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் களக்காடு ஜான்சன்துரை, பாளை. தங்கபாண்டியன், நான்குனேரி காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சித்திக், வேலு, பாலசந்தர், யூனியன் கவுன்சிலர் விநாயகா சிவாபெருமாள், நகர செயலாளர்கள் ஏர்வாடி ஆயுப்கான், திருக்குறுங்குடி முருகன், நான்குனேரி வானுமாமலை, மூலைக்கரைப்பட்டி சிவகுமார், பா.ம.க. மாவட்ட செயலாளர் பழனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கார்திக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் தீன்இப்ராஹிம், துணைத்தலைவர் பீர்முகமது, தி.மு.க.தொழிற்சங்க துணைத் தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=214832






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..