இன்ஜினியரிங் சேர்க்கைக்கு மே 16 முதல் விண்ணப்பம்

Posted by Haja Mohideen (Hajas) on 4/1/2011

 

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு மே 16 முதல் விண்ணப்பம் 

 02-04-2011

சென்னை: “இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, மே 16ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்,” என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

 

தமிழகத்தில், 486 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்களில், 65 சதவீத இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை நடத்தி வருகிறது. பிளஸ் 2 தேர்வுகளுக்கான முடிவுகள், மே மாதம் 15ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளது. எனவே, மே மாதம் 16ம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை, இன்ஜினியரிங் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது: பிபிளஸ் 2பீ தேர்வுகள், கடந்த 25ம் தேதி முடிந்துள்ளது. இத்தேர்வுக்கான முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம். அதனால், 2011-12ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, மே 16ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு, 2 லட்சத்து 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இந்தாண்டு, கூடுதலாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

மேலும், விண்ணப்பங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக அச்சடிக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், சென்னை அண்ணா பல்கலை, அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலை, அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகியவற்றிலும் விண்ணப்பம் வழங்கப்படும்.

விண்ணப்பம் வழங்கும் விவரம் மற்றும் கவுன்சிலிங் நடக்கும் நாட்கள் ஆகியவை குறித்த முழு விவரம், மே இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். கவுன்சிலிங் நடைபெறுவதற்கான அனைத்து பணிகளையும், அண்ணா பல்கலை துவங்கியுள்ளது. இந்தாண்டு, புதிதாக 42 கல்லூரிகள் துவங்க, 42 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்க அனுமதி கேட்டு, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு 24 பேர் விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ளவர்களில் எட்டு பாலிடெக்னிக் துவங்கவும், எம்.இ., எம்.டெக்., துவங்கவும் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

 

http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=9667






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..