வள்ளியூர் பள்ளியில் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் பெற பணம் வசூல்

Posted by S Peer Mohamed (peer) on 5/25/2011

வள்ளியூர் : வள்ளியூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் பெற மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் பணம் வசூல் செய்ததால் பெற்றோர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசு நிதி உதவி பெற்று இயங்கும் இப்பள்ளியில் வள்ளியூர் சுற்றுக் கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஏழை எளிய மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் நேற்று வழங்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு மாணவிகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.

அப்போது மதிப்பெண் பட்டியல் பெற மாணவிகளிடமிருந்து பள்ளி நிர்வாகம் 300 ரூபாய் வசூல் செய்துள்ளனர். அந்த பணத்திற்கு பள்ளி நிர்வாகம் முறையாக ரசீதும் வழங்கவில்லை. இதனால் மதிப்பெண் பட்டியல் வாங்க வந்த மாணவிகள் பலர் பணம் இல்லாமல் திரும்பி வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வந்து மதிப்பெண் பட்டியலை வாங்கி சென்றனர்.
இதனால் பல மாணவிகளின் பெற்றோர்கள் பணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு வந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியனிடம் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். அவர் உடனே பள்ளி அலுவலகத்தில் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், "பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு மாணவிக்கும் 300 ரூபாய் வசூல் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அதன்படி வசூல் செய்கிறோம்' என்று கூறியுள்ளனர்.
உடனே பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பெற்றோர்கள் மாணவிகளுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட பள்ளி முன் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த வள்ளியூர் போலீசார் பள்ளிக்கு வந்து பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தோடு பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர், "பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்காக மாணவிகளிடம் பணம் வசூல் செய்கிறோம், கட்டாயமில்லை, விருப்பமிருந்தால் கொடுக்கலாம்' என்று தெரிவித்தனர்.
இதனால் ஏற்கனவே கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் வசூல் செய்த 300 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதன்படி பெற்றோர்களிடம் வசூல் செய்த பணத்தை பள்ளி நிர்வாகத்தினர் திரும்ப அளித்தனர். இதனால் வெகுநேரம் நடந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மாணவிகள் பணம் கொடுக்காமல் மதிப்பெண் பட்டியலை வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Thanks: Dinamalar

http://www.dinamalar.com/district_detail.asp?id=246871

 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..