“இவுக கைல நாம அகப்பட்டா சட்னிதான்!” பேங்குகள் போடும் ‘பிளான்-B’!

Posted by Haja Mohideen (Hajas) on 11/26/2011

“இவுக கைல நாம அகப்பட்டா சட்னிதான்!” பேங்குகள் போடும் ‘பிளான்-B’!

Viruvirupu, Saturday 26 November 2011, 02:21 GMT
 

Berlin, Germany: Growing chorus of observers at European Banks who fear that a breakup of the euro zone might be at hand, yesterday (Friday), Standard & Poor downgraded Belgium’s credit standing to AA from AA+. Some ratings agencies this week cautioned that France could lose its AAA rating if the crisis grew. On Thursday, agencies lowered the ratings of Portugal and Hungary to junk.

 

தொடரும் பொருளாதார இழுபறிகளால் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) யூரோ நாணயம் சிதறிப் போகலாம் என்ற பயம் தற்போது ஏற்படத் தொடங்கிவிட்டது. விவகாரம் பணம் தொடர்பானது என்பதால், முதலில் அச்சம் கொள்ளும் ஆட்கள் பேங்குகளும், நிதி அமைப்புகளும்தான்!

நேற்று (வெள்ளிக்கிழமை) பெல்ஜியம் நாட்டின் கிரெடிட் ரேட்டிங்கை AA+ என்ற பிரிவில் இருந்து, AA-க்கு குறைத்திருக்கிறது Standard & Poor ரேட்டிங் ஏஜென்சி. வேறு சில சர்வதேச ரேட்டிங் ஏஜென்சிகள் மற்றொரு திகிலை கிளப்புகின்றன. நிதி நிலைமை பலமாக உள்ளதாக கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் கிரெடிட் ரேட்டிங்கை, AAA பிரிவில் இருந்து கீழிறக்க வேண்டிய நேரம் நெருங்குகிறது என்கின்றன இந்த ஏஜென்சிகள்.

Merrill Lynch பிளான்-பி வைத்திருக்கிறது!

ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் தலைகீழ் வீழ்ச்சிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

ஏற்கனவே ரேட்டிங் ஏஜென்சிகள் கடந்த வியாழக்கிழமை போத்துக்கல், ஹங்கேரி ஆகிய இரு நாடுகளின் கிரெடிட் ரேட்டிங்குகளை ‘குப்பை’ (junk) என்ற பிரிவுக்கு கொண்டு சென்று விட்டன.

ஆனால் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், யூரோ நாணயம் நொருங்கிப் போகாது என்று சொல்லி வருகின்றனர். ஜேர்மன் அதிபர் ஆஞ்செலா மார்கெல் “யூரோ நொருங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார். ஆனால், அவரது கூற்றுக்கு அவரது சொந்த நாடான ஜேர்மனியில் உள்ள சில பேங்குகளே எதிர்க் கருத்துக்கள் தெரிவித்துள்ளன.

முக்கியமாக இந்த வாரம் வர்த்தகச் செய்திகளில் அடிபட்ட ஜேர்மனியின் தங்கக் கையிருப்பு விவகாரம் பற்றிய சர்ச்சைகளில், ஜேர்மனியின் பிரதான பேங்குகள் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தன.

ஐரோப்பிய தலைவர்கள், “ஒருவேளை யூரோ நொருங்கினால்?” என்ற சாத்தியத்துக்கான ‘Plan B’ தேவையே இல்லை என்று என்னதான் அடித்துச் சொன்னாலும், ஐரோப்பிய வங்கிகள் கைவசம் ‘பிளான்-பி’ வைத்திருக்கின்றன என்பது அவர்கள் கடந்த சில தினங்களாக விடும் அறிக்கைகளில் இருந்தே தெரிகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய அளவில் பலம் மிக்க வங்கிகளாகக் கருதப்படும் Merrill Lynch, Barclays Capital மற்றும் Nomura ஆகிய மூன்று வங்கிகளும் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கைகளில் “யூரோ நொருங்கினால், Plan B” என்ற சொற்பதம் இருப்பதைக் கவனியுங்கள். பிரிட்டிஷ் வங்கி Royal Bank of Scotland, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விடுத்த அறிக்கையில்கூட Plan B பற்றிப் பேசப்பட்டுள்ளதையும் கவனியுங்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதையும் பாருங்கள். அமெரிக்க ரெகுலேட்டர்கள், தமது வங்கிகளை யூரோ வர்த்தகத்தில் அதிகம் கவனம் செலுத்துவதை தவிருங்கள் என்று இந்தவாரம் அறிவித்துள்ளார்கள். அமெரிக்க வங்கி Citigroup, அதை செயற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. ஆசியாவில் ஹாங்காங் அரசு ரெகுலேட்டரி போர்டு கிட்டத்தட்ட இதே ஆலோசனையை கடந்த வியாழக்கிழமை தமது வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.

நீங்கள் பங்குச் சந்தையில் புகுந்து விளையாடும் நபராக இருந்தால், யூரோவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் பங்குகள் வாங்கும்போது, திருமாவளவனுக்கு ஓட்டு போடுவதுபோல ஒருமுறைக்கு மூன்றுமுறையாக யோசியுங்கள்!

http://viruvirupu.com/european-banks-fear-breakup-euro-zone/tamil-news/11481/






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..