சென்னை: 12 12 2011 தமிழ்நாடு மாநில ஹஜ் குழு நிதி நெருக்கடியில் உள்ளதை கருத்தில் கொண்டு ஹஜ் குழுவுக்க

Posted by S.i.sulthan (sisulthan) on 12/13/2011

சென்னை,செப்.21-2011

“தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 4,088 பேர் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள்”என்று,அமைச்சர் முகமது ஜான் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்னையில் தமிழக பிற்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு,புதுச்சேரி,அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் முகமது ஜான் பேசியதாவது:-

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

தமிழக மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீடு 3057 ஆகும்.

ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பித்திருந்தவர்கள் அதிகமாக இருந்ததால்,தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டை கூடுதலாக்கவேண்டும் என்று,மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து,தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 761 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதன்படி,இந்த ஆண்டு,தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில்,தமிழகம்,புதுச்சேரி,அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 4,088 பேர் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வார்கள். இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கக்கூடும்.////

(அநேகமாக இது அடுத்தவருடம் 5000க்கும் குறையாமல் ஆக்க்கூடும்)

 

சென்னை: 12 12 2011 தமிழ்நாடு மாநில ஹஜ் குழு நிதி நெருக்கடியில் உள்ளதை கருத்தில் கொண்டு ஹஜ் குழுவுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதிலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

வருடந்தோறும்  ஹஜ் புனித யாத்திரைக்காக செல்லும் பயணிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான வசதிகளை செய்து தரும் பணியினை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின்  அன்றாட நிர்வாக செலவு அதிகரித்துள்ளதையும்,  தமிழ் நாடு மாநில ஹஜ் குழு நிதி நெருக்கடியில் உள்ளதையும் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்த ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் ///

 

((((((ஆக மொத்தத்தில் இந்த அரசு வருடம் வழங்கும் மானியம்  20 லச்சம்/5000= அதாவது.400 ரூபாய் ஒருவருக்கு. போன, நெஞ்சத்திலே இடம் கொடுத்த அரசு வழங்கி வந்தது 200 ரூபாய் மானியம் ஒரு ஹஜ் பயணிக்கு. இந்த அரசு இஸ்லாமியர்களின் நலனுக்காக கூட 200 ரூபாய் தருகிறது.. என்னா ஒரு பரிவு.))))))

/

// உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பள்ளிவாசல் மற்றும் தர்காக்களில் 20 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 60 வயது நிரம்பிய பேஷ் இமாம்கள், மோதினார்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் முஜாவர்கள் ஆகியோரிடமிருந்து  ஓய்வூதியம் பெறுவதற்காக வரப்பெற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளதை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, உலமா ஓய்வூதியப் பயனாளிகளின் எண்ணிக்கையை 2,400-ல் இருந்து 2,600 ஆக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையையும் 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.  ///

 

(((((இதுவரைக்க்கும் முந்தைய அரசு கொடுத்துவந்த மாதம் 18 லச்சரூபாய் அதாவது வருடம் 2கோடியே 16  லச்சரூபாயிலிருந்து, வருடம் 2400 பேருக்கு 250 ரூபாயும் 200 பேருக்கு 1000 ரூபாயும் அதிகரித்து அதிகமாக 96 லச்சமும் ஆகமொத்தம் வருடம் ஒருகோடியே ஆறு லச்சம் இஸ்லாமிய சமுதாயத்துக்கு அதிகமாக வழங்கும்)))))

 

அடடா... தமிழ்நாட்டு முஸ்லீம்கள் பெருமைப்படுவீர்களாக.. இன்னும் கணக்குப் பார்த்தால் மொத்த இஸ்லாமியரில் ஒருத்தருக்கு வருடத்திற்க்கு சராசரி 1ரூபாயோ இரண்டு ரூபாயோ வரலாம்.

பிச்சக்காரன்கூட இப்ப ஒரு நாளைக்கு ஒருவரிடம் 2 ரூபாய்க்கு குறைந்து வாங்குவதில்லை.

 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..