ஒரு துளிக் கடல் குறும்படம் (முஹம்மத்(ஸல்) அவர்கள் அறிமுகம் செய்ய)

Posted by S Peer Mohamed (peer) on 10/24/2012

 

இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வினை  அறிமுகப்படுத்தும் ஒரு துளிக்கடல் குறும்படத்தின் வெளியீடு 20.10.2012 அன்று மாலை  7 மணிக்கு கிரியேடிவ் கமியூனிகேஷன் சென்னை அரங்கில் நடைபெற்றது.
சகோதரர் அப்துல் காதர் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சி ஆரம்பமானது.


True Vision சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறும்படத்தின் நோக்கத்தையும், குறும்படம் சார்பான ஒரு சில தகவல்களை ஜலாலுதீன் பகிர்ந்து கொண்டார். Innocence of Muslims என்ற திரைப்படத்திற்கு திரைப்படத்தின் மூலம் பதில் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் இக்குறும்படம் இயக்கப்பட்டது.  நன்மையை கொண்டு தீமையை தடுக்க வேண்டும் என்ற நபி(ஸல்) அவர்களின் வழிக்காட்டுதலின் அடிப்படையில் முஹம்மத்(ஸல்) அவர்களை அறிமுகம் செய்யும் சிறிய முயற்சியாக இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தனது துவக்கவுரையில் பகிர்ந்து கொண்டார்.


துவக்கவுரைக்கு பிறகு குறும்படம் வெளியீடு நிகழ்வு

திரைப்பட இயக்குனர் அமீர் அவர்கள் குறும்படத்தின் முதல் பிரதியை வெளியிட கிரியேடிவ் கம்யூனிகேஷன் சென்னையின் துணைத்தலைவர் ஜி.அப்துர் ரஹீம் அவர்கள் பெற்று கொண்டார். இரண்டாம் பிரதியை திரைப்படத்தில் நடித்துள்ள வழக்கு எண் படத்தில் நடித்த ஜெயபால் அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியினை அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா அவர்கள் பெற்றுக் கொண்டார்.


அதன் பிறகு இயக்குனர் அமீர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முஹம்மத் நபி(ஸல்) அவர்களை தவறாக சித்தரித்த திரைப்படத்திற்கு திரைப்படத்தின் மூலம் பதில் சொல்லியுள்ள இக்குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்களை நான் பாராட்டுகின்றேன். வருகின்ற காலங்களில் இதை விட தரமான குறும்படங்கள் அதிகமதிகம் இயக்கப்பட வேண்டும் அதற்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்று இயக்குனர் அமீர் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு அதன் வாயிலாக இஸ்லாத்தின் நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றார்.
அதன் பிறகு இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்டின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் அமீர் அவர்களை வரவேற்று, ஒரு துளிக்கடல் குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்கள் சிறப்பாகவும், குறுகிய காலத்திலும் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார் அவருக்கு இறைவன் அதிகமதிக கூலியை கொடுக்க வேண்டும் என்றார். இன்றைய காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வரக்கூடிய எதிர்ப்புகளை அமைதியாகவும், நிதானமாகவும் கையாள வேண்டும். ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை தீர்வாகாது.  எந்த காலத்திலும் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், வளர்ச்சியையும் தடுக்க முடியாது.  இது போன்ற தவறான திரைப்படங்கள் மூலமாக ஒரு காலத்திலும் முஹம்மத்(ஸல்) அவர்களின் மகத்துவத்தை யாராலும் தடுக்க முடியாது. தீமையை நன்மையை கொண்டே தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இறுதியாக ஒரு துளிக்கடல் குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இவர்தான் முஹம்மத்(ஸல்) பரப்புரை இயக்கத்தின் மூலமாக இக்குறும்படம் தயாரிக்க உதவியை அனைவருக்கு நன்றியினை தெரிவித்தார். குறும்படத்தின் தயாரிப்பிற்கு உதவியை ரியாஸ், அஹமத் கபீர், தன்பால் மற்றும் அனைவரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை தெரிவித்தார். குறுகிய காலத்தில் மிக குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட குறும்படம் முதல் முயற்சியாகும் என்றார். இயக்குனர் அமீர் அவர்கள் மிக அதிக வேலைகள் இருந்த போதிலும் இந்நிகழ்விற்கு வந்தமைக்கு நன்றியினை தெரிவித்தார்.


நிறைவாக சமரசத்தின் துணை ஆசிரியர் சையத் சுல்தான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..