நாங்குநேரி அருகே விபத்து நடுரோட்டில் டயர் வெடித்து கார் கவிழ்ந்து 2 பேர் பலி 8 பேர் படுகாயம்

Posted by Haja Mohideen (Hajas) on 11/15/2012

நாங்குநேரி அருகே விபத்து நடுரோட்டில் டயர் வெடித்து கார் கவிழ்ந்து 2 பேர் பலி 8 பேர் படுகாயம்

நெல்லை

நடுரோட்டில் டயர் வெடித்து கார் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாங்குநேரி அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

கோவிலுக்கு சென்றவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் இருந்து ஒரு குடும்பத்தினர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு, அனைவரும் ஊருக்கு புறப்பட்டனர். காரை சிவா என்ற பழனியாண்டி (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். கார் நேற்று மதியம் நெல்லை மாவட்டம் வள்ளியூரை தாண்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.

நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் நோக்கி வந்த போது திடீரென்று காரின் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் உருண்டு கவிழ்ந்தது.

2 பேர் பலி

இதில் சம்பவ இடத்திலேயே பெருங்கலூரைச் சேர்ந்த ராணி என்ற ராணிமுத்து (50), டிரைவர் பழனியாண்டி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினார்கள். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காருக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர். விபத்து பற்றி நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயபிரின்ஸ், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்சு மூலம் வள்ளியூர், நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 பேர் படுகாயம்

விபத்தில் பலியான ராணிமுத்து, பழனியாண்டி ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் விவரம் வருமாறு:–

சிவசுப்பிரமணியன் (58), ராமையா (25), புவனேசுவரி (21), கீதா (21), அசோக் (17), கிரி (13), தங்கமீனா (7), பரணிதரன் (3) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

http://www.dailythanthi.com/node/41526






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..