டெங்கு கொசுவை ஒழிக்கும் கம்பூசியா மீன். ஏர்வாடி பேரூராட்சி முயற்சி எடுக்குமா?

Posted by S Peer Mohamed (peer) on 11/20/2012

டெங்கு கொசுவை ஒழிக்கும் கம்பூசியா மீன்: ஏர்வாடி பேரூராட்சி முயற்சி எடுக்குமா?


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி
வாய்ப்பச் செயல்.



நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, பொருந்தும் படியாகச், செய்ய வேண்டும்.

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற கொடிய நோய்களை பரப்பி மனித குலத்தை நாசப்படுத்துவதில் கொசுக்கள் முன்னணி இடத்தில் உள்ளன. இந்த கொசுக்கள் நமது கண்ணுக்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகின்றன. ஆனால் அவற்றில் 3500க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

இவற்றில் “ஏடிஸ்” என்ற கொசு டெங்குவை பரப்புவதில் கில்லாடியாக உள்ளது. இதே போல் ஒவ்வொரு வகை கொசுவும் ஏதாவது ஒரு விஷ கிருமியை நமது உடலில் நைசாக செலுத்தி விட்டு வெடுக்கென பறந்து விடுகின்றன. அதன் பிறகு நாம் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்றவற்றின் பிடியில் சிக்கி சீரழிகிறோம்.

நோய்களை பரப்பும் கொசுக்கள் தமிழகம் முழுவதும் அதிக அளவில் உள்ளன. இந்த கொசுக்கள் நீர் நிலைகளில் இருந்துதான் அதிகம் உருவாகின்றன. அவற்றை ஒழிக்க எவ்வளவு தான் மருந்து அடித்தாலும் பயன் இல்லை. இதற்கு மாற்றாக கொசுக்களை விரும்பி உண்ணும் (கம்பூசியா) கப்பீஸ் மீன்களை பயன் படுத்தலாம்.

இந்த வகை மீன்களை கொசுக்கள் அதிகமுள்ள நீர் நிலைகளில் விட்டால் போதும். அவை கொசு முட்டை, லார்வா போன்றவற்றை “லபக்”கென பிடித்து நொடியில் தின்று விடும். இதனால் கொசுக்கள் பெருகுவது முற்றிலும் தடுக்கப்படும். கொசுக்களை உணவாக சாப்பிடும் இந்த (கம்பூசியா) கப்பீஸ் வகை மீன் சென்னையில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தில் வளர்க்கப்படுகின்றன.

அங்கு ரூ.50-க்கு ஆயிரம் கப்பீஸ் மீன்கள் விற்கப்படுகின்றன. 2011-12-ம் ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்து 500-க்கு கம்பூசிய மீன்களை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் விற்பனை செய்துள்ளது. இதுபற்றி மீன் வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னை நகரில் உள்ள கொசுக்கள் முழுவதையும் ஒழிக்க 30 லட்சம் கப்பீஸ் மீன்கள் தேவை.

எங்களிடம் போதுமான அளவுக்கு கப்பீஸ் மீன்கள் உள்ளன. இவற்றை வாங்குவதற்கு 044-28361296 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார். வீட்டில் கொசுக்கள் வராமல் விரட்டுவதற்கு கொசுவர்த்தி சுருள், மேட், லுகியுடு போன்றவற்றுக்கு செலவு செய்வதை விட நாம் அனைவரும் அந்த கொசுக்களை கூண்டோடு ஒழிக்கும் அபார ஆற்றல் உடைய கப்பீஸ் மீன்களை வாங்கி அக்கம் பக்கத்தில் தேங்கி கிடக்கும் நீர் நிலைகளில் வீடுவோம்.

இதன் மூலம் ஏர்வாடி நகரையும் கொசுக்கள் இல்லாத நகரமாக மாற்றலாம்..

_____________

 

  • Si Sulthanபேரூராட்சி செய்யும்போது செய்யட்டும்...

    நம்மைபோன்ற பேஸ்புக் வாய்பேச்சு வீரர்கள் பத்து ரூபாய்க்கு 2ஜோடி மீன் வாங்கி அவங்கவுங்க வீட்டுபக்கமுள்ள சாக்கடையில் விட்டா போதும்.
    இந்த மீன் எந்த தண்ணியிலும் விரைவாக வளர்ந்து பல்கி பெருகும்.
    2 ஜோடி மீன் 2 மாசத்துல 200 மீனாக பெருகும்.

    செய்வோமா? ...

    அதெல்லாம் என்னத்துக்கு ????...

    பேசாம ஒரு லைக் கொடுத்துட்டு போகலாம்..
    என்னா??????

    நான் மீன் வாங்கி சாக்கடையில் விட்டுட்டேன் என யாராவது கமாண்ட்ஸ் போடட்டும் பார்க்கலாம்???

    சவால் விடுகிறேன்????????
     
  • Mohamed UvaisIs there any brother in chennai who can buy thia fish and send to eruvadi?
     
  • Khalid Ibnuநெல்லையில் அந்த மீன் எங்குகிடைக்கிறது என்று பார்க்கிறேன் பிறகு நானும் என்னை சார்ந்த நண்பர்களூம் கப்பீஸ் மீன் வாங்கி விடுகிறோம்

     

  • Si Sulthan1000க்கு 300 ரூபாய் என தனியாரிடம் 5000 மீனுக்கு இன்று ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது...இன்ஷாஅல்லாஹ்
     
  • Mohamed UvaisAlhamdulillah. Enakkum oru share kodungal :):)
     
  • Si Sulthanவருவது நிச்சயமானால் மேலும் நாம் வாங்கலாம்








Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..