Home >> News >> Detail
  Login | Signup  

இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு

Posted by Haja Mohideen (Hajas) on 10/7/2013 1:30:19 PM

Click Hereஇஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவுUpdated: Monday, October 7, 2013, 17:34 [IST]

டெல்லி: இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அவர் ஒரு அப்பாவி கல்லூரி மாணவி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது. இதை தனது அடுத்த குற்றப்பத்திரிக்கையில் அது தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 19 வயதான இஷ்ரத் தீவிரவாதி என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இஷ்ரத் ஒரு சாதாரண கல்லூரி மாணவியே என்று தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாம். இஷ்ரத் ஜஹானும், மேலும் 3 பேரும் 2004ம் ஆண்டு அகமதாபாத் அருகே குஜராத் போலீஸார் நடத்திய போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் நான்கு பேரும் தீவிரவாதத் தொடர்புடையவர்கள் என்பது குஜராத் போலீஸாரின் வாதம். ஆனால் இஷ்ரத் தரப்பு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் இஷ்ரத் ஜஹானுக்கு தீவிரவாதத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இஷ்ரத் குறித்த தனது நிலையை அடுத்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கவுள்ளது சிபிஐ. இன்னும் 2 வாரங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், இஷ்ரத் ஜஹான் அப்பாவி, கல்லூரிப் பெண் என்று சிபிஐ தெரிவிக்கவுள்ளதாம். அப்படி சிபிஐ தெரிவித்தால் அது நரேந்திர மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் குஜராத் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், இஷ்ரத்தையும் அவருடன் இருந்த 3 நண்பர்களையும் குஜராத் போலீஸார் மிகவும் கொடூரமான முறையில் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர் என சிபிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/news/india/cbi-say-ishrat-jahan-was-innocent-college-girl-in-next-chargesheet-184929.html


Other News
1. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
2. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
3. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
4. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
5. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
6. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
7. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed
8. 22-12-2019 South Asian students join anti-CAA protests outside Indian mission in London - S Peer Mohamed
9. 22-12-2019 From NYU to University of London, Students Protest CAA in Freezing Cold - S Peer Mohamed
10. 22-12-2019 Indian Diaspora Stage Anti CAA-NRC Protest March In Germany (Video) - S Peer Mohamed
11. 22-12-2019 Indians in Finland raise slogans, read Preamble at anti-CAA protest in Helsinki - S Peer Mohamed
12. 22-12-2019 Best posters from CAA Protest - 2 - S Peer Mohamed
13. 22-12-2019 Best posters from CAA Protest - 1 - S Peer Mohamed
14. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது ? | THUPPARIYUM SHAMBU | My Name is RED - S Peer Mohamed
15. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed
16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed
17. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed
18. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed
19. 19-12-2019 CAA - போராட்ட புகைப் படங்கள் - S Peer Mohamed
20. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen
21. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்! - வைகோ - S Peer Mohamed
22. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed
23. 12-12-2019 இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா...We oppose Citizenship Amendment Bill - S Peer Mohamed
24. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed
25. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen
26. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen
27. 03-12-2019 முடுக்கு - Haja Mohideen
28. 25-11-2019 UAE cabinet approves national holidays for public and private sector - S Peer Mohamed
29. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
30. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..