Home >> News >> Detail
  Login | Signup  

கெஜ்ரிவாலுக்கு கேள்விகள் - 2

Posted by Haja Mohideen (Hajas) on 3/16/2014 3:55:23 PM

 

கெஜ்ரிவாலுக்கு கேள்விகள் - 2

 16 மார்ச் 2014

"ஆம் ஆத்மி' கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கேள்விக்குறியான பின்னணி குறித்து, நேற்று, கேள்வி எழுப்பி இருந்தோம். இன்று, அந்த கட்சியில் உள்ளவர்கள் குறித்து உள்ள கேள்விகளை பார்ப்போம்.

1 நாடு முழுவதும், ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், அன்னா ஹசாரேயின், "இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்' முக்கிய பங்கு வகித்தது. அதில் இருந்து தனியாக பிரிந்து, கட்சி துவக்கினார் கெஜ்ரிவால். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போது எந்த போராட்டத்திலும், உண்ணாவிரதங்களிலும் பங்கேற்காமல் வெகு தூரம் விலகி இருந்து, பலர் வேடிக்கை பார்த்தனர். அவர்கள், இன்று, ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். உண்மையாக போராடிய, பண பலமோ, அதிகார பலமோ, கல்வி பலமோ இல்லாத, சாமானிய மக்கள் பலரும் கட்சியில் ஒதுக்கப்படுவதும், கேள்வி கேட்பவர்கள் வெளியேற்றப்படுவதும் தொடர்ந்து நடக்கிறதே, ஏன்? கட்சி என்றான பின், அதிகார போட்டியில், சாமானிய மக்களுக்கு பதவி கொடுப்பது பலன் தராது என்பதாலா?

2 ஊழல் எதிர்ப்புக்கும், ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய முக்கியஸ்தர்களுக்கும் சம்பந்தமே இல்லையே, ஏன்?

3 உ.பி., பிரசாரத்தின் போது, ஊழல் எதிர்ப்பு என்ற, நிலைப்பாட்டை மாற்றி, வழக்கமான, தேர்தல் நேர ஆயுதமான மதவாதத்தை கையில் எடுத்தது ஏன்?
மதவாத ஓட்டு வங்கி அரசியலை செய்து, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தானே ஆம் ஆத்மி கட்சியும் செய்கிறது? இதன் பெயர் தான் மாற்று அரசியலா?

4 ரேபரேலி (உ.பி.,) தொகுதியில், பெரும் மத கலவரத்திற்கு காரணமாக இருந்தவர் மத அடிப்படை பயங்கரவாதி தபீக் ரசா கான். இவர் தான், எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என, அறிவித்தவர். இவரை, கெஜ்ரிவால், டில்லி தேர்தலுக்கு முன் சந்தித்து அரசியல் பேசியது எதற்காக? இது மதவாதம் அல்லவா?

5 "காஷ்மீர், இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும்' என்று, தொடர்ந்து சொல்லியும், இயங்கியும் வரும், காஷ்மீர் பிரிவினைவாதியான யாசின் மாலிக் உடன், கெஜ்ரிவால் அரசியல் பேசும் பின்னணி என்ன?
இந்தியாவில் இருந்து காஷ்மீர் பிரிவதை ஊக்குவிக்கும் பிரஷாந்த் பூஷண், கெஜ்ரிவால், யாசின் மாலிக் ஆகியோருக்கு இடையே கருத்தொற்றுமை இருக்கிறது என்று, எடுத்துக் கொள்ளலாமா?

6 "குற்றப் பின்னணி இல்லாதவர்களையே, ஆம் ஆத்மி கட்சி சார்பாக வேட்பாளர் களாக நிறுத்துவோம்' என, கெஜ்ரிவால் குழு கூறியது. ஆனால்,

இந்தியாவின் இணையதள போலிகளில் ஒருவரான சோம்நாத் பாரதியை டில்லி தேர்தலில் வேட்பாளராக்கியது எதற்காக?
பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கி இருக்கும் மதன் லாலை வேட்பாளர்
ஆக்கியது எதற்காக?
உ.பி.,யில் ஏழைகளுக்கான நிலங்களை அபகரித்ததாக குற்றம் சாட்டப்படும் பிரஷாந்த் பூஷண் எந்த அடிப்படையில் வேட்பாளாரானார்?
ஆம் ஆத்மி கட்சியை மலை போல நம்பி, டில்லி தேர்தலில் ஆதரவளித்த சாமானிய மக்களான ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை ஏன் அளிக்கவில்லை?

7. அரியானாவில், பெண்களுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற, காட்டுமிராண்டித் தனமான தண்டனைகளை சர்வ சாதாரணமாக வழங்கி வரும் "காப்' பஞ்சாயத்துகளை ஆதரித்து, கெஜ்ரிவால் பேசி வருவதற்கு காரணம் என்ன? "காப்' பஞ்சாயத்துகளை நடத்தும் சமூகங்கள் மிகப் பெரிய ஓட்டு வங்கிகள் என்பதாலா?

8 பிற கட்சிகள் காலம் காலமாக செய்து வரும், அதே ஓட்டு வங்கி அரசியலை, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் சிறிதும் மாற்றமின்றி செய்வது தான் மாற்று அரசியலா? கேள்விகள் தொடரும்...

 

http://election.dinamalar.com/detail.php?id=902






Other News
1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
3. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
4. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
11. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
17. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
23. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
24. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
25. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
30. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..