Home >> News >> Detail
  Login | Signup  

துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!

Posted by Haja Mohideen (Hajas) on 3/26/2014 9:19:02 AM

               துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!

 

ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள், ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவருடைய மதிப்பு என்ன என்று கூறி விடுவீர்களாமே! என்று கேட்டார்.

 

அல்லாவின் அருளால் எனக்கு அப்படிப்பட்ட ஒரு ஆற்றல் இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன்என்று முல்லா அடக்கமாகப் பதில் சொன்னார். சரி, இப்போது நீர் என்னை உமது மனதில் எடைபோட்டுப் பார்த்து என்னுடைய உண்மையான மதிப்பு என்ன என்று கூறும் பார்க்கலாம்என்று மன்னர் கேட்டுக் கொண்டார். 

 

முல்லா மன்னரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார், பிறகு அடக்கமான குரலில் மன்னர் பெருமான் அவர்களே தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள்தான் என்றார்.

 

இதனைக் கேட்ட மன்னருக்குத் தூக்கிவாரிப் போட்டது. முல்லா தன்னை வேண்டுமென்றே அவமரியாதை செய்கிறார்  என்று ஆத்திரப்பட்டார். என்னை நீர் எவ்வளவு கேவலப்படுத்தி விட்டீர் தெரியுமா ? என் இடுப்பில் அணிந்திருக்கும் கச்சையின் மதிப்பே பத்துப் பொற்காசுகள் இருக்குமே என்று சீற்றத்துடன் கேட்டார்.

 

முல்லா சீற்றம் அடையாமல் மன்னர் பிரான் அவர்களே நான் சொன்னது தங்களது கச்சையின் மதிப்பைப் பற்றித்தான். தனிப்பட்ட உங்கள் உடலுக்கு ஒரு காசுகூட மதிப்புப் போட முடியாது.  இது உங்களைப் பற்றி மட்டும் கூறப்படுவது அல்ல. 

 

இந்த உடல் எத்தனை காலம் இந்த உலகில் நடமாட முடியும்? உடலிருந்து உயிர் அகன்று விட்டால் மன்னர் என்ற முறையில் இன்று உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து நீடிக்குமா ? அப்படிப்பட்ட அழியும் ஒரு பொருளான உடம்புக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்என்று முல்லா பதில் அளித்தார். முல்லாவின் அந்த சாதுரியமான பதில் துருக்கி மன்னரின் ஆத்திரத்தை அடக்கி அவரைச் சிந்திக்க வைத்தது.

 

    தொகுப்பு:கீழை ஜஹாங்கீர் அரூஸி 






Other News
1. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
2. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
3. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
4. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
5. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
6. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
7. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
8. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
9. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
10. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
11. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
12. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
13. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
14. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
15. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
16. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
17. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
18. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
19. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
21. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
23. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
24. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
25. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
26. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
27. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
28. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
29. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
30. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..