பாஜகவும், காங்கிரசும் ஒரே விதமான சிறகுகள் கொண்ட

Posted by Mohamed Rafiq (namaduoor) on 5/25/2014 12:38:36 PM

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான அணுகுமுறையில் பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முன்பு ஒரு நிலையும், தேர்தலுக்கு பின்பு ஒரு நிலையும் கொண்டு இரட்டை வேடம் போடுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில்,

             ’’பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ராஜபக்சேவிற்கு எதிராக தமிழக மக்கள் பொங்கியெழுந்த போது, இலங்கை தமிழர்களின் நலனை காக்க மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தவறிவிட்டது எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு தமிழீழம் கொண்டுவருவோம் என அதன் தமிழக தலைவர்களும், தமிழீழம் பற்றி பேசிய அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசினர்.

            மேலும் மோடி அவர்கள் தமிழகம் வந்தபோது சிறிய நாடான இலங்கை தமிழக மீனவர்களை தாக்கி அழிப்பதற்கு காங்கிரஸ் அரசே காரணம் எனவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்நாட்டுடனான அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக மீனவர்களின் நலனையும், தமிழர்களின் உணர்வுகளை காப்போம் என பிரச்சாரம் செய்தார். இதற்காக இராமேஸ்வரத்தில் கடல் தாமரை என்ற பெயரில் தனி மாநாடே சுஷ்மா தலைமையில் நடத்தினர்.

           ஆனால் தற்போது அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவின், பிரதமர் வேட்பாளாரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்ஷேவை அழைத்திருப்பதன் மூலம் அவர்களின் இரட்டை நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இந்த விசயத்தில் தமிழக மக்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதை தெளிவாக அறியலாம். இதேப்போன்று காங்கிரஸ் அரசு பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது அதற்கு எதிராக பல முட்டுக்கட்டைகளை போட்டும், பேச்சுவார்த்தை என்பது கோழைத்தனம் எனவும் தேசப்பற்றை ஓங்கி உரைத்த பாஜக, தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதும் அவர்களின் இரட்டை நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

              வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு கிடையாது. வெளியுறவுத் துறைக் கொள்கையில் காங்கிரசுக்கு அண்ணனாகவே பா.ஜ.க.வும் இருக்கும். பா.ஜனதா, ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப் பாட்டுடனும் செயல்படுவதாக சமீபத்தில் விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது தற்போது நிரூபணமாகிவருகிறது. 

மேலும் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸை பா.ஜ.கவும், பா.ஜ.கவை காங்கிரஸூம் எதிர்க்கிறது உண்மையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள் தான்’’என்று தெரிவித்துள்ளார். 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..