Home >> News >> Detail
  Login | Signup  

பராஅத்: வினாக்களும் விடைகளும்

Posted by Haja Mohideen (Hajas) on 6/12/2014 1:15:01 AM

14 ஜூலை, 2012

பராஅத்: வினாக்களும் விடைகளும்

 

الحمد لله رب العالمين, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين,

அன்புள்ள அல்ஹாஜ் நஜ்முதீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

உங்களின் பராஅத் பற்றிய மறுப்பு கடிதம் கண்டேன். நல்ல ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

உங்கள் கேள்விகளில் உள்ள சாரம்சம் இதுதான்:

 

அல்ஹாஜ். நஜ்முதீன் அவர்கள்
அனுப்பிய கடிதம்

 

1. இப்னு மாஜாவில் வந்துள்ள பராஅத் பற்றிய ஹதீஸ் பலகீனமானது. அதை எப்படி ஆதாரமாக எடுக்கலாம்?

2. தமிழக மக்களுக்கு மட்டுமே இந்த இரவைப் பற்றி தெரிந்திருக்கிறது. வடநாட்டிலோ அரபு நாடுகளிலோ இது பற்றி மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். அப்படியானால் அவர்களெல்லாம் முஸ்லிம்களில்லையா?

3. மற்ற நாட்களில் பள்ளிக்கு வராதவர்கள் எல்லாம் இந்த இரவில் வந்து மொத்த கொள்முதல் போல் அல்லாஹ்விடம் வியாபாரம் செய்கிறார்களே?

 

கடைசியாக கடிதத்தை இப்படி முடித்திருக்கிறீர்கள்: விளக்கம் தேவைப்பட்டால் என் அலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும் என்று. ஆனால் இப்பொழுது விளக்கம் தேவைப்படுவது தங்களுக்குத்தான். 

கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.

 

பதில்கள்:

ஒரு ஹதீஸ் பலகீனமாக இருந்தாலும் பல அறிவிப்புகளில் பல அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படுமானால் அதை அமலுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று எல்லா மத்ஹப் அறிஞர்களாலும் சட்டம் இயற்றும் வல்லுனர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஏராளமான சட்ட நூல்களில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் நீங்கள் சட்டென தேடி படிக்க ஏதுவாக இந்த வலை முகவரியைத் தருகிறேன். http://madeena.org/vb/t55979  இது மதினாவின் இணைய தளம்.

அதில் பராஅத் இரவில் வணங்குவதற்கு ஏராளமான அறிவிப்புகளை எடுத்துக்காட்டிவிட்டு, ''இதில் சில பலகீனமான அறிவிப்புகள் உண்டு என்பதற்காக ஒதுக்கமுடியாது. அமல்களின் சிறப்பு விஷயத்தில் பலகீனமானவற்றைக் கூட எடுத்து அமல் செய்யலாம் என்று எத்தனை அறிஞர்கள் கூறியிருக்கிருக்கிறார்கள் என்பதை பட்டியலிடுகிறார்கள்.

 

فـائـدة مهمـة في العمـل بالحديث الضعـيف :

 

إعلموا رحمكم الله أن الأمّـة على جــواز العمل بالاحاديث الضعيفة في فضائل الاعمال ، واذكر خلاصة مهمة متعلقة بأحاديث ليلة النصف من شعبان لانها من الاحاديث الضعيفة وذلك ردّاً على المبـتـدعة من المجسِّـمة في عـدم اخذهم بالاحاديث الضعيفة وعملهم هـذا مخالف لعمل اهل السنة والجماعة على مــرّ العصـور

 

قال ابن عــبد البــرّ : أحاديث الفضائل لا يحتاج فيها الى من يحتـجّ به . وقال الحاكم : سمعتُ أبا زكـريا العنبري يقول : الخبر اذا ورد لم يحلـّــل حراما ولم يحرّم حلالاً ولم يوجـب حكماً وكان في ترغـيب وترهـيب غمض عنه وتسـاهـل في روايـته .

 

ولفـظ ابن مهـدي كما في المـدخـل : إذا روينا عن النبي صلى الله عليه ولم في الحلال والحرام والأحكام شـدّدنا في الاسانيـد وانتـقـدنال الرجال ، وإذا رويـنا في الفضــائـل والثـواب والعـقاب تساهـلنا في الأسـانيـد وتسامحـنا في الرجـــــال .

 

وقال العلاّمة الرمـليّ الشافعي في فـتاويـه ما نصّـه : قد حـكى النووي في عِـدّة من تصانـيفه الاجمـاع على العمل بالحديث الضعيف في الفـضائل ونحوها خاصـــة . اهـ

 

وقال ابن رجب في اللطائف : إنَّ جمهور ائمة الحديث ضعفوها وصحّـحَ ابـــن حِــبـّـان بعضها وخـرّجَــهُ في صحيحه . اهـ

 

 

وقال ابن حجـر الهـيـتـمي في الدر المنـضـود : وقد اتفـق الائمة من المُحدّثـين والفقـهاء وغـيرهم كما ذكـره النووي وغـيره على جواز العمل بالحديث الضعيف في الفضائل والترغـيب والتـرهيب لا في الاحكام ونحوهها ما لم يكن شـديد الضعـف . اهـ

 

ஒரு நாள் இரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அவர்களோ ஜன்னத்துல் பகீவு என்று மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தவையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள்.  நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லா{ஹதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                  

 

(திர்மிதி ஹதீது எண் 739 பாபு மா ஜாஅ பீ லைலத்தின் நிஸ்பி மின் ஷஃபான் கிதாபுஸ் ஸவ்ம், இப்னுமாஜா ஹதீது 1389 பாபு மா ஜாஅ பீ லைலத்தின் நிஸ்பி மின் ஷஃபான் கிதாபு இக்காமத்திஸ் ஸலாத்தி, முஸ்னத் அஹ்மத் பாகம் 6 பக்கம் 238 மிஷ்காத் பக்கம்115 ஹதீது எண் 1299 பாபு கியாமி ஷஹ்ரி ரமலான்)

ஆக பல ஹதீஸ் நூல்களில் பல அறிவிப்புகளில் வந்துள்ளதால் இதைப் பொய்யானது என்று ஒதுக்கமுடியாது.

 

2. தமிழக மக்களுக்கு மட்டுமே இந்த இரவைப் பற்றி தெரிந்திருக்கிறது.? வடநாட்டிலோ அரபு நாடுகளிலோ இது பற்றி மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர்.?

 

இது முற்றிலும் தவறான தகவல். நான் மேலே குறிப்பிட்டிருந்த இணைய தளம் தமிழகத்தைச் சார்ந்தது அல்ல. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிஞர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களல்ல. இதல்லாமல் எத்தனையோ அரபு நாடுகளின் இணைய தளங்களில் பராஅத் பற்றிய ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளனவே அவற்றை எல்லாம் நீங்கள் காணவில்லையா? நீங்கள் நன்கு படித்தவர் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர் என்று நான் கேள்விப்பட்டிருந்தேனே அது உண்மையில்லையா?

கீழ்கண்ட இணைய தளங்களை காணுங்கள்:

எகிப்து நாட்டின் ஃபத்வா கமிட்டியின் இணைய தளத்தில் அழுத்தம் திருத்தமாக தக்க சான்று வெளியாகியுள்ளது. அரபியில் வாசிக்க இந்த இணைப்பில் பார்க்கவும்:

http://www.dar-alifta.org/ViewFatwa.aspx?ID=470

ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பில் பார்க்கவும்:

http://www.dar-alifta.org/viewfatwa.aspx?id=470&Home=1&LangID=2

 

05-07-2012 அன்று இந்த அரபு இணைய தளத்தில் (http://www.elantem.com/vb/t396826.html)

வெளியாகியுள்ள ஒரு கட்டுரை:

 

‘’இன்று இஸ்லாமிய உலகம் இந்த இரவைக் கொண்டாடுகிறது. ஆனால் ஒரு பெரும் கைசேதம் என்னவெனில் இந்த சிறப்பான நாட்களை நினைவு கூறுகிறவர்களும் இதன் சிறப்பை உணர்ந்தவர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதுதான்.

அல்லாஹ் தஆலா ஷஃபானின் இந்த இரவுக்கு என்று ஒரு தனிச்சிறப்பை வைத்துள்ளான். அதனால்தான் இந்த இரவில் அவன் தன் அடியார்களை அதிக அளவில் மன்னிக்கும் பொருட்டு அவர்களின் பக்கம் முன்னோக்குகிறான்.

சஹீஹுல் ஜாமிஃ வில் வந்துள்ள ஒரு அறிவிப்பில் அல்லாஹ் தஆலா இந்த இரவில் அடியார்கள் அளவில் அதிகம் கவனம் செலுத்தி அநேகர்களை மன்னிக்கிறான். இணைவைப்பவர்கள் போன்றோரைத் தவிர.'' என்று வந்துள்ளது.

எனவே இந்த இரவு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நம் பாவங்களுக்கு மன்னிப்பு தேடவும் சக முஸ்லிம்களுக்காகவும் சிரியா ஃபலஸ்தீன் போன்ற நாடுகளில் அல்லல்படும் அப்பாவி முஸ்லிம்களுக்கு விஷேசமாக துஆ செய்யவும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.'' என்று எழுதப்பட்டுள்ளது.

 

வஹாபிகளின் முக்கிய அறிஞரும் அரபு மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவரான அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்தில்லாஹ் பின் பாஸ் அவர்கள் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவதாவது:

 قال الحافظ ابن رجب - - في كتابه: (لطائف المعارف) في هذه المسألة- بعد كلام سبق- ما نصه: "وليلة النصف من شعبان كان التابعون من أهل الشام؛ كخالد بن معدان، ومكحول، ولقمان بن عامر وغيرهم،

يعظمونها ويجتهدون فيها في العبادة، وعنهم أخذ الناس فضلها وتعظيمها، ، فلما اشتهر ذلك عنهم في البلدان، اختلف الناس في ذلك فمنهم من قبله منهم، ووافقهم على تعظيمها، منهم طائفة من عباد أهل البصرة وغيرهم، وأنكر ذلك أكثر علماء الحجاز، منهم: عطاء، وابن أبي مليكة، ونقله عبد الرحمن بن زيد بن أسلم، عن فقهاء أهل المدينة، وهو قول أصحاب مالك وغيرهم، وقالوا: ذلك كله بدعة واختلف علماء أهل الشام في صفة إحيائها على قولين:

أحدهما: أنه يستحب إحياؤها جماعة في المساجد. كان خالد بن معدان ولقمان بن عامر وغيرهما يلبسون فيها أحسن ثيابهم، ويتبخرون ويتكحلون، ويقومون في المسجد ليلتهم تلك، ووافقهم إسحاق بن راهويه على ذلك، وقال في قيامها في المساجد جماعة: ليس ذلك ببدعة، نقله حرب الكرماني في مسائله.

والثاني: أنه يكره الاجتماع فيها في المساجد للصلاة والقصص والدعاء، ولا يكره أن يصلي الرجل فيها لخاصة نفسه، وهذا قول الأوزاعي إمام أهل الشام وفقيههم وعالمهم،

சிரியாவைச் சேர்ந்த தாபிஈன்கள் (خالد بن معدان، مكحول، لقمان بن عامر போன்றோர்) இந்த பராஅத் இரவை கண்ணியப் படுத்துபவர்களாகவும் இந்த இரவில் அதிகம் வணக்கம் செய்பவர்களாகவும் இருந்தனர். அதனால் அங்குள்ள மக்களும் அதன் சிறப்பையும் கண்ணியத்தையும் விளங்கியிருந்தனர். இதில் மக்களிடையே கருத்துவேறுபாடுகளும் உண்டு. பஸரா மக்கள் இதை ஏற்றுக்கொண்டு அமல் செய்தவர்களில் உள்ளவர்கள். ஹிஜாஸ் வாசிகளில் அநேகர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. சிரியாவாசிகளில் அனைவரும் இந்த இரவின் சிறப்பை ஏற்றுக்கொண்டாலும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு உண்டு.

1. கூட்டமாக பள்ளியில் ஒன்றுகூடி ஜமாஅத்தாக விஷேச தொழுகை நடத்துவது விரும்பத்தக்கது என்று கூறுவோரும் உண்டு. خالد بن معدان ,لقمان بن عامر ,إسحاق بن راهويه போன்றோர் இந்த இரவில் விஷேச ஆடைகள் அணிந்து கண்களுக்கு சுர்மா இட்டு, பள்ளியில் இரவு முழுதும் வணங்குவார்கள்.

 

2.

الأوزاعي போன்றோரின் கருத்து தனித்தனியாக தொழுது கொள்ளலாம் கூட்டமாக ஜமாஅத் நடத்துவது விரும்பத்தக்கதல்ல'

 ولا ينافي هذا رواية الترمذي من حديث عائشة لذهابه إلى البقيع، ونزول الرب ليلة النصف إلي سماء الدنيا، وأنه يغفر لأكثر من عدة شعر غنم بني كلب، فإن الكلام إنما هو في هذه الصلاة الموضوعة في هذه الليلة،

இந்த இரவில் நபியவர்கள் ஜன்னத்துல் பகீஃ சென்று மறைந்தவர்களுக்கு துஆ செய்ததையும் அல்லாஹ் முதலாவது வானம் வரைக்கும் இறங்கி வந்து கலப் கூட்டத்தாரின் ஆட்டு மந்தைகளின் ரோமத்தை விட அதிகமானோருக்கு பாவங்களை மன்னிக்கிறான் என்பதையோ நான் மறுக்கவில்லை. இந்த இரவில் நூறு ரக் அத் போன்ற நீண்ட தொழுகைகளை சிலர் கூறுகின்றனர் அதைத்தான் மறுக்கிறோம்’’. இவ்வாறு வஹாபிகளின் முக்கிய அறிஞரே இந்த இரவின் சிறப்பை ஒப்புக்கொண்டதற்குப் பிறகும் நீங்கள் இதனை மறுப்பது உங்களின் மீதான பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் சுன்னத் வல் ஜமாஅத் போர்வையில் ஒளிந்திருக்கும் உங்களின் அசல் கொள்கை என்ன? என்பதை தெளிவுபடுத்துங்கள்.

 

இந்த இரவின் சிறப்பை எத்தனை பெரிய அறிஞர்களெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று தக்க சான்றுகளுடன் ஆங்கிலத்தில் அறிய இந்த ஆங்கில விக்கிபீடியா முகவரிக்கு செல்லவும்.

http://en.wikipedia.org/wiki/Mid-Sha%27ban

 

 

 அரபு விக்கிபீடியா கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் ليلة منتصف شعبان என்ற தலைப்பில் அருமையான கட்டுரை வெளியாகியுள்ளது 

بحسب رأي بعض علماء السنة مثل يوسف القرضاوي، ومحمد صالح المنجد، وعطية صقر، فإنه لم يثبت عن النبي محمد بن عبد الله تخصيصه هذه الليلة بعبادة، ولم يثبت عن الصحابة شيء في هذا. ولم يأت فيها حديث وصل إلى درجة الصحة، والدعاء الذي يقرأه بعض الناس في بعض البلاد، ويوزعونه مطبوعًا، دعاء لا أصل له.. فيما يرى علماء آخرون مثل محمد علوي المالكي وحسنين محمد مخلوف وعلي جمعة وعبد الله صديق الغماري وغيرهم بأن الأحاديث الواردة في فضل هذه الليلة صحيحة، وحتى الضعيف منها فيعمل به في هذا الباب لأنه من فضائل الأعمال [12] ويقولون بأنه قد ورد عن جماعة من السلف اعتناؤهم بهذه الليلة واجتهادهم بالعبادة فيها كما قال ذلك ابن رجب الحنبلي: «وليلة النصف من شعبان كان التابعون من أهل الشام كخالد بن معدان ومكحول ولقمان بن عامر وغيرهم يعظمونها ويجتهدون فيها في العبادة، وعنهم أخذ الناس فضلها وتعظيمها» وكما قال ابن تيمية: «وأما ليلة النصف فقد روي في فضلها أحاديث وآثار ونقل عن طائفة من السلف أنهم كانوا يصلون فيها، فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا»  لذا فإنهم يعتنون بهذه الليلة أشد الاعنتاء، حتى قال عبد الله صديق الغماري ناصحا ]:

فقم ليلة النصف الشريف مصلياً           فأشرف هذا الشهر ليلة نصفه

فكم من فتى قد بات في النصف آمناً                وقد نسخت فيه صحيفة حتفه

فبادر بفعل الخير قبل انقضاءه             وحاذر هجوم الموت فيه بصرفه

وصم يومه لله وأحسن رجاءه              لتظفر عند الكرب منه بلطفه

 

அதில் குறிப்பிடப்பட்டிருக்கிற முக்கிய அம்சம் அல்லாமா இப்னு தைமிய்யாவின் கருத்து: ‘’இந்த இரவின் சிறப்பு பற்றி நிறைய ஹதீஸ்களும் சஹாபாக்கள் சலஃபுகளிடமிருந்து நிறைய கூற்றுகளும் வந்துள்ளன. அவர்கள் இந்த இரவில் நின்று வணங்கியதாக வந்துள்ளது. எனவே அதை மறுப்பதற்கில்லை. ஆனால் தனித்தனியாக தொழுதுகொள்ளட்டும்.'''-- அறிஞர் இப்னு தைமிய்யா.

 

ஆக, வஹாபிகள் கூட இந்த இரவின் சிறப்பையோ அதில் விஷேசமாக வணங்குவதையோ மறுக்கவில்லை கூட்டமாக ஜமாஅத் நடத்துவது ஏற்றமில்லை என்றுதான் கூறுகின்றனர். ஆனால் நீங்களோ இந்த இரவின் சிறப்பை தமிழ் நாட்டினரைத் தவிர யாருக்குமே தெரியவில்லை'' என்கிறீர்கள். அப்படியானால் வஹாபிகளை விட ஒரு படி மேலே சென்று நீங்கள் மறுப்பதால் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறீர்கள் என்று நாங்கள் புரிந்துகொண்டோம்.

 

மற்ற காலங்களில் பள்ளிக்கு வராதவர்களெல்லாம் இந்த விஷேச இரவுகளில் மட்டும் வந்து நன்மைகளை மொத்த கொள்முதல் (whole sale) செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். அது திருத்தப்படவேண்டிய விஷயம்தான். ஐந்து வக்து ஃபர்ளு மிக முக்கிய கடமை. என்பதையும் சொல்லிக்கொண்டிருகிறோம். அதோடு இந்த சுன்னத் நஃபில்களையும் ஆர்வமூட்டிக் கொண்டிருக்கிறோம். ஐந்து வக்துக்கு வரவேண்டாம் இதுபோன்ற நஃபில்களைத் தொழுதால் போதும் யார் சொன்னது? எந்த ஆலிம்களும் அப்படி கூறவில்லையே! அது சில மக்களின் இயல்பு. அதை மாற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டுமே தவிர அதிகமான அறிவிப்புகளில் வந்திருக்கிற இது போன்ற சிறப்பான இரவுகளை மறுக்கக்கூடாது.

உதாரணமாக வருடம் முழுதும் பள்ளிக்கு வராதவர்களெல்லாம் பெருநாள் தொழுகைக்கு மட்டும் வருகிறார்கள் என்பதற்காக பெருநாள் தொழுகையே கூடாது என்று சொல்வீர்களா?

 

வடநாட்டில் யாருக்குமே இந்த இரவைப் பற்றித் தெரியாது என்று எழுதியிருக்கிறீர்கள் நானும் வடநாட்டில் தேவ்பந்தில் ஓதியவன்தான். அங்கே ஒரு அறிஞர் எழுதிய 'ஷபே பராஅத் கீ ஹகீகத்' என்ற உர்து நூலை நான் படித்திருக்கிறேன் அதில் இந்த இரவின் சிறப்பு பற்றி நிறைய சான்றுகளை அவர் தொகுத்து எழுதியிருந்தார். அது கைவசம் வந்ததும் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நமது இந்த ஆரோக்கியமான தகவல் பரிமாற்றத்தை இன்னும் தொடருவோம். ஜஸாக்கல்லாஹ்.

           வஸ்ஸலாம்.

 

                     அன்புடன்,

              ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி

                  ஃபாஜில் தேவ்பந்த்

                      9865369819


Other News
1. 02-03-2021 ஏர்வாடியின் இளம் ஹாஃபிளா (முழு குர்ஆன் மனனம்)- மாணவி ஸாதிகா - S Peer Mohamed
2. 02-03-2021 புதுச்சேரி - வில்லியனூரில் மினி மாரத்தான் - ஏர்வாடி மாணவர் முஹம்மது ஜஸூர் முதலிடம் - S Peer Mohamed
3. 25-02-2021 2 வது மாதமாக நோயாளிகளை நலம் விசாரித்தல் - S Peer Mohamed
4. 25-02-2021 #குஜராத்துக்குஒருநீதி #தமிழ்நாட்டிற்குஒருநீதியா...? - S Peer Mohamed
5. 25-02-2021 சப்-ஜூனியர் - தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக ஏர்வாடி விளையாட்டு வீரர் தேர்வு - S Peer Mohamed
6. 19-02-2021 கைப்பந்து வீரர்களுக்கான மாநில அளவிலான தேர்வில் ஏர்வாடி முஹம்மது அய்மன் தேர்வு - S Peer Mohamed
7. 15-02-2021 விவசாயிகள் போராட்டம் - உள்ளூர் ஹீரோக்களும் உலக அரசியலும் - S Peer Mohamed
8. 23-01-2021 ஏர்வாடி: LV Sports Club: 19ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி - S Peer Mohamed
9. 23-01-2021 Open Badminton Tournament in Eruvadi / 26-Jan - S Peer Mohamed
10. 13-01-2021 EMAN Free Dress Bank - Sharing is carring - S Peer Mohamed
11. 03-01-2021 ஏர்வை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாவட்ட அளவில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 7-Jan - S Peer Mohamed
12. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகளுக்காக உணவு தயாரிக்கும் முஸ்லீம்கள் - S Peer Mohamed
13. 05-12-2020 Scenes from a farmers’ protest camp: It’s hard to see how the Modi government can shut this down - S Peer Mohamed
14. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் - கார்ட்டூன்கள் - S Peer Mohamed
15. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு: விவசாயிகள் எதைப் பற்றி போராடுகிறார்கள்? - S Peer Mohamed
16. 05-12-2020 நமதூர் ஆசிரியர்கள் நமதூர் ஆசிரியர்கள் , திரு. அனந்த நாராயணன் , ஷரிபா மேடம் இரங்கல் செய்திகள் - S Peer Mohamed
17. 06-10-2020 India: paper-based coronavirus test could be a game changer - S Peer Mohamed
18. 02-10-2020 Justice in ruins: On Babri Masjid demolition case verdict - S Peer Mohamed
19. 27-09-2020 நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் படுகொலை - S Peer Mohamed
20. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா? - S Peer Mohamed
21. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா? #சதியா? - S Peer Mohamed
22. 02-09-2020 ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல் - S Peer Mohamed
23. 28-08-2020 Expats over age 60 with no degree have until year's end to leave Kuwait - S Peer Mohamed
24. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
25. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
26. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
27. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
28. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
29. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed
30. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..