Home >> News >> Detail
  Login | Signup  

நெல்லை - தடம் மாறும் அரசு பஸ்கள்

Posted by Haja Mohideen (Hajas) on 6/14/2014 3:07:43 AM
டீசல் பற்றாக்குறை எதிரொலி- தடம் மாறும் அரசு பஸ்கள்
 
Posted by: Essaki Published: Saturday, June 14, 2014, 11:58 [IST]

நெல்லை:

டீசல் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசுப் பேருந்துகள் தடம் மாறி இயக்கப்படுவதால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வரும் நிலையில் திடீரென பஸ்கள் தடம் மாறி இயக்கப்படுவதால் கிராம புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டீசல் சிக்கனத்தை காரணம் காட்டி ஒரு லிட்டருக்கு சுமார் 5 கிமீ ஓட்ட வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு குறைவாக ஓட்டும் பஸ் டிரைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் அதிகாரிகளுக்கும், டிரைவர், கண்டாக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் குறைந்த தூரம் செல்லும் கிராம பஸ்களை தடம் மாறி இயக்கவும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு கிராமத்துக்கு சென்று வரும் பஸ்சை மறுநாள் அதை விட தூரமாக உள்ள பகுதிக்கு இயக்குமாறு டிரைவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட கிராம பகுதிகளுக்கு பஸ்கள் செல்லாமல் முடக்கப்படுவதாக தினமும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த வழித்தடத்தை மாற்றி பிற வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதால் கண்டக்டர்களுக்கு கட்டணம் தொடர்பான பிரச்சனை ஏற்படும்.

சாத்தான்குளம், உடன்குடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி செல்லும் பஸ்கள் அடிக்கடி வழித்தடம் மாறி இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு வழித்தடத்தை மாற்றாமல் பஸ்சை இயக்க வேண்டும். கிலோ மீட்டருக்காக பஸ்களை இயக்காமல் பயணிகளின் நலனுக்காக இயக்கி வருமானத்தை அதிகரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  http://tamil.oneindia.in/news/tamilnadu/shortage-diesel-government-buses-route-changes-203451.html






Other News
1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
17. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
21. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
23. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
26. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..