Home >> News >> Detail
  Login | Signup  

மோதி மஸ்தானும் அவரது வாலைப் பிடித்த குமரி முத்துவும்.

Posted by Haja Mohideen (Hajas) on 9/10/2014 10:31:47 AM

மோதி மஸ்தானும் அவரது வாலைப் பிடித்த குமரி முத்துவும்.

பாரத மக்கள் கட்சி, அட அது தான்யா இந்தியிலே பாரதிய ஜனதா பார்ற்றியைச் சேர்ந்த ஓராளுக்கு தங்கத் தமிழர்கள் குமரித் தமிழர்கள் வாக்குப் போட்டாங்களே. இவருக்கு வாக்குப் போட்டத்துக்கு பதிலாக தமிழர்களை வரிசையாக சுடுகாட்டில் படுக்க வைத்து வாய்க்கு அரிசிப் போட்டுருக்கலாம். 
 
ஏற்கனவே இந்தியக் கூட்டாட்சியில் தமிழன் படும் பாடு பெரும்பாடு. இதிலே இது மாதிரி கண்ட கஸ்மலம் ( அட ! சமஸ்கிருத வாரமாமே அதான் சமஸ்கிருதத்திலேய் திட்டினேனாக்கும் ).. எல்லாம் மிச்சம் சொச்சம் தமிழன் உசிரையும் வந்தவன் நின்றவன் பேண்டவன் என எல்லோருக்கும் விற்றுப்பிடும் போலிருக்கே. 
 
இந்தியைத் திணிச்சாங்க, திராவிட விடுதலையை அழிச்சாங்க, தமிழ் மொழியை அழிக்க என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க, தமிழ் நாட்டில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைச்சாங்க. இதுக்கு என ஒரு பட்டி பார்ப்பனர், மலையாளி, அதுகளுக்கு கழுவி விட கொஞ்சம் தமிழ் கூட்டம் வேலை பார்க்குது. வேவு பார்க்குது. 
 
சுனா சானா மத்திய அமைச்சரானதும் ராஜபக்ஷே வீட்டு நாய்க்குட்டியாட்டம் குழவி குழவி கொழும்பு பக்கமா வாலாட்டிட்டு அலையுது. கச்சதீவு எல்லாம் தமிழ்நாட்டுக்கு சொந்தமில்ல, அது சிங்களவனுக்கு என ஆணித்தரமா மத்தியில் இந்திவாலாக்கள் சொல்லியாச்சு. என்னத்துக்கு மீன் பிடிச்சிட்டு, இருக்கிற கடற்கரை எல்லாம் வைகுண்ட பெருமாளிடம் அடமானம் வச்சிட்டு அப்படியே கப்பல் ஏறி மாலை தீவு தாண்டி போயிடுங்க என சொல்லாம சொல்றாங்க. 
 
இந்திய விடுதலை பெற்றது தொட்டு மத்திய அரசு தமிழகத்துக்கு செஞ்சது எல்லாமே பச்சத்துரோகம் தான். தமிழர்கள் பெரும்பான்மையா வாழ்ந்த சித்தூர், திருப்பதி, நகரி, கோலார், கொள்ளேகால், திருவனந்தபுரம், கொல்லம், பீர்மேடு, தேவிகுளம், பாலக்காடு - சித்தூர் என எல்லாவற்றையும் தெலுங்கு, கன்னடம், மலையாள தேசத்துக்கு தாரை வார்த்தார்கள். நல்லவேளை இலங்கையோடு தமிழகத்துக்கு நில எல்லை கிடையாது, அப்படி ஏதும் இருந்திருந்தா, திருச்சி, தஞ்சாவூர், ராமேஷ்வரத்தைக் கூட சிங்களவருக்கு கொடுத்திருப்பார்கள். அதிலயும் ஏன் குறை வைப்பானே என கச்சத்தீவையும் கொடுத்தார்கள். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடகு மொழி பேசுற பகுதி தமிழகத்தோடு தானே சேர்த்திருக்க வேண்டும். அதையும் கன்னடக் காரணக்கு கொடுத்தான். 
 
பாருங்கள் பெரியாறு அணை இருக்கிற பகுதியான பீர்மேடு கேரளாவுக்குப் போச்சு தண்ணீர் வரவில்லை. காவிரியாறு உருவாகும் குடகு கருநாடகத்துக்குப் போச்சு தண்ணீர் வரவில்லை, பாலாறு உருவாகும் சித்தூர் ஆந்திராவுக்குப் போச்சு, இல்லாத கடவுள் புண்ணியத்திலே அங்கே மழையே பெய்யாமல் தண்ணீர் வருவதில்லை. கச்சதீவையும், கடல் எல்லையையும் இலங்கைக்கு விட்டுக் கொடுத்தார்கள் மீன் பிடிக்கிறவன் வாழ்க்கை நாஸ்தியாச்சு. தண்ணீர் இல்லாததால் காவிரி படுகையும், வைகைப் படுகையும் காஞ்சு வறண்டு போச்சு. விட்டுருந்தா சென்னையைக் கூட ஆந்திராவுக்கு கொடுக்க ரெடியானாங்க, ஏதோ நம்மாளுங்க கொஞ்சம் முழிச்சிட்டதாலே மிஞ்சிச்சு. 
 
அதுக்கப்புறம் இந்தியைத் திணிச்சாங்க, சாணியைக் கரைச்சு வாயில ஊற்றினாங்க, எல்லாவற்றையும் எதிர்த்து வெற்றி கண்டா, பார்ப்பனையும், பார்ப்பன அடிவருடிகளையும்  திமுகவில் நுழைத்து ஒட்டு மொத்த திமுக-வின் சித்தாந்தமே நாறிப் போச்சு.. 
 
தமிழ் வளரக் கூடாது என தனியார் பள்ளிக்கு வழிவிட்டாங்க, இன்னைக்கு அது ஆங்கிலமா புளிச்ச ஏப்பமாய் நாற்றமடிக்குது. இருக்கிறது கூட பொறுக்கலை இந்த வக்கற்ற பயல்களுக்கு, குமரியையும் கேரளாவுக்கு கொடுப்பாராம் பொன்னர் ராதாகிருஷ்ணன் சொல்றாரு. கேட்டானா , மலையாளி குமரியை கேரளாவுக்குத் தா என கேட்டானா? இவராவே வேட்டியை அவுத்துக் கொடுப்பேன் என கோவணத்தோடு ஒத்தகைக் காலில் நிற்கிறாரு. 
 
 
ஏன், குமரியை மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தையே கேரளாவுக்கு கொடுக்கலாமே. வேண்டாமா. அப்ப தமிழ்நாட்டை மூனாப் பிரிச்சு ஒன்னை சீமாந்திராவுக்கும், ஒன்னை கருநாடாகத்துக்கும், ஒன்னை கேரளாவுக்கு கொடுத்திடுங்களேன். ஓ ! ராமேஷ்வரம் தீவு மிஞ்சுதா, அதை ராஜபக்ஷேவாக்கு கொடுத்திடுங்கோ. சந்தோஷமா இப்போ. தமிழன் இருப்பானா? எல்லோருக்கும் செவ்வாய் கிரகத்துக்கு டிக்கேட் வாங்கி ஓரேயடியா அனுப்பிடுங்கோ, நாஷாமாப் போறோம்.. போதுமாயா. 
 
என்னத்த சொல்ல !!! இது தான் ஆட்டம் ஆரம்பம் ! இனி போகப் போகத் தான் இருக்கு ! பார"தீய" ஜனதாக்களின் அட்டகாசங்கள், அப்பப்பா !!! 
 
http://www.kodangi.net/2014/09/blog-post.html





Other News
1. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
2. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
3. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
4. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
5. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
6. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
7. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
8. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
9. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
10. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
11. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
12. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
13. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
14. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
15. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
16. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
17. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
18. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
19. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
20. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
21. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
22. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
23. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
24. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
25. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed
26. 22-12-2019 South Asian students join anti-CAA protests outside Indian mission in London - S Peer Mohamed
27. 22-12-2019 From NYU to University of London, Students Protest CAA in Freezing Cold - S Peer Mohamed
28. 22-12-2019 Indian Diaspora Stage Anti CAA-NRC Protest March In Germany (Video) - S Peer Mohamed
29. 22-12-2019 Indians in Finland raise slogans, read Preamble at anti-CAA protest in Helsinki - S Peer Mohamed
30. 22-12-2019 Best posters from CAA Protest - 2 - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..