Home >> News >> Detail
  Login | Signup  

தமிழ்நாட்டு விநாயகர் ஊர்வலங்களை முஸ்லிம்களே நடத்த வேண்டுமாம்,

Posted by Haja Mohideen (Hajas) on 9/10/2014 10:41:36 AM

யாழ்ப்பாணத் தமிழர்கள் புத்தர் சிலைகளை வரவேற்றால் என்ன?

தமிழ்நாட்டு விநாயகர் ஊர்வலங்களை முஸ்லிம்களே நடத்த வேண்டுமாம், சொல்வது யார்? சகிப்புத் தன்மை என்றால் என்னவென்றே தெரியாத இலங்கையர் ஒருவர். ஒரே நாளில் 10, 000 முஸ்லிம்களை துண்டக் காணோம் துணியைக் காணோம் என விரட்டிவிட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இன்று சகிப்புத் தன்மைக் குறித்து தமிழ்நாட்டவருக்கு பாடம் சொல்லித் தருகிறார்.

நான் கேட்கிறேன் இலங்கையில் வாழும் தமிழர்கள் புத்தர் சிலைகளை அமைதியோடு ஏற்றுக் கொண்டு சிங்கள பெரகராக்களில் பங்கேற்க கூடாது.  வட கிழக்கு முழுவதும் பௌத்த ஊர்வலங்களை வரவேற்க கூடாது? யாழ்ப்பாணத் தமிழருக்கும் புத்தருக்கும் என்ன பகை ஒரு பகையும் இல்லையே. அவ்வாறு இருக்க ஏன் யாழ்ப்பாணத் தமிழர்கள் புத்தர் சிலைகளை எதிர்க்கின்றனர். காரணம் ! அங்கே புத்தர் சிலைகள் வெறும் சிலைகள் மட்டுமல்ல, அது அரசியல் ஆதிக்கத்தின் குறியீடு. இதே தான் தமிழகத்தில் நடக்கின்றன. தமிழக விநாயகர் சிலைகள் மற்றும் ஊர்வலங்கள் என்பவை இந்துத்வா அரசியல் ஆதிக்கத்தின் குறியீடு.

தமிழகத்தில் எத்தனையோ திருவிழாக்கள், ஊர்வலங்கள் நடக்கின்றன. எங்காவது கலவரங்கள் ஏற்பட்டதுண்டா. குறைந்தது சலசலப்போ, கைக்கலப்போ நடந்திருக்கின்றதா, கிடையாது. ஆனால் ஒவ்வொரு முறையும் நடத்தப்படும் விநாயகர் ஊர்வலங்களில் எதாவது ஒரு அசம்பாவிதமும், கலவரமும் வெடித்து விடுகின்றது. ஏனிந்த முரண் என்பதை சிந்தித்துப் பார்ப்பதோடு,  முதலில் தமிழகத்துக்குள் மூக்கை நுழைத்து நோண்டுவோர் இங்குள்ள சமூக - அரசியலை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள் சாதிய சகிப்புத் தன்மை இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் மதச் சகிப்புத் தன்மை நிறையவே இருக்கின்றது. காரணம் எவரையும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்  தமிழக மக்களுக்கு நிறையவே உள்ளது. வந்தோரை அரவணைத்து வாழ வைப்பதில் தமிழ்நாடு போல ஒரு நாடும் இருக்க இயலாது.

தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் சமயம் இந்து சமயமே. 90% பிறப்பால் இந்துக்களே. 6% கிறித்தவர்கள். 4% முஸ்லிம்கள். இந்திய மாநிலங்களிலேயே மதச் சிறுபான்மையினர் குறைவான சதவீதம் உள்ள மாநிலம் தமிழகம் என்ற போதும், ஆரம்பம் முதலே மதச் சிறுபான்மையினருக்கு எவ்வித கேடும் செய்யாத மாநிலம் இது.

அத்தோடு மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் இங்குள்ள மதச் சிறுபான்மையினர் பலரும் மதம் மாறியோர்கள் தான். அதனால் ஏனைய தமிழ் சமூகத்தின் கலாச்சார அம்சம் மதச் சிறுபான்மையோரிடம் நிறையவே காணப்படுகின்றன. வேட்டி, சேலை உடுத்தல். மலர் சூடுதல். மாலையிடுதல் என முதற்கொண்டு உணவுப் பழக்க வழக்கங்கள் என அனைத்துமே ஒற்றுமையானவை. 
 
தமிழகத்தில் மதச் சகிப்புத் தன்மைக்கு முக்கிய காரணம் இங்குள்ள அனைத்து மதச் சமூகங்களிலும் காணப்படும் சமதர்ம சகிப்புத் தன்மை மிக்க மிதவாத எண்ணமுடையோர் அரசியல் வழிநடத்தி வருவதும் கூட. மத பயங்கரவாதங்களை ஊக்குவிக்க வல்ல வைதிகக் கோட்பாடுகளையும், கட்டுப்பாடான மத ஆச்சாரங்களை பின்பற்றும் குழுக்களும் இங்கு மிக மிக குறைவு.

மத ஆச்சாரங்களை வலிய திணிக்க நினைக்கும் பார்ப்பனியர்கள், உயர்சாதி பார்ப்பன அடிவருடிகளின் அரசியல், சமூக ஆதிக்கத்தை இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே இடதுசாரிகள், திராவிட அரசியல் சித்தாந்தவாதிகள் நிலைகுலையச் செய்ததோடு. மதச் சிறுபான்மையினோரை அடித்து துன்புறுத்தி அரசியல் செய்யும் போக்கு இங்கு கிடையாது. 
 
உலகின் பல பாகங்களிலும், ஏன் இந்தியாவின் பல இடங்களிலும் மதச் சிறுபான்மையினரை துன்புறுத்தி பகைமை வளர்த்து அதன் மூலமாக ஒன்றுபட்ட மக்களை  பிளவடைச் செய்யும் அரசியலே நடந்தேறி வருகின்றது. ஆனால் அதற்கான தேவை இங்கு ஒரு போதும் எழுந்ததில்லை. பெரும்பாலான தமிழ்நாட்டு இந்துக்கள் வைதிக நெறிமுறைகளை பின்பற்றுவோர் கிடையாது. ஆச்சாரங்களை இறுக்கிப் பற்றிக் கொண்டு மதி மயங்கியோர் கிடையாது. அதே போல பெரும்பாலான 
 
முஸ்லிம்கள், கிறித்தவர்கள் இங்கு இந்துக்களோடு இரண்டற கலந்தும் உள்ளார்கள். ஒரு சில தலைமுறைக்கு முன் வரையும் ஆகமம் சாராத நாட்டுப்புறத் தெய்வங்களே இந்து மதத்தில் ஆதிக்கம் செலுத்தியது. பூஜை, புனர்காரியங்கள், வைதிகம், லொட்டு லொசுக்கு எல்லாம் பெரும்பான்மை தமிழர்கள் அறியாதவை கவலைப்படாதவை. எல்லாக் கடவுளையும் ஏற்றுக் கொண்டார்கள். சிவனையும், ராமரையும், கண்ணனையும், விநாயகரையும், ஏசுவையும் கூட கடவுளாக வணங்கத் தொடங்கினார்கள்.
 
வரலாற்றுக் காலந்தொட்டே இங்கு மதக் கலவரங்கள் அரங்கேறியது மிக மிக குறைவு. இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதோ, பாகிஸ்தான் பிரிவினையும் போதோ, இங்குள்ள முஸ்லிம்களோ, கிறித்தவர்களோ இரண்டந்தரமாக நடத்தப்பட்டதும் இல்லை. அவர்களும் இந்துக்களை பகைவர்களாக கருதியதும் இல்லை. 
 
தமிழகத்தில் எத்தனையோ மத ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடக்கின்றன. சொல்லப் போனால் பல மத ஊர்வலங்களில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் கூட பங்கேற்கின்றனர். அதே போல சந்தனக்கூடு ஊர்வலங்களில் இந்துக்கள் பங்கேற்கின்றனர். மாதாக் கோவில் திருவிழாக்களில் கிறித்தவர்களை விட இந்துக்களின் பங்கேற்பே அதிகம். நாகூருக்கும், வேளாங்கண்ணிக்கும் போகாத இந்துக்கள் இல்லை. ஐயப்பன் கோவிலுக்கும், முருகனையும் வழிபடும் பல கிறித்தவர்கள் உண்டு. பல கோவில்களின் புனரமைப்புக்கு பொருள் உதவி செய்த இஸ்லாமிய பெரியவர்கள் எக்கச்சக்கம் உண்டு. 
 
இவை எல்லாம் எப்போது நிலைகுலையத் தொடங்கியது தெரியுமா. 1975-களுக்கு பின்னர் இந்துத்வா அரசியலை பின்பற்றுவோர் இங்கு மெல்ல மெல்ல நுழைந்த போது தான். குறிப்பாக தமிழகத்தில் திராவிட அரசியலால் பலமிழந்த பார்ப்பனர்கள் மற்றும் சில பார்ப்பனிய மயமான அரசியல்வாதிகள் தமது அரசியல் செல்வாக்கை தக்க வைக்க, இந்துத்வா சக்திகளை கொண்டு வந்தனர். சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றோர் முதற்கொண்டு சங்கராச்சாரியார்கள், பல பார்ப்பனிய பத்திரிக்கையாளர்கள் என பலரும் இந்துத்வா சக்திகளை இங்கு நுழைத்தன. 
 
ஆன போதும் இன்றளவும் இவர்களால் பெரும்பான்மை மக்களின் மனதைக் கரைக்க முயலவில்லை. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு முன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வாவர் பள்ளியை உடைத்த பாஜக, அதன் பின் கலவரங்களையும் தூண்டி விட்டன. இதனால் இதன் எதிர்வினையாக பல இஸ்லாமிய பயங்கரவாத சக்திகளையும், கடும்போக்கு அமைப்புக்களையும் உசுப்பிவிட்டன. 
 
தமிழகத்தின் முதல் மதக் கலவரம் எவ்வாறு தொடங்கப்பட்டது என்பதை சிந்தித்துப் பாருங்கள். 1982-யில் நாகர்கோவிலில் கிறித்தவ நாடார்கள் நடத்திய கிறித்தவ விழாவுக்கு பங்கம் ஏற்படுத்தவே கிறித்தவர்கள் அதிகம் வசித்த பகுதியில் விநாயகர் சிலையை நிறுவியதோடு, அங்கு முறுகல் நிலையையும் இந்துக் கட்சியினர் ஏற்படுத்தினர். 
 
இதனைத் தொடர்ந்து மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவிலில் இந்துக் கட்சியினர் இந்துப் பெண்களை கிறித்தவர்கள் கேலி செய்ததாக வதந்தியைக் கிளப்பிக் கலவரத்தைத் தூண்டியதால் ஏற்பட்ட கலவரத்தில் ஆறு பேர் இறந்தனர். இது குமரி முழுவதும் பரவத் தொடங்கியதால் ஏற்பட்ட பீதி நிலையை குமரியில் இருப்போர் மறந்திருக்க மாட்டார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்கள், கிறித்தவர்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்த மக்கள் இடையே என்று விநாயகர் புகுந்தாரா அன்றே கலவரங்களும் புகுந்தன. 
 
அன்று முதல் இன்று வரை விநாயகர் ஊர்வலங்களால் கலவரம் கொள்ளாத சம்பவங்களே கிடையாது. மிடாலம், முத்துப்பேட்டை, ஊட்டி என கிறித்தவர்கள், முஸ்லிம்கள், தலித்கள் வாழும் பகுதிகளை எல்லாம் குறி வைத்து கலவரம் உண்டாக்குவதையே இந்துத்வாக் குழுக்கள் செய்து வருகின்றனர். 
 
இத்தகைய வெறுபேற்றலுக்கு பின்னரே அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இஸ்லாமிய மதாபிமான சக்திகளை உசுப்பிவிட்டு ஒன்றிணையச் செய்தது. கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் மத அதிபயங்கரவாத சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதுக்கு இந்த விநாயகர் ஊர்வலங்களும் ஒரு காரணமே. ஆரம்பகாலங்களில் ஊருக்குள் நடக்கும் சிறு சிறு கோவில் திருவிழாக்களைத் தவிர மாநில அளவில் எந்தவொரு ஊர்வலங்களும் நடத்தப்படுவது இல்லை. ஆனால் இந்து மக்கள் கட்சி போன்றவர்கள் வடநாட்டில் இருந்து இத்தகைய ஊர்வலங்களை ஏற்பாடு செய்தனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விநாயகர் சிலையை வைப்பது, வேண்டும் என்றே மைக் செட் போட்டு பலரது தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுப்பது தான் இவர்களின் முழு நோக்கமே.
 
அதிலும் இந்த இந்து இயக்கங்களின் முக்கிய பணி என்ன தெரியுமா? எந்தெந்த ஏரியாவில் சிறுபான்மை மக்கள் அதிகம் உண்டோ அங்கு தான் பிள்ளையார் சிலையை வைப்பார்கள், வைப்பதோடு மட்டுமின்றி பள்ளிவாசல் தொழுகை நேரங்களில், தேவாலய வழிப்பாட்டு நேரங்களில் ஒலிபெருக்கியில் பகீர் பாடல்களை போடுவது இந்துக்களுக்கே வெறுப்பை ஏற்படுத்தும். 
 
நாங்கள் பள்ளியிக் படிக்கும் காலத்தில் இந்த விநாயகர் சதுர்த்தி தொடங்க ஒரு மாதம் முன்னரே சிலையை வைத்து ஒலிபெருக்கியில் காலை 6 உதல் இரவு 12 வரை சத்தம் போடுவார்கள். இதனைத் தட்டிக் கேட்டால் பலரும் சண்டைக்கு வருவார்கள். இந்து கட்சியில் இந்த நிகழ்வுகளை நடத்துவோரது பலரது எண்ணம் ஏனைய கட்சிகள், அமைப்புக்களை விட தாம் பலசாலிகள் என காண்பிப்பதே ஆகும். சில இடங்களில் கட்டாய வசூல் எல்லாம் நடக்கும். 
 
ஊர்வலங்கள் கொண்டு போகும் போது பல பகுதிகளில் வேண்டும் என்றே சிறுபான்மைத் தமிழர்கள் வசிக்கும் பகுதி ஊடாகப் போவார்கள். முஸ்லிம் பள்ளிவாசல்கள் முன் செல்லும் போது பட்டாசு வெடிப்பது, கல் எறிவது என்பதாக தொடங்கும் இது பின்னர் கலவரமாக மாற்றமடையும். நல்ல வேளையாக வட நாட்டில் நடந்தது போல பெரும் கலவரங்கள் இங்கு ஏற்படவில்லை, அதற்கு காரணம் இருசாராரில் உள்ள பொதுமக்கள் பலரும் சகிப்புத்தன்மையோடு இருப்பதே. 
 
தமிழகத்தில் எத்தனையோ கோவில் திருவிழாக்கள் நடக்கின்றன. ஏன் ஆடி மாதம் கஞ்சி ஊற்றுவது கூட நடக்கும். பல கஞ்சி ஊற்றல், கூழ் ஊற்றலில் பந்தல் கூட கட்டிக் கொடுக்கின்றனர் இஸ்லாமிய பெருமக்கள். எங்குமே கலவரங்கள் வெடிப்பதில்லை. ஏன்? சில ஊர்களில் சில கோவில்களின் காரியகர்த்தர்களாகக் கூட முஸ்லிம்களும், கிறித்தவர்களும் உள்ளனர். பல பள்ளிவாசல், தேவாலயங்களின் புரவலர்களாக இருப்பதும் இந்துக்கள் தான். 
 
முக்கியமாக சிறுபான்மைத் தமிழர்கள் அதிக சதவீதமாக இருக்கும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தஞ்சை, நாகை, கோவையின் சில பல பகுதிகளில் மதக் கலவரங்களைத் தூண்டி அதன் மூலம் பகைமைகளை வளர்த்து சிறுபான்மை பெரும்பான்மை பிளவை ஏற்படுத்தி அதில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கவே இந்துக் கட்சிக்கள் , இஸ்லாமிய இயக்கங்கள் பலவும் முயன்று வருகின்றன.
 
எப்படி இலங்கையில் தமிழர் பகுதியில் புத்தர் சிலைகளை வைத்து கலவரங்களை உண்டாக்குகின்றனரோ சிங்கள இனவாதிகள். அத்தகைய செயல்களைத் தான் பிள்ளையார் சிலைகளை வைத்து உண்டாகக் முயல்கின்றனர் இந்துத்வாவாதிகளும். இத்தகைய பிணக்க முயற்சிகளால் வளர்ந்து வரும் ஏனைய வகாபிய பயங்கரவாதிகளுக்கு இஸ்லாமிய மிதவாதிகளை பயங்கரவாதிகளாக்க ஏதுவாக அமையும். 
 
அதே சமயம், இந்த விநாயகர் ஊர்வலங்களில் தலித்களை பங்கேற்க எந்த மதவாத அமைப்பாவது அனுமதிக்கின்றதா கிடையாது. குறைந்தது தலித்கள் வாழும் பகுதிகளாவது போகின்றதா கிடையாது. விரும்பி வந்தாலும் தலித்களை ஏற்க மறுக்கின்ற இந்த அமைப்புக்கள், விரும்பாவிட்டாலும் வேண்டுமென்றே சிறுபான்மைத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரவேசித்து கலவரங்களை உண்டாக்க மட்டுமே முனைகின்றனர். 
 
இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் பரஸ்பர விழாக்களில் பங்கேற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். பங்கேற்போரை தடுக்கவோ, பங்கேற்காதோரை வற்புறுத்தவோ, அறிவுரை நல்கவோ நமக்கு உரிமைகள் இல்லை. மக்கள் அமைதியாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டுமானால். விநாயகர் ஊர்வலங்கள் போன்ற கோவில் சாராத திருவிழா ஊர்வலங்களை முற்றாக தடை செய்வதோடு, சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் இவர்கள் ஊர்வலங்கள் போவதற்கு தடை வைக்க வேண்டும். 
 
தமிழகத்தில் விநாயகர் சிலைகள் ஊடாக இந்துத்வ ஆதிக்கத்தை ஆகமம் சாராத நாட்டுபுறத் தெய்வ வழிபாடு கொண்ட இந்துக்கள் மீது திணிப்பதோடு, இதர மதச் சிறுபான்மையிரோடு வம்புக்கு போவதையும் செய்து கொண்டிருக்கின்றனர். அதே சமயம் ! எந்தவொரு இந்துத்வ கட்சிகளின் விநாயகர் ஊர்வலங்களிலும் தலித்கள் வெளியே தான் வைக்கப்படுகின்றனர். 
 
ஆக !  மொத்தம் பல சாதி, பல சமய மக்களை ஒற்றுமைப் படுத்த அல்ல, மக்களை சாதி, சமயங்களாக பிரித்து அடித்துக் கொள்ளச் செய்வதே தொந்தி விநாயகர் ஊர்வலங்களின் அடிப்படை உள்நோக்கமாக இருக்கின்றது. இதனால் தான் எந்தவொரு மாற்று சமய மக்களும், சமதர்ம சமயிகளும், நாத்திகர்களும், மதச்சார்பற்றவர்களும் இந்த ஊர்வலங்களில் கலந்து கொள்வதும் இல்லை, ஆதரிப்பதும் இல்லை. 
 
கலவரங்களை மட்டுமே தூண்டும் நோக்கோடு சிறுபான்மைத் தமிழர்களை குறி வைத்து செயல்படும் இத்தகைய சமூக விரோதிகளுக்கு பந்தம் பிடிக்க கடல் கடந்து குரைத்துக் கொண்டு சில பதிவர்கள். புண்ணாக்குக்கள் !!! 
 
யானைக்கு மதம் பிடித்தால் பேரழிவு நிச்சயம், அந்த யானையின் திருவுருவான விநாயகரை முன் வைத்து மனிதர்களுக்கு மதம் பிடித்தால் மாபெரும் அழிவு தான் மிஞ்சும். 
 
தமிழகத்தில் அண்மையக் காலமாக திராவிட அரசியல் நீர்த்து வருவதால், அந்த வெற்றிடத்தை கைப்பற்றிக் கொள்ள இந்துத்வா மற்றும் இதர மதம் சார்ந்த சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல வெளிநாட்டில் இருந்து தேச விரோத சக்திகள் ஆதரவு நல்கத் தொடங்கியுள்ளன. 
 
இல்லாவிடின் தமிழகமும் இன்னொரு உத்தரபிரதேசமாகவும், கஷ்மீராகவும் ஏன் இன்னொரு இலங்கையாகவும் மாறிவிடக் கூடும். அந்தளவுக்கு வன்மத்தை வளர்த்துவிட்டு நமது நல்வாழ்க்கையையும், வளர்ச்சியையும் வீணடிக்கக் கூடாது.

மிக முக்கியமாக கிறித்தவர்கள், முஸ்லிம்கள், பழங்குடிகள், தலித்கள் ஆகிய சிறுபான்மைத் தமிழர்கள் ஒரேக் கூரைக்குள் இணைந்து தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முயல்தல் மிக மிக அவசியம். இந்த ஒன்றிணைதலில் தமிழக மதச்சார்பற்றோர்கள், மிதவாதிகள், மத நம்பிக்கையற்றோர், இடதுசாரிகள், மனித்ததுவ யுக்திவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத அதிபயங்கரவாத போக்குடையோரை ( இந்துத்வா, வகாபிகள், எவாஞ்சலிசவாதிகள் போன்றோரை ) முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 
 
http://www.kodangi.net/2014/09/in-the-name-pf-vinayaka-.html

Other News
1. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..! - S Peer Mohamed
7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ! - S Peer Mohamed
9. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
11. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
12. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
13. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
16. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
17. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
24. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
30. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..