பைதுஸ் ஸலாம் சமுதாய கூடம்

Posted by Haja Mohideen (Hajas) on 12/17/2014 3:35:30 AM

 

உங்கள் காலம் கடந்தும் உங்கள் நிலையான தர்மம் பலன்தர:

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. 
நிலையான தர்மம், 
பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, 
தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி

வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம். நல்ல வற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 272)

3666. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து 'அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)' என்று அழைக்கப்படுவார்.

2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.

9:99. கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

2:274. யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

https://www.facebook.com/groups/baithussalam/permalink/758868300848556/

ஹஸன் ஷேக்'s photo.
ஹஸன் ஷேக்'s photo.
ஹஸன் ஷேக்'s photo.
ஹஸன் ஷேக்'s photo.
ஹஸன் ஷேக்'s photo.
 

 

பைத்துஸ்ஸலாம் "சமுக நலக்கூடம்" நல்ல முறையில் கட்டிமுடித்திட அல்லாஹ் அருள்புரிவானாக...

பைத்துஸ்ஸலாம் முஹல்லாவாசிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

 

பைதுஸ் ஸலாம் "சமுதாய கூடம்" அடிக்கல் நாட்டிற்கு கலந்துகொள்ள வந்த சகோதரர்கள் .....

பைதுஸ் ஸலாம் சமுதாய கூடம் அடிக்கல்லில் முதல் கல் :ஜனாப்.ஹாஜி சிட்டி கோல்ட் முஸ்தபா அவர்கள்,இரண்டாவது கல்:முத்தவல்லி ஜனாப்:ஹாஜி புஹாரி அவர்கள்,மூன்றாவது கல் :இமாம் ஹாஜா முஹைதீன் அவர்கள்,நான்காவது கல்:கேப்டன் ஜனாப்:மீரா சாஹிப் அவர்கள்,ஐந்தாவது கல் :மறைந்த கனி ஹாஜியார் அவர்கள் நினைவாக ஜனாப் பக்ருதீன் அவர்கள்.

https://www.facebook.com/groups/baithussalam/permalink/758842520851134/

 

  • Masoor Salahudeen My prayer for early smooth completion of the community hall.
     
  • Haja Sheik Misbaahi யாரு பிறமதத்தவர்களின் கலாச்சாரங்களை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே என நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)
     
  • Si Sulthan எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இந்த சமுதாயகூடம் விரைவாக வளர்ந்து, நமது சமுதாய மக்களுக்கு சிறப்பாக பயன்தர பிரார்த்திக்கிறேன்.
     
  • Si Sulthan அது ஒருபக்கம் இருக்கட்டும், சமுதாய கூடம் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் கிடையாதா சகோதரர் ஹாஜா சேக் அவர்களே??
     
  • Masoor Salahudeen மார்க்கம் வேறு கலாச்சாரம் வேறு. இரண்டையும் முடிச்சி போடுவது அதீதம்.
     
  • Ameer Buhary Buhary Alhamthulilla
     
  • Arif Faizi Ithu eppadi matru matha kalacaram ahum kaqbavai kattampothu adikal nattum visayathil enna nadanthatu? Nabi(sal) avarhal kalathil
     
  • Arif Faizi Enakku itharkku vilakkam kodungal thavarha kettuirunthal mannikkaum
     
  • Azeez Afridha அஸ்ஸலாமுஅலைக்கும். சகோதரர் சலாஹூதீன் அவர்கள் கூறுகிறபடி மார்க்கம் வேறு கலாச்சாரம் வேறு என்பது முற்றிலும் தவறானது. கலாச்சாரம் முற்றிலும் மார்க்கத்துடன் ஒற்றுப்போவதைதான் இஸ்லாம் சொல்கிறது.இரண்டும் முரண்டிருப்பதை ஒருபோதும் இஸ்லாம் விரும்பாது. அல்லாஹ்வின் கிருபையால் community hall விரைவாக பூர்த்தியடைய துஆ செய்யும் Latheef appa .
     
  • Si Sulthan இவர் கல்லெடுத்து வைத்தால் கட்டிடம் வளரும் என்று நம்பிக்கை வைத்தால் அது மார்க்கத்துக்கு முரண்படலாம். ஊர் நலனில், முகல்லா நலனில், சமுதாய நலனில் தங்கள் செல்வத்தையும், உழைப்பையும் செலவிடுபவர்களை , ஒரு மரியாதைக்காக முதல் கல்லை நீங்கள் எடுத்து வையுங்கள் என சொல்வதில் இஸ்லாத்தில் என்ன முரண்பாடு வந்தது?
     
  • Peer Mohamed எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கருணையினால், பைத்துஸ்ஸலாம் சமுதாய கூடம் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிந்து, அது சமுதாய மக்களுக்கு பலன் தர பிரார்த்திப்போம்.
     










Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..