Home >> News >> Detail
  Login | Signup  

மது மண்! நமது நீர்! நெருங்கி வரும் பேராபத்து!!!!!!!

Posted by S Peer Mohamed (peer) on 12/19/2014 1:39:07 AM

நமது மண்! நமது நீர்!

நெருங்கி வரும் பேராபத்து!!!!!!!

தாரை வார்ப்போமா?
தடுத்து நிறுத்துவோமா?

ஏர்வாடியில் மக்கள் பணியாற்றும் சமூக அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு.........

நமது ஏர்வாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகிற்கும், வளத்திற்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகத் திகழ்வது, நம் அருகில் அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையும், அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் நீரும்தான் என்பதை நாம் அறிவோம்.

நமது ஆறு, குளம், ஏரி, கண்மாய், டேம் என அனைத்தும் மேற்குத்தொடர்ச்சி மலை தரும் நீரால் தான் நிரம்புகிறது.

இது இறைவன் நமக்கு அளித்த பெரும் அருட்கொடை.

பொது நன்மைக்குறிய வளமாகவே இருக்க வேண்டிய தண்ணீர், இன்று,
சந்தைப் பொருளாக, பொருளாதாரத்தைப் பெருக்கும் போகப் பொருளாக மாறிப்போனதன் விளைவு,
ஆறு, குளம், கண்மாய், நிலத்தடிநீர் என பல நீர் ஆதாரங்கள் அலங்கோலப்படுத்தப்பட்டும், சில இடங்களில் இவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டும் விட்டது.

இந்த வரிசையில் நமது பகுதியின் மிக முக்கியமான நீர் ஆதாரமாகத் திகழும் கொடுமுடியாறு அணையும் இடம்பெறும் நிலை உருவாகி இருப்பது,
நமது பகுதியின் வளத்திற்கும், நம் விவசாயிகளின் வாழ்விற்க்கும் விடப்பட்ட சவாலாகும்.

நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய இரு தாலுக்காகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஜீவனாக இருப்பது கொடுமுடியின் தண்ணீர் தான்.

இவ்வருடம் பெய்த நல்ல மழையால்,
பல ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய நமது கொடுமுடியின் தளும்பும் தண்ணீரைப் பார்த்து மகிழாத உள்ளங்கள் நம் பகுதியில் உண்டா?

நீரால் நிறைந்தது டேம் மட்டுமா?
நம்முடைய ஒவ்வொருவரின் உள்ளங்களுமல்லவா மகிழ்ச்சியால் நிறைந்தது.

இந்நிலையில்..
ஏழை விவசாயிகளின் தாகத்திற்கும், விவசாயத்திற்கும் மூலதனமாக இருக்கும் நமது நீர்,
பாட்டில்களில் அடைக்கப்பட்டு எங்கோ விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே இரத்தம் கொதிக்கிறது.

நம் வளங்களெல்லாம், அளவுக்கு மீறி பணம் கொழிக்கும் எவரோ ஒருவரின் பணங்களை மேலும் மேலும் கொழிக்க வைக்க,
நம் மண்ணின், நம் விவசாயிகளின் வளமும், வாழ்வும் பலிகடாவாக்கப்படுவதை நாம் அனுமதிக்கலாமா?

நம் மாவட்டத்தின் ஜீவ நதியாம் தாமிரபரணியில் கை வைத்தார்கள் கார்ப்பரேட் முதலைகள்.

அதன் விளைவு: இராட்சதக் குழாய்கள் மூலமாக இன்று நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் லிட்டருக்கும் அதிகமானத் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

நம் தாமிரபரணியின் இயற்கையான தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

எப்போதும் தண்ணீர் ஓடும் தாமிரபரணிக்கே இவர்களால் இந்நிலை என்றால்...
எப்போதாவது மட்டுமே நீர் நிரம்பும் நமது கொடுமுடியும்,
அதையே நம்பியுள்ள நமது குளங்கள் மற்றும் கால்வாய்களின் நிலை என்ன ஆவது?

சிந்தியுங்கள்!

மாறி வரும் பருவநிலைகள்,
அழிந்து வரும் விளைநிலங்கள்,
வற்றிவரும் கிணறுகள்,
உருக்குலைந்து வரும் குளங்கள்,
குறைந்து வரும் நிலத்தடிநீர்
-இவ்வாறு நிலமை சென்று கொண்டிருக்க, நமது பகுதியின் எதிர் காலத் தலைமுறையின் தவிக்க முடியாத நீர் ஆதாரமாகத் திகழவிருப்பது நிச்சயம் கொடுமுடியாகத்தான் இருக்கும்.

தண்ணீர் கம்பெனிக்கு அதை தாரைவார்த்து விட்டால், அது நாளைய நம் தலைமுறையை நாமே சாகடிப்பதற்க்குச் சமமானது.

இயற்க்கையை நேசிக்கும் நெஞ்சங்களே!
சமூக அக்கறையுள்ள உள்ளங்களே!
மண்ணின் மைந்தர்களாகிய சிங்கங்களே!
எவன் நிலத்துத் தண்ணீரை எவன் விற்பது?

நீரை இழந்து,
விளைநிலங்களை இழந்து,
இதனால் நிம்மதி தொலைந்து
நாளைய நம் தலைமுறை நம்மைக் காரி உமிழ வேண்டுமா?

நம் பகுதியிலுள்ள அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், சமூக நலக்கூட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கினைந்து செல்படவேண்டிய தருணம் இது.

ஏற்கனவே வள்ளியூர் கம்யூனிஸ்ட் தோழர்கள் இதற்கான போராட்டத்தை துவக்கிவிட்டனர்.

ஒவ்வொரு தாமதமும் இழப்புகளுக்கே இடமளிக்கும்.
எனவே தாமதிக்காமல்,
இதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அனைவரும் ஒன்றினைந்து மேற்கொண்டால் மட்டுமே நம் நீரை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

நமது மண்! நமது நீர்!
தக்க வைப்போமா?
தாரை வார்ப்போமா?

குறிப்பு:
இது பற்றிய விழிப்புணர்வை நமது பகுதியில் முதன்முதலில் மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது வள்ளியூர் முகநூல் குழுவினர்தான். இந்த புகைப்படங்களில் சிலதும் வள்ளியூர் முகநூல் குழுவில் எடுக்கப்பட்டவைதான். அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி: நெல்லை ஏர்வாடி அழகும் வளமும்

 


நேற்றைய பேருராட்சி மன்றகூட்டத்தில்,கொடுமுடியாறு தண்ணீர் கம்பெனி போன்ற, நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தவும் ,ராட்சச ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி அளிக்ககூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

 


Other News
1. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
2. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
3. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
4. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
5. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
6. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
7. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
8. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
9. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
10. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
11. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
12. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
13. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
14. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
15. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
16. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
17. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
18. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
19. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
20. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
21. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
22. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
23. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
24. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
25. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
26. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
27. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
28. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
29. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
30. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..