Home >> News >> Detail
  Login | Signup  

வரி கேட்கும் மத்திய அரசுக்கு ஒரு சகோதரனின் ஆதங்க கேள்விகனைகள்

Posted by Haja Mohideen (Hajas) on 5/10/2015 7:42:12 AM

 

வரி கேட்கும் மத்திய அரசுக்கு ஒரு சகோதரனின் ஆதங்க கேள்விகனைகள்....

எங்களுக்கு இலவச பாஸ்போர்ட் கொடுத்தாயா....?

இல்லை வெளிநாட்டு வேலைக்கு விசா வாங்கி கொடுத்தாயா ...?

இல்லை நாங்கள் நகைகளை,வீட்டு பத்திரத்தை 
அடகு வைத்து,கடன் வாங்கி இரண்டு முறை ஏஜெண்டுகளிடம் ஏமாந்து மீண்டும் விசா வாங்கியதால் இலவச விமான டிக்கெட் தான் கொடுத்தாயா...?

இங்கு வந்து ஓசியில் ஒண்டிக்கொண்டு இகாமா(ID card) இல்லாமல் பதுங்கி வாழ்ந்த போது உதவி செய்து இகாமா வாங்கி கொடுத்தாயா...?

இல்லை அடுத்த வேலை சோத்துக்கு காசு இல்லாமல் ஒவ்வொரு ரூமாக சென்று சாப்பாட்டிற்கு அலைந்த போது ஒரு வேலை சோறு வாங்கி கொடுத்தாயா....?

இல்லை பைலை எடுத்துக்கொண்டு தெரு தெருவாக வேலை தேடி அலைந்த போது வேலை வாங்கி கொடுத்தாயா...?

இல்லை வேலை தேடி அலைந்த போது ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்க வழி இல்லாத போது தண்ணீர் வாங்கி கொடுத்து தாகம் தனித்தாயா...?

இல்லை கபில்(Owner / Sponsor) பணம் வேண்டும் என்று எங்களை கொடுமை படுத்திய போது எங்கள் கபிலிடம் பேசி எங்கள் பிரச்சனையை தடுத்தாயா....?

இல்லை எத்தனையோ படித்த இந்தியர்கள் ஆடு,ஓட்டகம் மேய்த்து கொண்டும்,வீட்டு வேலை செய்து கொண்டும்,கட்டிட,விவசாய வேலை செய்து கொண்டும் இருக்கிறார்களே அவர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை வாங்கி கொடுத்தாயா...?

இல்லை எஞ்சினியரிங் படித்து விட்டு இங்கு பெட்ரோல் பம்பில் பெட்ரோல் போடுகிறானே என் இந்திய ஏழை குடிமகன் அவனுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை வாங்கி கொடுத்தாயா...?

இல்லை எதோ வந்து விட்டோம் கடனை அடைத்து விட்டு சென்று விடுவோம் என்று ஏக்கத்தில் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறானே அவனது கடனை அடைத்து தாயகம் அழைத்து சென்றாயா...?

இல்லை அரபி தெரியாமல் அரபிகாரனோடு போட்டி போட்டு கஷ்டப்பட்டு உழைக்கிறோமே எங்களுக்கு அரபி எழுத படிக்க கற்று கொடுத்தாயா....?

இல்லை இந்தியாவில் இந்தியர்களிடம் மட்டும் தான் போட்டி போட வேண்டும்,வெளிநாடுகளில் எல்லா நாட்டு மக்களிடம் போட்டி போட்டு உழைக்கிறோமே அதனை நினைத்து பார்த்தாயா....?

இல்லை நாங்கள் உடம்பு சரி இல்லை என்று டாக்டரிடம் அழைத்து செல்ல ஆளில்லாமல் அனாதையாக ரூமில் படுத்து இருந்த போது மருத்துவமனை அழைத்து சென்று மருத்துவம் பார்த்தாயா...?

இல்லை ஊருக்கு வரும் போது இங்கு கடன் வாங்கி அங்கு வருகிறோம்,அங்கு வந்தும் கடன் வாங்குகிறோம்,இங்கு திரும்பி வரும் போதும் கடன் வாங்குகிறோமே அந்த கடன்களை அடைத்தாயா...?

இல்லை பாஸ்போர்ட் தவிர எங்களுக்கு வேறு ஏதாவது ஒரு அடையாளம் உண்டா,அடையாள அட்டை தான் உண்டா அதனை கொடுத்தாயா...?

இல்லை இங்கே நாங்கள் செத்து போனால் கூட ஏன் என்று கேட்க ஒரு நாதி உண்டா,,,நண்பர்களை தவிர, அதற்கு ஒரு ஏற்ப்பாடு செய்து கொடுத்தாயா தூதரகம் மூலம்...?

இல்லை இன்னைக்கே வேலை இல்ல இந்தியா போ என்று சொல்லி விட்டால்,நாங்கள் இந்தியா வந்தால் எங்களுக்கு வேலை வாய்ப்பு உண்டா,வாழ்வு உண்டா...?

இல்லை இப்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக ஒரு துரும்பை கூட கில்லி போடாத போது எப்படி எங்களிடம் இருந்து 12.36% வரி எதிர்ப்பார்க்கலாம், நாங்கள் அனுப்பும் பணத்தில் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கு நீங்கள் அல்லவா எங்களுக்கு வரி தரவேண்டும்.யோசியுங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் சாபத்தை விலை கொடுத்து வாங்காதீங்க,

- முத்துப்பேட்டை முகைதீன்

 

https://www.facebook.com/Relaxplzz/photos/a.346737135376622.94281.346727412044261/943727452344251/?type=1






Other News
1. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
2. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
3. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
4. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
5. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
6. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
7. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
8. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
9. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
10. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
11. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
12. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
13. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
14. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
15. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
16. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
17. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
18. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
19. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
20. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
21. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
22. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
23. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
24. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
25. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
26. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
27. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed
28. 22-12-2019 South Asian students join anti-CAA protests outside Indian mission in London - S Peer Mohamed
29. 22-12-2019 From NYU to University of London, Students Protest CAA in Freezing Cold - S Peer Mohamed
30. 22-12-2019 Indian Diaspora Stage Anti CAA-NRC Protest March In Germany (Video) - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..